என் மலர்tooltip icon

    விருச்சகம்

    2025 பங்குனி மாத ராசிபலன்

    வெற்றியை குறிக்கோளாகக் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே!

    பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் வக்ர நிவர்த்தியாகி தன ஸ்தானத்தை பார்க்கிறார். எனவே பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குருவின் பார்வை உங்களுக்கு பக்கபலமாக இருப்பதால், கல்யாணக் கனவுகள் நனவாகும்.

    தொழில் மற்றும் வியாபாரத்தில் கணிசமான தொகை கைகளில் புரளும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை முழுமையாக நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பர். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும் மாதம் இது.

    மீன - புதன் சஞ்சாரம்

    மாதத் தொடக்கத்தில் மீன ராசியில் புதன் நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியானவர் புதன். அவர் நீச்சம் பெற்றாலும், அஷ்டமாதிபதியாகவும் இருப்பதால் எதிர்பாராத விதத்தில் சில நன்மைகளையும் செய்வார். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பால் முன்னேற்றம் காண்பீர்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் நீங்கள் கேட்ட சலுகைகளை செய்வர். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பிள்ளைகளின் மேல்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    கும்ப - புதன் சஞ்சாரம்

    பங்குனி 4-ந் தேதி புதன், கும்ப ராசிக்கு வக்ர இயக்கத்தில் வருகிறார். உங்கள் ராசிக்கு 4-ம் இடமான சுக ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பது யோகம்தான். தொட்டது துலங்கும். தொழில் வளம் மேலோங்கும். செல்வ வளம் பெருக நண்பர்கள் வழிகாட்டுவர். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு.

    அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு அதிகார பதவி கிடைக்கலாம். தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும் நேரம் இது. பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும். உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும்.

    மீன - சுக்ரன் வக்ரம்

    மீனத்தில் உள்ள சுக்ரன், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். அசுர குருவான சுக்ரன் வக்ரம் பெறுவது நன்மைதான். அவர் புதனோடு இணைந்திருப்பதால் பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். தொழில் வெற்றி நடைபோடும். தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகிச்செல்வர். மண்ணை தொட்டாலும் பொன்னாகும் நேரம் இது. அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு, தலைமை பொறுப்புகள் தானாக வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் வரலாம்.

    கடக - செவ்வாய்

    பங்குனி 24-ந் தேதி கடக ராசிக்குச் செல்லும் உங்கள் ராசிநாதன் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். செவ்வாய் உங்கள் ராசிநாதன் மட்டுமின்றி, 6-ம் இடத்திற்கும் அதிபதியாக விளங்குபவர். எனவே அவர் நீச்சம் பெறுவது ஒரு வழிக்கு நன்மைதான். வளர்ச்சி அதிகரிக்கும்.வாகன யோகம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்த எடுத்த முயற்சி வெற்றிபெறும். வாங்கிய கடனை கொடுத்து மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக நடைபெற்ற பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வளர்ச்சி கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ-மாணவிகளுக்கு தேர்வில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் உண்டு. கூடுதல் வருமானம் திருப்தி தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    மார்ச்: 15, 16, 22, 23, 26, 27, ஏப்ரல்: 7, 8, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    ×