search icon
என் மலர்tooltip icon

  தனுசு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

  ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - 2023

  12.4.2022 முதல் 30.10.2023 வரை

  ஐந்தில் ராகு/ பதினொன்றில் கேது

  பாக்கியவான்களான தனுசு ராசியினரே ராசிக்கு 5--ம் இடத்தில் ராகுவும், 11-ம் இடத்தில் கேதுவும் 4,5-ம் இடத்தில் குருபகவானும் 2 ,3-ம் இடத்தில் சனி பகவானும் சஞ்சரிக்கிறார்கள்.

  5-ம்மிட ராகுவின் பொது பலன்கள்:5ம்மிடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம். பூர்வ புண்ணிய பலத்தால் கிடைக்கும் குல தெய்வ அனுகிரகம், குழந்தைகள், அதிர்ஷ்டம், கவுரவப்பதவிகள் ஆகியவற்றைப் பற்றி கூறுமிடம்.

  ஆழ்மனதில் புதிய எண்ணங்கள் கடல் அலை போல் பெருகும். புதிய சிந்தனைகள் மேலோங்கும். உடலில் சோர்வு, அசதி இருக்காது. பருவ வயது பிள்ளைகள் போல் உற்சாகத்துடன் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். மனதில் தைரியம், தெம்பு , உற்சாகம் ததும்பும். எதிர்காலம் பற்றிய மனதில் உள்ள கேள்விகளுக்கு விடை கிடைக்கும் காலம். பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய புதிய திட்டங்கள் முடிவுகள் எடுக்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். தான, தர்மங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.

  வேலைப்பளுவால் நேரத்திற்கு சாப்பிட முடியாது.குழந்தை பேறு உண்டாகும். தந்திரத்தால் இழந்த பதவியை மீட்பீர்கள். சிலருக்கு சமுதாய அந்தஸ்தை அதிகரிக்கச் செய்யும் உயர்ந்த பதவிகள் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தை தொழிலாக கொண்டவர்கள், கல்வி நிறுவனம் நடத்துபவர்கள், புரோகிதர்கள், கன்சல்டிங் நிறுவனங்கள், முக்கிய நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்களின் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும். ராகு மேஷ ராசியில் உள்ள நட்சத்திரப் பாதங்களான கிருத்திகை, பரணி, அசுவினி நட்சத்திரங்களில் மூலம் ராசியை கடக்கிறார்.

  12.4.2022 முதல்14.6.2022 வரை ராகு வின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்:சூரியனின் நட்சத்திரமான கிருத்திகை தனுசிற்கு பாக்கியாதிபதி. தடைபட்ட அனைத்து பாக்கிய பலன் களும் சித்தியாகும் நேரம். ஆத்மஞானம் கிடைக்கும். உடலுக்கும் ஆன்மாவுக்கும் புத்துணர்வு கிடைக்கும் பயிற்சிகளில் ஆர்வம் ஏற்படும். தடைப்பட்ட பிரார்த் தனைகளை நிறைவேற்றுவீர்கள். தந்தை- மகன் உறவு சிறக்கும். தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கும். தொழிலுக்காக குடும்பத்தைப் பிரிந்த தந்தை வீடு திரும்புவார். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் பெற்றோர்கள் இணைந்து குடும்பம் நடத்துவார்கள். இதுவரை வெளிநாடு செல்லாதவர்களுக்கும் வெளிநாடு வாய்ப்பு கிட்டும். குழந்தைகளால் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். அரசு வகை ஆதாயமுண்டு. சிலர் தந்தையின் குலத் தொழிலில் பங்குதாரராக இணைந்து செயல்படலாம்.

  15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:சுக்ரனின் நட்சத்திரமான பரணி தனுசிற்கு 6,11ம் அதிபதி. ஆறாம் அதிபதியின் நட்சத்திரத்தில் ராகு பயணிப்பதால் சிலர் அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு பார்க்கும் வேலையை நழுவ விடுவார்கள். புதிய வேலைக்கான பணி நியமன உத்தரவை வாங்கிய பிறகே பழைய வேலையை விட வேண்டும். சிலர் நரம்பு, வாதம் போன்ற நோய்களின் அறிமுகம் தென்படும். சிலர் புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பார்கள். ஒரு கடன் அடைவதற்குள் மறுகடன் உருவாகும் என்பதால் கவனம் தேவை. உறவினர்கள் வெளிப்பேச்சில் நல்லவர்களாகவும் மனதிற்குள் வஞ்சகம் வைத்தும் பேசுவார்கள். அரசுவழி ஆதாயம் கிடைப்பதில் தடை ஏற்படும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலர் லௌகீக ஆர்வத்தில் இரண்டாவதாக ஒரு குடும்பம் அமைப்பார்கள்.

  21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்:சுவாதி ராகுவின் நட்சத்திரம். கோட்சாரத்தில் லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவின் நட்சத்திரத்தில் கோட்சார ராகு பயணிக்கும் காலம். ஒருவர் தேவையற்ற அவமானம், மனச் சங்கடம், தாழ்த்தப்படுவது போன்றவற்றை சந்திப்பதும் ஏழரைச் சனியின் காலத்தில்தான். கடந்த ஏழரை ஆண்டுகளாக பட்ட வேதனை அவமானம் மாளாத துயரத்திலிருந்து விடுபடுவீர்கள்.

