என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசிபலன் - 30 டிசம்பர் 2025
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். தேக்க நிலை மாறித் தெளிவு பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். விட்டுப்போன வரன் மீண்டும் வந்து சேரலாம்.
தனுசு
இன்றைய ராசிபலன் 29 டிசம்பர் 2025
அருகில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். உறவினர் பகை அகலும். முடங்கிக் கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.
தனுசு
இன்றைய ராசிபலன் 28 டிசம்பர் 2025
குழப்பங்கள் அகலும் நாள். தாய் வழியில் ஆதரவு உண்டு. அந்நிய தேசத்திலிருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும். ஆலயத் திருப்பணிக்கு உதவ முன்வருவீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் 27 டிசம்பர் 2025
அயல்நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன் 26 டிசம்பர் 2025
உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும். குடும்பத்தில் அமைதி கூடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன் 25 டிசம்பர் 2025
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நவீனப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு மகிழ்ச்சி தரும்.
தனுசு
இன்றைய ராசிபலன் 24 டிசம்பர் 2025
மனக்குழப்பம் ஏற்படும் நாள். தன்னம்பிக்கை தேவை. புதிய ஒப்பந்தங்கள் கைநழுவிச் செல்லலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடிக்கு ஆளாக நேரிடும்.
தனுசு
இன்றைய ராசிபலன் 23 டிசம்பர் 2025
திருமண முயற்சி கைகூடும் நாள். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தில் உள்ளவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் 22 டிசம்பர் 2025
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். எதிர்பாராத வரவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்கள் சிலர் நாடி வந்து உதவிசெய்வர். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர்.
தனுசு
இன்றைய ராசிபலன் 21 டிசம்பர் 2025
பயணங்கள் பலன் தருவதாக அமையும். இடம் வாங்க, விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன் 20 டிசம்பர் 2025
கொடுக்கல் வாங்கல்கள் சீராகும் நாள். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. மறதி அதிகரிக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன் 19 டிசம்பர் 2025
கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் நாள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும்.






