என் மலர்

  தனுசு - குருப்பெயர்ச்சி பலன்கள்

  தனுசு

  குருப்பெயர்ச்சி பலன்கள் - 2022

  குருபக்தி மிகுந்த தனுசு ராசியினரே ராசிக்கு 4ல் குரு பகவான் ஆட்சி பலம் பெறுகிறார்.

  சனிபகவான் 2 ,3ம் இடத்திலும் ராகு பகவான் 5ம் இடத்திலும், கேது பகவான் 11ம் இடத்திலும் பயணிக்கிறார்கள். இதுவரை ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சரித்த ராசி அதிபதி குருபகவான் 4ம் இடமான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். தனுசு ராசிக்குகுரு பகவான் ராசி அதிபதி மற்றும் சுகாதிபதி. இந்த குருப் பெயர்ச்சி இழந்த அனைத்து சுகங்களையும் மீட்டுத் தருவதாக இருக்கும். இழப்புகளை ஈடு செய்ய எடுத்த முயற்சிகள் வெற்றி கிடைக்கும் . குழப்பங்கள் தீரும்.

  மனக் கலக்கங்கள் காரிய தாமதம் அகலும். இழந்த பதவிகள் கிடைக்கும். பணத்தட்டுப்பாடு, பணமுடக்கங்கள் குறையும் வாய்ப்பு உள்ளது.பிரச்சனைகளை பொறுமையாக சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும்.எந்த காரியத்தை யாரிடம் பேசி எப்படிசாதிக்க வேண்டும் என்ற திறமை வளரும். மற்றவரின் உதவியை விரும்பாமல்உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்தை நீங்களே முயன்று அடையும் பக்குவம் பெறுவீர்கள்.கிடைக்கும்நேரத்தையும் , சந்தர்ப்பத்தையும் சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். பேராசை குறையும்.புத்திசாலித்தனமும், தைரியமும் அதிகரிக்கும். நல்ல தோற்றப் பொழிவும், ஜன வசீகரமும் ஏற்படும். சாஸ்த்திர ஞானமும் வியாபார தந்திரமும் உயரும். உயர்ந்த லட்சியம் உங்களை ஆட்கொள்ளும்.

  1,4ம் அதிபதியாகிய குரு 4ல் கேந்திரம் ஏறி அர்தாஷ்டம குருவாகிறார். குரு உங்களுக்குகேந்திராதிபதி என்றாலும்பெரிய பாதகங்கள் எதுவும்நிகழாது. தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வையும்4ம் இடத்திற்கு இருப்பதால் தங்கள் தோற்றம் மற்றும் செயல்பாடுகளில் நல்ல மாற்றம்தோன்றும். குழப்பமான மனநிலை, சோர்வு, மன உளைச்சல் நீங்கி நிம்மதி பிறக்கும். கடன் பெற்றாவது வீடு, வாகன யோகம் அடைய முயல்வீர்கள். வீடு அல்லது தொழில் ஸ்தாபனத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள்.

  உங்களின் 4ம் அதிபதி குரு என்பதால்நீங்கள் வாங்கும் வீடு, மனை அருகில் ஆன்மீக ஸ்தலங்கள் இருக்கும்வாய்ப்புப்புள்ளது.முறையான ஆவணங்கள், பட்டா இல்லாத சொத்து போன்ற வற்றிற்கு உரிய ஆவணங்கள் கிடைக்கும். இடதோஷம் உள்ள மனை அல்லது பூமியின் அதிர்வலையில் குறைபாடு உள்ள சொத்தில் வாஸ்து குறைபாடு சரி செய்யப்படும். தாயின் ஆரோக்யத்தில் முன்னேற்றம் உண்டாகும். தாயார் அல்லது தாய் வழி சுற்றத்தினரால் சில ஆதாயங்கள், செல்வம் கிடைக்கப் பெறுவீர்கள். தாய்வழிச் சொத்தில் உள்ள சட்ட சிக்கல்கள் முடிவுக்கு வரும். கால்நடைபாக்கியங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். 4ல் குரு உள்ளதால் மாணவ மாணவிகள் கடினமாக உழைத்தால் நல்ல மதிப்பெண் எடுப்பது நிச்சயம். 4ம் இடத்திற்கு சனிப் பார்வையும் இருப்பதால் பள்ளிப் படிப்பைபாதியில் நிறுத்திய மாணவர்கள் கூட மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிப்பார்கள்.

  5ம் பார்வை பலன்கள்: குருவின் 5ம் பார்வையும், சனியின் 7ம் பார்வையும் அஷ்டம ஸ்தானத்திற்கு இருப்பதால் ஆயுள், ஆரோக்கியம் சிறப்படையும். உடலும் மனமும் புத்துணர்வு பெறும். இந்தகுருப் பெயர்ச்சி நோயிலிருந்து உங்களை காக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆயுளுக்கு பங்கம் விளைவிக்க கூடிய கொடிய நோய்க்கு சிகிச்சை செய்பவர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தீராத கடன், இனம் புரியாத நோய் போன்றவற்றிலிருந்து சிறு நிவாரணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாதசட்டம் தொடர்பான பிரச்சனைகளுக்கு நீதிமன்றத்தால்அலைக்கழிகப்பட்டுமன வேதனை அடைந்தவர்களுக்கு வழக்கு வியாஜியங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சிலருக்கு திடீர் அதிரஷ்டம், உயில், காப்பீட்டு முதிர்வு தொகை போன்றவற்றின் மூலம் தன லாபங்கள் ஏற்படும்.

