என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசிபலன் - 30 ஆகஸ்ட் 2024
யோசித்து செயல்பட வேண்டிய நாள். காலையில் வந்த வரவை விட மாலையில் செலவு கூடும். உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர். பயணங்களை மாற்றியமைக்க நேரிடும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 29 ஆகஸ்ட் 2024
பாசம் மிக்கவர்களின் நேசம் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தினர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது. மறதியால் சில காரியங்களை செய்ய முடியாமல் போகலாம்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 28 ஆகஸ்ட் 2024
கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 27 ஆகஸ்ட் 2024
வளர்ச்சி கூடும் நாள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள். பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வரலாம். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்படுவீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 26 ஆகஸ்ட் 2024
வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். விரயங்கள் தவிர்க்க முடியாததாக அமையும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். சொத்து தகராறுகள் அகலும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 25 ஆகஸ்ட் 2024
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கத்தில் விரிசல்கள் ஏற்படலாம். மறைமுக எதிர்ப்புகளால் மனக் கலக்கம் உண்டு. உத்தியோகத்தில் வீண்பழிகள் உருவாகலாம்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 24 ஆகஸ்ட் 2024
மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். அதிக செலவில் முடிக்க நினைத்த வேலையொன்றை குறைந்த செலவில் முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.
தனுசு
இன்றைய ராசிபலன் - 23 ஆகஸ்ட் 2024
முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 22 ஆகஸ்ட் 2024
குழப்பங்கள் அகன்று குதூகலம் கூடும் நாள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் உருவாகும். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். நட்பால் நல்ல காரியம் நடைபெறலாம்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 21 ஆகஸ்ட் 2024
உற்சாகத்துடன் செயல்படும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பு செய்ய முன்வருவர். வியாபார விரோதம் விலகும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரலாம்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 20 ஆகஸ்ட் 2024
தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும் நாள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. இடம் வாங்க, விற்க எடுத்த முயற்சி கைகூடும். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 19 ஆகஸ்ட் 2024
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும்.






