search icon
என் மலர்tooltip icon

  விருச்சகம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

  விருச்சகம்

  ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்8.10.2023 முதல் 25.4.2025 வரை

  விருச்சிக ராசி நேயர்களே!

  இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், அக்டோபர் 8-ந் தேதி முதல் 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அதே நேரம் கேது பகவான் லாப ஸ்தானத்திற்கு வருவதால் தொழில் வளம் சிறப்பாகும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.

  பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகும் ராகுவால், புதிய பாதை புலப்படும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டு. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து உற்சாகம் அடைவீர்கள். பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வேலைவாய்ப்பின்றி இருந்தவர்களுக்கு வேலையும், மண மாலை அமையாதவர்களுக்கு திருமணமும் கைகூடும். தெய்வ திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

  லாப ஸ்தான கேதுவின் சஞ்சாரத்தால் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக லாபம் பெறுவீர்கள். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை, முறைப்படி அனுகூலம் தரும் தலங்களில் செய்தால் மேலும் நன்மை கிடைக்கும்.

  குரு மற்றும் சனி வக்ர காலம்

  8.10.2023 முதல் 20.12.2023 வரை மேஷ ராசியிலும், 25.9.2024 முதல் 22.1.2025 வரை ரிஷப ராசியிலும் குரு சஞ்சரிக்கிறார். இந்த வக்ர காலத்தில் கூடுதல் கவனத்தோடு இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு குறையும். கூட்டாளிகளின் மீது நம்பிக்கை ஏற்படாது. அனுபவஸ்தர்களின் ஆலோசனை அவ்வப்போது கைகொடுக்கும்.

  8.10.2023 முதல் 24.10.2023 வரை மகர ராசியிலும், 10.7.2024 முதல் 5.11.2024 வரை கும்ப ராசியிலும் சனி வக்ரம் பெறுகிறார். இந்த சனியின் வக்ர காலத்தில் உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்லுங்கள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. பணவிரயங்கள் அதிகரிக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள்.

  சனிப்பெயர்ச்சி காலம்

  20.12.2023 அன்று கும்ப ராசிக்கு சனி பகவான் செல்கிறார். இக்காலத்தில் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் ஏற்படுகிறது. எனவே எதையும் கொஞ்சம் யோசித்துச் செய்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் கிடைக்கலாம். சனி உங்களுக்கு சகாய ஸ்தானாதிபதி என்பதால், வரும் மாற்றங்கள் நல்ல மாற்றமாகவே இருக்கும். நிலம் வாங்குவது, திருப்பணியில் ஆர்வம் உண்டாகும்.

  குருப்பெயர்ச்சி காலம்

  1.5.2024 அன்று ரிஷப ராசிக்கு செல்லும் குரு, 7-ம் இடத்தில் இருந்து உங்கள் ராசியையும், 3, 11 ஆகிய இடங்களையும் பார்க்கப் போகிறார். வருங்காலம் சிறப்பாக அமையும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாழ்வில் வசந்தம் வரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். திருமண முயற்சி பலன் தரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். தொழில் வெற்றி நடை போடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார நிலை உயரும்.

  பெண்களுக்கான பலன்கள்

  இந்த ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். கணவன் - மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் பணி உயர்வு கிடைக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்.

  வளர்ச்சி தரும் வழிபாடு

  பஞ்சம ஸ்தான ராகுவால் நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நடைபெறவும், லாப ஸ்தான கேதுவால் தொழில் வளம் சிறப்பாக அமையவும், இல்லத்து பூஜையறையில் விநாயகரை வைத்து வழிபடுங்கள்.

  விருச்சகம்

  ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - 2023

  12.4.2022 முதல் 30.10.2023 வரை

  ஆறில் ராகு/பனிரென்டில் கேது

  வீரம் நிறைந்த விருச்சிக ராசியினரே ராசிக்கு 6ல் ராகுவும், 12ல் கேதுவும் 5, 6ம் இடத்தில் குரு பகவானும், சனிபகவான் 3 , 4ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.

  6ம்மிட ராகுவின் பொதுபலன் கள்:6ம்மிடம் என்பது மறைவு ஸ்தானம். பொதுவாக அசுப கிரகங்கள் மறைவு ஸ்தானத்திற்கு வருவது நன்மைதான். அதுவும் உப ஜெய ஸ்தானமான ஆறாம் இடத்திற்கு வரும் அசுப கிரகம் சுபத்துவத்தை அதிகப்படுத்தும். தொட்டது துலங்கும். உங்கள் வாழ்க்கை முன்னேற்றம் பற்றிய கனவுகள் பலிதமாகும். உங்களின் சோதனைகள் சாதனைகளாக மாறும் .ஆன்ம பலம் பெருகும்.

