என் மலர்tooltip icon

    தனுசு

    வார ராசிபலன் 30.11.2025 முதல் 6.12.2025 வரை

    30.11.2025 முதல் 6.12.2025 வரை

    தனுசு

    எதிர்கால வாழ்க்கை பற்றிய புதிய நம்பிக்கை பிறக்கும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் வார இறுதியில் வக்கிர கதியில் சம சப்தமஸ்தானம் செல்கிறார். திடீர் வருமானம், பெயர், புகழ் என யோகமான நிலை உண்டாகும். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் காணாமல் போவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தினர் தொழிலில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிப்பார்கள்.

    பணவரவு நன்றாக இருக்கும். பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை கண்ணில் காட்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறிய பாதிப்பு தோன்றினாலும் சமாளித்து விடுவீர்கள். ஆன்லைன் வர்த்தகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருமணத் தடை அகலும். வரவு செலவு சீராக இருக்கும்.

    தம்பதிகளிடையே இணக்கமான சூழல் நிலவும். பெண்களுக்கு அழகிய நவீன பொருட்கள் சேர்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபட அனைத்தும் சுப பலன்களும் வந்து சேரும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×