என் மலர்
தனுசு
2025 பங்குனி மாத ராசிபலன்
பிறருடைய பிரச்சினைகள் தீர நல்ல ஆலோசனை கூறும் தனுசு ராசி நேயர்களே!
பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பரிவர்த்தனை யோகம் பெற்று, சுக்ரன் வீட்டில் இருக்கிறார். சுக்ரன் உச்சம் பெற்று புதனோடு இணைந்து சஞ்சரிப்பதால் 'புத சுக்ர யோகம்' உருவாகிறது. அதுமட்டுமின்றி 'நீச்சபங்க ராஜ யோக'மும் அமைந்துள்ளதால், இந்த மாதம் உங்களுக்கு இனிய மாதமாக அமையப்போகிறது. புதிய ஒப்பந்தங்கள் அதிகரிக்கும். புனிதப் பயணங்களும் ஏற்படும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வருங்காலத்தை பற்றிய பயம் அகலும்.
மீன - புதன் சஞ்சாரம்
மாதத் தொடக்கத்தில் மீன ராசியில் புதன் நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் நீச்சம் பெறுவது யோகம்தான். குடும்பத்தில் சுபகாரியங்கள் துரிதமாக நடைபெறும். பிள்ளைகள் வழியில் வந்த பிரச்சினைகள் படிப்படியாக நல்ல முடிவுக்கு வரும். வியாபார விரோதம் விலகும். தொழில் வளர்ச்சி உண்டு. கடன் சுமை குறைய புதிய யுக்திகளை கையாளுவீர்கள். அரசியல் களத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டு.
கும்ப - புதன் சஞ்சாரம்
பங்குனி 4-ந் தேதி புதன், வக்ர இயக்கத்தில் கும்ப ராசிக்கு வருகிறார். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதனால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். குறிப்பாக கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கடல் தாண்டிச் சென்று மேற்படிப்பு படிக்க நினைத்தவர்களுக்கு அதுவும் நிறைவேறும். மாமன் - மைத்துனர் வழியில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தி வைப்பீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். தொழிலை விரிவு செய்ய எடுத்த முயற்சிக்கு, கேட்ட இடத்தில் தொகை கிடைக்கும். போட்டிக் கடை வைத்தோர் விலகுவர். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வுப்பெற்று, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டும் நேரம் இது.
மீன - சுக்ரன் வக்ரம்
மீனத்தில் உள்ள சுக்ரன் இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். அசுர குருவான சுக்ரன் வக்ரம் பெறுவது ஒரு வழிக்கு நன்மைதான். உங்கள் ராசிநாதன் குருவிற்கு சுக்ரன் பகைக் கிரகம் என்பதாலும், 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் என்பதாலும் உடல் ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உத்தியோக முன்னேற்றம் உண்டு. ஆனால் பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படும். ஒரு கடனை அடைக்க, மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.
கடக - செவ்வாய்
பங்குனி 24-ந் தேதி கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். எனவே பிள்ளைகளால் பிரச்சினை வரலாம். அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். பூர்வீக சொத்து பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். புதிய சொத்துக்கள் வாங்கியதில் பிரச்சினை ஏற்படும். குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள் அகல, விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நேரம் இது. அதே சமயம் பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு, புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு யோகமான மாதம் இது. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வளர்ச்சி திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவி உண்டு. கலைஞர்களுக்கு காரியங்களில் வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். இடம், பூமி வாங்குவதில் ஆர்வம் கூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
மார்ச்: 17, 18, 24, 25, 29, 30, ஏப்ரல்: 7, 8, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.