  கோட்சாரத்தில் 5ல் ராகு இருப்பதால் குழந்தை பாக்கியத்தில் தடைதாமதம்ஏற்படலாம். செயற்கை முறை கருத்தரிப்பிற்குமுயற்சி செய்பவர்கள் தங்கள் சுய ஜாதகத்தை சரிபார்ப்பது அவசியம். 17. 1.2023 க்கு பிறகு சனிபகவானின் 3ம் பார்வையும் 5ம் இடத்திற்கு இருப்பதால் உத்தியோகம் அல்லது தொழில் நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேற நேரும். குழந்தைகள் மூலம் குடும்பத்தில் தொல்லைகள் குழந்தைகளுக்காக கடன் படுதல் அல்லது குழந்தைகளுக்கு ஆரோக்கிய குறைபாடு போன்ற சச்சரவு ஏற்படலாம்.

  7ம் பார்வை பலன்கள்:அரசியல், ஆன்மிகம், கல்வி, சொந்த தொழில் போன்ற எந்த துறையாக இருந்தாலும் அதில் நிலவிய மந்த நிலை மாறி தொழில் சூடு பிடிக்கும். உழைத்த உழைப்பிற்கு நிறைந்த வாபம் உண்டு. தொழில் மூலம் மரியாதை கிடைக்கும். சமூக அந்தஸ்து உயரும் .வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சமூக நலச் சங்கங்களில் பதவி கிடைக்கும் புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். உங்களின் 10ம் அதிபதி புதன் என்பதால் கமிஷன் தொடர்பான தொழிலில்இருப்பவர்களுக்கு முன்னேற்றம்நன்றாக இருக்கும். இதுவரை ஒரு தொழில் செய்து வந்தவர்கள் இரண்டு தொழில் செய்வார்கள். பலருக்கு புதிய தொழில் எண்ணம் வரும். வருமானம் பல மடங்கு பெருகும். 5ல் ராகு இருப்பதால் சிலர் புதிய வழி, குறுக்குவழி தொழில தந்திரங்களைப் பயன்படுத்தி வருமானத்தை அதிகப்படுத்துவீர்கள்.

  9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம் பார்வை 12ம் மிடமான விரய ஸ்தானத்திற்கு இருப்பதால் குல தெய்வ கோவில் வழிபாட்டில் இருந்ததடை, தாமதங்கள் விலகும். விட்டுப் போன வழிபாடுகள், பிரார்த்தனைகளை செய்து முடிப்பீர்கள். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிட்டும். சிலர் தொழில் அல்லது உத்தியோகத்திற்காக வெளி நாட்டிற்குச் செல்லலாம். தொழில் நன்றாக இருந்தாலும் பெரிய லாபம் நிற்காது. போதிய வருமானம் இருந்தாலும்இழப்புகள், விரயத்தை தவிர்க்க முடியாத சூழ்நிலை இருக்கும். செலவுகளை குறைந்துக் கொள்வது நலம். கவனமாக தொழில் நடத்த வேண்டிய காலம்.தொழில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. சுய தொழில் செய்பவர்களுக்குபொருளாதார நிலையில் அவ்வப்போது சிறு சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். நிம்மதியான தூக்கம் வரும்.

  குருவின் வக்ர பலன்கள்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு வக்ரம் அடையும் காலத்தில்வாக்கு ஸ்தானத்தில் சனி பகவான் நிற்பதால் கடினமான மற்றும் அடுத்தவர் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். குடும்பத்தில் சிறு சிறு மனக்கசப்பு தோன்றி மறையும். ஆரம்பக்கல்வி பயிலும் குழந்தைகளுக்குகல்வியில் சிறு தடை அல்லது மந்த நிலை இருக்கும். குரு உங்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் போது 5ல் உள்ள ராகு எதிர்பாராத சறுக்கலையும் ஏற்படுத்தும், வீண் பழிக்கு ஆளாக நேரும் என்பதால் சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்யக்கூடாது இந்த கால கட்டத்தில் நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்க வீட்டு வாசலில் வந்து நிற்பார்கள். அவசர தேவைக்கு நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று தற்போதைய நிதி நிலையை சரி செய்ய முடியும். குருவின் வக்ர நிவர்த்திக்கு பிறகு சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு கடனால் கவலை உண்டாகும்.

  பெண்கள்: திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லறம்நடத்துவார். தம்பதியினர்தொழில் நிமித்தமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாகவோவெவ்வேறுஊர்களில் பிரிந்துவாழ்ந்து கொண்டிருந்தால்இப்பொழுது ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் அற்புதமான நல்ல நேரம் . விவகாரத்து ஆன தம்பதிகள் கூட மறுபடியும் சேர்ந்து வாழும் வாய்ப்பு உருவாகும். மனக்கசப்பு மாறும்.

  பரிகாரம்: செவ்வாய் கிழமை காலை 11-12 மணி வரையான சனி ஒரையில் முருகனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து பட வேண்டும்.சனிக் கிழமை காலை 8-&-9 மணி வரையான செவ்வாய் ஒரையில் சிவனுக்குநல்லெண்ணெயில் சிவப்பு திரி இட்டு 6 விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×