என் மலர்tooltip icon

    தனுசு

    வார ராசிபலன் 21.12.2025 முதல் 27.12.2025 வரை

    21.12.2025 முதல் 27.12.2025 வரை

    தனுசு

    பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சி அடையும் வாரம். ராசியில் உள்ள சூரியன், செவ்வாய், சுக்கிரனுக்கு குரு சனி பார்வை உள்ளது. ராசி அதிபதி குருவின் சம சப்தம பார்வை பாக்கியாதிபதி சூரியனுக்கு கிடைப்பதால் கடந்தகால நெருக்கடிகள் குறையத் துவங்கும். குடும்ப உறவுகளிடம் புரிதல் உண்டாகும். பிணக்குகள் தீரும். சொந்தவீடு, மனை, வாகனம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

    சொத்து விஷயங்களில் இருந்து வந்த வம்பு வழக்குகள் குறையும். கூட்டுக் குடும்பத்தை விட்டுப் பிரிந்த மூத்த சகோதரர் மீண்டும் குடும்பத்தில் இணைவார். அர்த்தாஷ்டம சனியால் எதிலும் பிடிப்பு இல்லாமல் இருந்த உங்களுக்கு சேமிப்பில் நாட்டம் அதிகரிக்கும். எதிலும் வெற்றியே காண்பீர்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.

    எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.தம்பதிகளின் கருத்து வேற்றுமை குறையும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப காரியங்கள் அனுகூலமாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். மகாலட்சுமியை நெய் தீபம் ஏற்றி வழிபட நிம்மதி கூடும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×