  இந்த காலகட்டத்தில் ஏழரைச் சனியிலிருந்து முழுமையாக விடுபட்டுவீடுவீர்கள் என்பதே உங்களுக்கு பெரிய லாபம் தான்.புதிய நட்பு வட்டாரம் உருவாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். கருத்து வேறுபாட்டால் ஒதுங்கி இருந்த மூத்த உடன்பிறப்பு போனில் நலம் விசாரிப்பார் அல்லது வீடு தேடி வந்து நட்பு பாராட்டுவார். வெளிநாட்டில், வெளியூரில் வசிக்கும் சிலரின் மூத்த சகோதரர் சொத்தை விட்டுக் கொடுக்கலாம்.

  11மிட கேதுவின் பொது பலன்கள்:11மிடம் என்பது லாப ஸ்தானம் மட்டுமல்ல உப ஜெய ஸ்தானம். ஒரு மனிதனுக்கு வெற்றியையும் வாழ்வியல் மாற்றத்தையும் ஏற்படுத்தி தரக் கூடிய இடம். பொருள் கடன் மற்றும் பிறவிக் கடனில் தத்தளித்த உங்களுக்கு கர்மவினைத் தாக்கம் குறையும் காலம் வந்துவிட்டது. வாழ்நாளின் பாதியை தந்தையின் கடன் மற்றும் பூர்வீகச் சொத்திற்காக இழந்து நொந்த உங்களுக்கு விடிவுகாலம் வந்துவிட்டது.

  இதுவரை ஒரு தொழில் செய்து வந்தவர்கள் இரண்டு தொழில் செய்வார்கள். தொழிலை விரிவு செய்ய, புதிய தொழில் கிளைகள் துவங்க ஏற்ற நேரம். உங்கள் முழுத் திறமையையும் காட்டி நல்ல பணம் சம்பாதிப்பீர்கள். சிலருக்கு மனைவி மற்றும் மாமானர் மூலம் சொத்து பணம் கிடைக்கும். சிலருக்கு திருமணத்தில் பெரிய வரதட்சணை பணம் அல்லது பொன், பொருள் கிடைக்கும். வராக்கடன்கள் வசூலாகும். போட்டி, பந்தயங்களில் அதிர்ஷ்ட பணம் கிடைக்கலாம். பலகாலமாக விற்காமல் கிடந்த சொத்து விற்பனையில் பெரிய பணம் கிடைக்கலாம். கேது துலாம் ராசியில் உள்ள விசாகம், சுவாதி, சித்திரை நட்சத்திரங்கள் மூலம் தன் பயணத்தை செலுத்துகிறார்.

  12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்:விசாகம் குருவின் நட்சத்திரம். குரு தனுசிற்கு ராசி அதிபதி மற்றும் நான்காம் அதிபதி. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதிலும், சேர்ப்பதிலும் ஆர்வம் அதிகரிக்கும். நிலுவையில் இருக்கும் வாடகை வருமானம் வந்து சேரும். சிலருக்கு வீடு கட்டும் எண்ணமும் நிலபுலன் வாங்கும் எண்ணமும் பலிதமாகும். .பருவ வயது எட்டியும் பருவமடையாத பெண் குழந்தைகள் பருவமடைவார்கள்.

  தாயின் ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. தாயின் நல்லாசியும் ஆஸ்தியும் கிடைக்கும். தாய் வழிச் சொத்தில் நிலவிய குழப்பங்கள் தாய் மாமன் ஆதரவால் தீரும். 18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்:சுவாதி ராகுவின் நட்சத்திரம். ராசிக்கு 5ல் பயணிக்கும் ராகுவின் நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கும் காலம். திட்டங்கள் பலிதமாகாமல் நினைப்பது ஒன்று- நடப்பது வேறு மாக ஏமாற்றத்தை சந்தித்த நிலை மாறும்.

  இதுவரை பாராமுகம் காட்டிய உங்களின் மூத்த சகோதரர் உங்கள் வீட்டின் சுப நிகழ்விற்கு முன் வந்து நின்று உங்களை கவுரவிக்கலாம். குலதெய்வம், பித்ருக்கள் வழிபாட்டில் ஆர்வம் மிகும். அரசுவழி ஆதாயம் மிகும். குழந்தை பாக்கியம் தொடர்பான உங்களின் எண்ணம் ஈடேறும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம், ஆரோக்கியம் மனநிறைவு தரும். வெளிநாட்டுப் படிப்பு அல்லது வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வாய்ப்பு கிட்டும்.

  27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்:செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை தனுசிற்கு 5,12ம் அதிபதி. தனுசு ராசியினருக்கு வம்சம் தழைக்க ஆண் வாரிசுகள் உருவாகும். வெகு சிலருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கலாம். செயற்கைக் கருத்தரிப்பிற்கு முயற்சி செய்பவர்களுக்கும் சாதகமான காலமாகும். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் மிகும். கடவுளே இல்லை என்று கூறியவர்கள்கூட பிரபஞ்ச சக்தியை உணர்வார்கள். சிலர் நெடுந்தூர தீர்த்த யாத்திரை சென்றுவரலாம். துறவு மனப்பான்மை மிகுதியாகும்.

  அதிக பொருள் ஈட்டும் ஆசையற்றவர்களையும், நியாயமாக கடுமையாக உழைப்பவர்களுக்கும் 5மிட ராகுவும் பதினொன்றாமிட கேதுவும் துணை நிற்பார்கள்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×