என் மலர்tooltip icon

    தனுசு

    வார ராசிபலன் 4.1.2026 முதல் 10.1.2026 வரை

    4.1.2026 முதல் 10.1.2026 வரை

    தனுசு

    முன்னோர்களின் நல்லாசிகள் நிறைந்த வாரம். பாக்கிய ஸ்தான அதிபதி சூரியன் ராசியில் சஞ்சரிப்பதால் தந்தையின் மூலம் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். தந்தையின் ஆசியும் ஆஸ்தியும் கிடைக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தை பலன் தரும். வெளிநாட்டு பயணம் சாதகமாகும். புதிய வாய்ப்புகளால் லாபம் உண்டாகும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவுகளிடம் நிலவிய கவுரவப் போராட்டம் விலகி ஒற்றுமை பலப்படும்.

    வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் மறுமுதலீடாக மாறும். தொழிலில், உத்தியோகத்தில் நிலவிய பிரச்சினைகள் குறையும். திருமணத் தடை அகலும். சொந்த இன, உறவுகளில் வரன் அமையும். 4.1.2026 அன்று காலை 9.43க்கு ஆரம்பித்து 6.1.2026 அன்று பகல் 12.17 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் சில சங்கடங்கள் உண்டாகலாம். எதிலும் சிறப்பாக செயல்பட முடியாது. உடன் இருப்பவர்களால் மனக்குழப்பம், பணியில் சோர்வு ஏற்படும். சனிக்கிழமைகளில் முன்னோர்களை வழிபட குடும்பத்தில் நிம்மதி கூடும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×