என் மலர்
தனுசு
வார ராசிபலன் 6.7.2025 முதல் 12.7.2025 வரை
6.7.2025 முதல் 12.7.2025 வரை
மாற்றங்களால் மனம் மகிழும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். சமூகத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் ஏற்படுத்தும். எந்த ஒரு செயலை முடிப்பதற்கும் தாய்-தந்தையின் ஆதரவு கிடைக்கும். தொழில் தொடர்பாக திட்டமிட்ட அனைத்து செயல்பாடுகள் சிறப்பாக நிறைவேறும். இந்த வாரம் செல்லும் நேர்முகத் தேர்வில் வெற்றியும், மன நிறைவான வேலையும் கிடைக்கும்.
வெளிநாட்டு குடியுரிமை, வெளிநாட்டு வேலை சார்ந்த அனைத்து இன்னல்களும் அகலும். வரவேண்டிய பணம் விரைவில் வசூலாக வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல்களில் இருந்த சிக்கல்கள் விலகும். ஆடம்பர விருந்து, உபசாரங்களில் கலந்து மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக நினைத்த சில ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.
நல்ல தகவல்கள் வீடு தேடி வரும். நல்ல ஆடம்பரம், வசதி நிறைந்த வாழ்க்கைத் துணை அமையும். சுபமங்கள நிகழ்விற்கு தாராளமான பணச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தார் ஒத்துழைப்பால் உள்ளம் மகிழும். எதிர் பாலினத்தவரிடம் எச்சரிக்கையாக பழக வேண்டும். வைத்தியம் பலன் தரும். பவுர்ணமி அன்று ஆன்மீக குருமார்களின் ஆசி பெறவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406