  பல வருடங்களாக தடைபட்ட விஷயங்கள் சுலபமாகவும் விரைவாகவும் நடந்து முடியும். விருச்சிக ராசியினரின் திறமைகளை வெளிக்காட்ட கிடைத்த அரிய சந்தர்ப்பமாக இந்த ராகு/கேது பெயர்ச்சி இருக்கும். உங்களை வம்பில் மாட்டிய எதிரிகள் இருந்த இடம் தெரியாது. நல்ல நம்பிக்கையான வேலையாட்கள் கிடைப்பார்கள். வேலையாட்களால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். மந்தமான தொழில் சூடு பிடிக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு தேவையான கடன் தொகை தாய்மாமன் மூலம் கிடைக்கும். வாழ்க்கைத் தரம் உயரும்.

  உடல் பெருக்கம் ஏற்படும். சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். சகோதர சகோதரி மேல் அன்பு அதிகரிக்கும். வீடு, வாகன யோகம் சிறப்பாக உள்ளது. ராகு மேஷ ராசியில் உள்ள நட்சத்திரப் பாதங்களான கிருத்திகை, பரணி, அசுவினி நட்சத்திரங்களில் மூலம் ராசியை கடக்கிறார்.

  12.4.2022 முதல்14.6.2022 வரை ராகுவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்:

  கிருத்திகை சூரியனின் நட்சத்திரம். சூரியன் விருச்சிகத் திற்கு 10ம் அதிபதி. மன முதிர்ச்சியுடன் விவேகமாக நடந்துகொள்வீர்கள். உங்களின் அனுசரணையான அணுகுமுறை எல்லாரிடமும் நன்மதிப்பைப் பெற்றுத் தரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுபவர்களின் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, கௌரவம் உயரும். கௌரவ பதவி தேடிவரும். தொழில் தொடர்பான அனைத்து முயற்சிகளும் பலிதமாகும். தொழிலில் நிலவிவந்த மந்தநிலை மாறி, தொழிலை விரிவுபடுத்த வாய்ப்பு உருவாகும். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். தொழில் ஆரம்பித்து காலூன்ற முடியாமல் தவித்தவர்களுக்கு தொழில் முன்னேற்றம் திருப்தி தரும்.

  கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த மாற்றுக் கருத்து மறையும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வரலாம். பழைய பங்குதாரர்கள் வெளியேறலாம். நண்பர்களும் பங்குதாரர்களும் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுவார்கள்.

  15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:

  பரணி சுக்ரனின் நட்சத்திரம். சுக்ரன் விருச்சிகத்திற்கு 7,12ம் அதிபதி. சிலருக்கு கலப்புதிருமணம் நடக்கும். சிலரின் மறுமண முயற்சி கைகூடும். வாழ்க்கை துணையால் செலவுகள் அதிகமாகும். சிலருக்கு எதிர் பாலினத்தினரால் மனச்சுமை அதிகரிக்கும். சில தம்பதிகள் வியாபாரம் அல்லது வேலைக்காக குடும்பத்தை பிரிந்து வாழ்வார்கள். சில தம்பதிகளின் விவாகரத்து வழக்கு சாதகமாகும். வெளிநாட்டில் அந்நிய மொழி பேசுபவர்கள் மத்தியில் குடியிருக்கும் நிலை ஏற்படும். சிலர் வயது மூப்பு காரணமாக வீட்டில் தனிமையில் ஓய்வு எடுப்பார்கள். சிலரின் வாழ்க்கை துணை பணியிலிருந்து ஒய்வு பெறலாம். திருமண பட்ஜெட் எகிறும். சம்பந்திகளுக்குள் வரதட்சணை தகராறு அதிகமாகும்.

  21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்:

  அசுவினி கேதுவின் நட்சத்திரம். கோட்சாரத்தில் ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் கேதுவின் நட்சத்திரத்தில் ராகு பயணிக்கும் காலம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பொன், பொருள் பற்று குறையும். ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்கள் கூட எளிமையான உணவு சாப்பிடவும் எளிய உடை உடுத்தவும் துவங்குவார்கள். வெகு சிலர் இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் மனைவி, குழந்தைகள், நண்பர்களின் ஆதரவில் ஜீவனம் செய்ய நேரும். கேது ராசியை கடக்கும் முன்பு உங்களின் மேல் அக் கறை மதிப்பு மரியாதை உள்ளவர் யார் என்பதை புரிந்து கொள்ள கடவுள் வழங்கும் சந்தர்ப்பமாக இதை எடுத்துக் கொண்டு வாழ வேண்டிய காலம்.

  12-ம்மிட கேதுவின் பொதுபலன்கள்:

  12--ம் இடம் என்பது மோட்சம் தனிமை, வெளிநாட்டு வாழ்க்கை, தூர தேசப் பயணம் ஆகியவற்றைப் பற்றிக் கூறுமிடம்.

