என் மலர்
விருச்சகம்
2025 சித்திரை மாத ராசிபலன்
சொல்லும் சொற்களை வெல்லும் சொற்களாக மாற்றும் விருச்சிக ராசி நேயர்களே!
விசுவாவசு வருட புத்தாண்டின் சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியை குரு பகவான் பார்க்கிறார். எனவே குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப எல்லா வழிகளிலும் நல்ல பலன் கிடைக்கும் மாதம் இது.
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். செவ்வாய் நீச்சம் பெற்றாலும் அது ராசிநாதனாக மட்டுமல்லாமல் அது 6-ம் இடத்திற்கும் அதிபதியாக இருப்பதால் 'விபரீத ராஜ யோக' அடிப்படையில் எண்ணற்ற நல்ல மாற்றங்கள் இந்த மாதம் வந்துசேரும்.
குரு - சுக்ர பரிவர்த்தனை
சித்திரை 1-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை குரு - சுக்ர பரிவர்த்தனை இருக்கிறது. உங்கள் ராசிக்கு 5-ம் இடத்திற்கு அதிபதி குருவும், 7-ம் இடத்திற்கு அதிபதி சுக்ரனும் பரிவர்த்தனை பெறுவதன் மூலம் மிகுந்த நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமை அடைவதால் பூர்வ புண்ணியத்தின் பலனாக, உங்களுக்கு என்னென்னவெல்லாம் கிடைக்க வேண்டுமோ அவை அனைத்தும் கிடைக்கும்.
சொத்து பிரச்சினைகள் சுமுகமாக முடியும். கல்யாண வாய்ப்பு கைகூடும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்து கொடுப்பர். மங்கல ஓசை மனையில் கேட்கும் வாய்ப்பு உண்டு. கடை திறப்புவிழா, கிரகப் பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும்.
கும்ப - ராகு, சிம்ம - கேது
சித்திரை 13-ந் தேதி கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் நலம் யாவும் கிடைக்கும். வளம் யாவும் சேரும். பூர்வீக இடத்தையோ, வாங்கிய இடத்தையோ அதிக விலை கேட்டு வருவர். அதை விற்றுவிட்டு, அதில் வரும் லாபத்தை கொண்டு 'புதிய வீடாக வாங்கலாமா? அல்லது வீடு கட்டி குடியேறலாமா?' என்று சிந்திப்பீர்கள்.தாயின் உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் தேவை. கேதுவின் ஆதிக்கத்தால் உத்தியோகத்தில் இருந்து வெளிவந்து சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். அலைச்சல் கொஞ்சம் அதிகரித்தாலும், ஆதாயமும் கிடைக்கும்.
மேஷ - புதன் சஞ்சாரம்
சித்திரை 17-ந் தேதி மேஷ ராசிக்கு புதன் வருகிறார். 8-ம் இடத்திற்கு அதிபதியான புதன், 6-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். 'விபரீத ராஜ யோக' அடிப்படையில் நீங்கள் நினைக்க இயலாத அளவிற்கு யோகங்கள் வரலாம். 'புத ஆதித்ய யோக'மும் இருப்பதால், கல்விக்காகவோ, கலைத்துறை சம்பந்தமாகவோ நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகார அந்தஸ்த்தை பெறும் வாய்ப்பு உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கொடுக்கல் -வாங்கல் ஒழுங்காகும்.
மிதுன - குரு சஞ்சாரம்
சித்திரை 28-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வருகிறார். அதன் பார்வை பலத்தால் குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். நிதி பற்றாக்குறை அகல, நீங்கள் எடுத்த முயற்சி வெற்றி தரும். நீண்டதூர பயணங்கள் பலன் தருவதாக அமையும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபச் செலவு அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி உண்டு. ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வாசல் தேடிவரும். மாணவ -மாணவிகளுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு பிள்ளைகள் வழியில் சுபச்செய்திகள் வந்துசேரும். நிதி நிலை உயர்ந்து நிம்மதி கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஏப்ரல்: 18, 19, 20, 24, 25, மே: 3, 4, 5, 8, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.






