என் மலர்

  தனுசு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

  தமிழ் மாத ராசிப்பலன்

  16.12.22 முதல் 14.1.23 வரை

  சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்திக் கொண்டு சாதிக்கும் தனுசு ராசி நேயர்களே!

  மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு சுக ஸ்தானத்தில் பலம் பெற்றிருக்கிறார். தனாதிபதியான சனி தன ஸ்தானத்தில் வலிமையுடன் இருக்கிறார். எனவே இந்த மாதம் இனிய மாதமாக அமையும்.

  புதன் வக்ர இயக்கம்

  உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், மார்கழி 3-ந் தேதி உங்கள் ராசியிலேயே வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். களத்திர ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான புதன் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. வாழ்க்கைத் துணை வழியேயும், வாரிசுகளாலும் பிரச்சினைகள் உருவாகும். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். திடீர் திருப்பங்கள் பலவும் வந்து சேரும். வாசல் தேடி வந்த வரன்கள் திரும்பிச் செல்லலாம். வழிபாட்டில் கூட கவனச் சிதறல் அதிகரிக்கும். தொழிலில் நண்பர்களை நம்பி ஏமாறும் சூழ்நிலை உண்டு.

  மகர - சுக்ரன் சஞ்சாரம்

  உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், மார்கழி 15-ந் தேதி மகர ராசிக்கு செல்கிறார். 11-க்கு அதிபதி 2-ல் வரும் இந்த நேரம் பெரியளவில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். உங்கள் தொழில் வெற்றிநடை போடும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். 6-க்கு அதிபதியாகவும் சுக்ரன் விளங்குவதால், பெயரளவில் விரயங்களும் ஏற்படும். அதை சுபவிரயங்களாக மாற்றிக்கொள்வது நல்லது. பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று, நீண்ட தூரங்களில் பணிபுரிய வேண்டியதிருக்கும். வெளிநாட்டு முயற்சி அனுகூலம் தரும். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். தொழில் வணிகம் சார்ந்த முயற்சிகளுக்கு மாற்று இனத்தவர் உறுதுணையாக இருப்பர்.

  புதன் வக்ர நிவர்த்தி

  மார்கழி 24-ந் தேதி, தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன் வக்ர நிவர்த்தியாவதால் நன்மைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். களத்திர ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான புதன் பலம்பெறும் பொழுது தொழில் வெற்றி நடைபோடும். லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வு தானாக வந்து சேரும். 7-ம் இடத்திற்கு அதிபதியாகவும் புதன் இருப்பதால் இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான வாய்ப்பு கைகூடிவரும். 'இதுவரை வந்த வரன்கள் ஒன்றும் பொருத்தமாக இல்லையே' என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தவர்கள், நல்ல தகவல் கிடைத்து மகிழ்ச்சியடையப் போகிறார்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர்.

  செவ்வாய் வக்ர நிவர்த்தி

  மார்கழி 29-ந் தேதி, ரிஷபத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி வக்ர நிவர்த்தியாவது யோகம்தான். அண்ணன் - தம்பிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மாறும். எண்ணியபடியே பாகப்பிரிவினைகள் சிறப்பாக நடைபெறும். பிள்ளைகளின் கல்வி மற்றும் கல்யாணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பங்காளிப் பகை மாறும்.

  12-க்கு அதிபதியாகவும் செவ்வாய் விளங்குவதால் விரயங்கள் ஏற்படத்தான் செய்யும். என்றாலும் சுபவிரயமாகவே இருக்கும். குடும்ப முன்னேற்றம் கருதி செலவிடுவீர்கள். குடியிருக்கும் வீட்டை விலைக்கு வாங்குவது அல்லது பிள்ளைகளின் கல்யாண முயற்சியில் சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்.

  இம்மாதம் ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 18, 19, 26, 27, 30, 31, ஜனவரி: 11, 12. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

  ×