  மனம் பற்றற்ற நிலையை விரும்பும். எதிர்மறை எண்ணங்கள் சீராகும். தீய, கெட்ட சிந்தனைகள் நீங்கி தெளிவு பிறக்கும். சிலருக்கு தனிமையில் வாழ வேண்டும் என்ற உணர்வு சற்று மிகைப்படுத்தலாக இருக்கும்.மனம் எளிமையை விரும்பும்.சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலர் குறுகிய காலம் வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் மகன் அல்லது மகள் வீட்டிற்குச் சென்று வரலாம். சிலர் பரவச நிலைக்கு அழைத்துச் செல்லும் பக்தி மார்க்க இயக்கத்தில் சேரலாம். சிலர் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு செல்லலாம். சிலருக்கு சொத்து விற்பனையில் இழப்பு உண்டாகலாம். சிலர் ஒப்பந்த வேலைக்காக குறுகிய காலம் பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். திருமண முயற்சிகள் இழுபறியாகும். சிலர் இரண்டாவது தொழில் தொடங்கலாம். பண விஷயத்தில் சற்று நெருக்கடி இருக்கும் அல்லது விரையச் செலவு அதிகமாகும். கேது துலாம் ராசியில் உள்ள விசாகம், சுவாதி, சித்திரை நட்சத்திரங்கள் மூலம் தன் பயணத்தை செலுத்துகிறார்.

  12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்:

  விசாகம் குருவின் நட்சத்திரம். குரு விருச்சிகத்திற்கு 2,5ம் அதிபதி. இதுவரை பங்கு சந்தை பற்றி யோசிக்காதவர்களுக்கு கூட அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் ஏற்படும். சிறிய பங்குச் சந்தை முதலீட்டில் பெரிய லாபத்தை கொடுத்து பெரிய முதலீட்டிற்கு உங்களை தயார்படுத்தி பெரிய இழப்பை சந்திக்கச் செய்வார் என்பதால் பெரிய முதலீட்டை தவிர்க்க வேண்டும். சிலர் பூர்வீகச் சொத்தை விற்பார்கள் அல்லது பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினை உண்டாகும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களுக்கு தொழிலில் திருப்புமுனை உண்டாகும். பிள்ளைகள் கல்வி, உத்தியோகத்திற்காக இடம் பெயரலாம். சிலருக்கு வாலிபக் கோளாறால் தேவையற்ற வம்பு உருவாகும்.

  18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்:

  ராசிக்கு 6ல் சஞ்சரிக்கும் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கோட்சார கேது சஞ்சரிக்கும் காலம் என்பதால் குறுக்கு சிந்தனைய பயன்படுத்தி சம்பாதிக்க வைத்து குறுகிய காலத்தில் அதிகமாக சம்பாதிக்க வைப்பார். பணத்தின் சுவையை அனுபவிக்கும் முன்பு அதை பிடுங்குவார். அல்லது சட்டச் சிக்கலில் மாட்ட வைப்பார். ஒரு சிலருக்கு திடீர் பக்தியை கொடுப்பார். பக்திக்கு பின் பெரிய பதவி ஆசையை புகுத்துவார். பதவியை கொடுப்பார். பதவி எப்பொழுது பறிபோகுமோ என்ற பயத்துடன் பதவியில் பல தவறுகளை செய்து பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவார். இது போன்ற பின்விளைவுடன் கூடிய பலனே கேது வழங்குவார். இது போன்ற காலகட்டத்தில் எது சரி? எது தவறு? என்று பகுத்தாயும் தன்மை மற்றும் நிதானம் இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.

  27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்:

  சித்திரை செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் விருச்சிகத்திற்கு ராசி அதிபதி 6ம் அதிபதி. ராசி அதிபதியின் நட்சத்திரத்தில் கேது செல்வதால் செயல் பாடுகளில் மந்தத் தன்மை, தயக்கம் இருக்கும். சோம்பல், மறதி உருவாகும். உழைக்காமல் உண்ணும் எண்ணம், தேவையற்ற கோபம் வரும். சிலர் கடன் பெற்று வீடு, வாகன யோகம் கிடைக்கப் பெறுவர். சிலருக்கு வீடு, வாகன வகையில் ரிப்பேர் செலவு கையை கடிக்கும். சிலர் ஜாமீன் போட்டு ஏமாறலாம். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.முதலாளி தொழிலாளி கருத்து வேறுபாடுகள் அகலும். நீண்ட நாள் நோய்க்கு அல்லது பரம்பரை நோய்க்கு சிகிச்சை செய்பவர்களுக்கு சிகிச்சை நல்ல பலன் தரும். சட்ட விரோத செயல்களால் சிலருக்கு அரச தண்டனையும் கிடைக்கும்.

  எந்த கிரகங்கள் எங்கு இருந்தாலும் சரி, தெய்வ சக்தியை அடி பணியுங்கள். அனைத்தும் சுபமான மாற்றங்களாகவே இருக்கும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×