என் மலர்

  மீனம் - ஆண்டு பலன் - 2023

  மீனம்

  ஆங்கில புத்தாண்டு ராசிப்பலன் 2023

  குருவின் ஆசி பெற்ற மீன ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டில் பல வளமான பலன்கள் நடைபெற நல் வாழ்த்துக்கள். இந்த ஆண்டில் எண்ணற்ற புதிய வாய்ப்புகள் தேடி வரும்.வெளிவட்டாரங்களில் மரியாதைகள் உயரும். கடந்த கால நெருக்கடிகள் குறையும். உங்கள் செயலில் வேகமும், வார்த்தையில் விவேகமும் இருக்கும்.குரு பகவானின் சஞ்சாரம் சற்று சாதகமாக உள்ளது.ஏழரைச் சனி ஆரம்பம். ராகு கேதுக்களால் சற்று ஏற்ற இறக்கமான சூழ்நிலை இருக்கும். எனினும் கடின உழைப்பு லாபத்தை ஈட்டித்தரும். எனவே சுறுசுறுப்புடன் செயல்பட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  குருவின் சஞ்சார பலன்கள்:

  ராசி மற்றும் பத்தாம் அதிபதியான குரு பகவான் ஏப்ரல் 22, 2023 வரை ராசியில் ஆட்சி பலம் பெறுகிறார். அதன் பிறகு தன ஸ்தானம் சென்று ராகுவுடன் இணைந்து சனி பார்வை பெறுகிறார்.ராசி அதிபதி குரு ராகுவுடன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் திடீர் யோகத்தால் எதிர்பாராத பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் நல்ல நிகழ்வுகள் நடைபெறும். எதையும் பல முறை சிந்தித்து செயல்படுவீர்கள். நீண்ட ஆயுள், சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை உயரும். காரிய சித்தி , சமுதாயத்தில் உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு போன்ற யாவும் சிறப்பாக அமையும்.

  அரசு உத்தியோகம், அரசியல் பதவி, அரசு வகை ஆதாயம் உண்டு. சகல சௌபாக்கியங்கள், புகழ், அந்தஸ்து, கவுரவம் என ஒரு மனிதன் வாழ்நாளில் அனுபவிக்க வேண்டிய அனைத்து சுப பலன்களும் தேடி வரும். பங்குச் சந்தையில் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்டம் இவர்களைத் தேடி வரும். புத்திர தோஷம் நீங்கும்.உத்தியோகத்தில் ஸ்திர தன்மை ஏற்படும்.உத்தியோகத்தில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும்.

  தொழில், உத்தியோகம் அல்லது கல்விக்காக வெளிநாட்டு பயணம் செய்ய நேரும். தொழிலுக்காக பூர்வீகத்தை விட்டு பிரிந்த தந்தை மீண்டும் பூர்வீகம் திரும்புவார். சுய உழைப்பால் உருவாகும் சொத்தும் மிகைப்படுத்தலாக இருக்கும். கல்வி நிறுவனங்கள் நடத்தும் ஆர்வம் உண்டாகும். அவரவர் வயதிற்கும் தசாபுத்திக்கும் ஏற்ற சுப பலன்கள் உண்டு. தாய், தந்தை வழியில் உறவினர்கள் ஆதரவு, அனுசரனை உண்டு. சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாட்டு வாழ்க்கை கிடைக்கும். பெரியோர் நட்பு ஆன்மீக, தெய்வீக காரியத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

  சனியின் சஞ்சார பலன்கள்:

  மீனராசிக்கு லாபாதிபதி மற்றும் விரயாதிபதியான சனி பகவான் ஜனவரி 17, 2023 முதல் விரய ஸ்தானத்திற்குச் செல்கிறார். ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. குடும்ப பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். குடும்ப உறவுகளின் உறவு நிலை மேம்படும். தாயிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வாழ்க்கைத் துணை நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்களிடம் கனிவாகவும், கவனமாகவும் பழக வேண்டும். தொழிலில் கூட்டாளிகளால் சாதகமான சூழல் ஏற்பட்டு தனலாபம் அடைவீர்கள்.

  வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துவது புத்திசாலித்தனம். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள், மருத்துவச் செலவு குறையும். பிறர் விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. திருமணம் கைகூடும். பொருளாதார நிலை பழக்க வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். புகழ், அந்தஸ்து

  கெளரவத்துடன் வாழ்வார்கள். தாய்வழி, தந்தை வழிப் பூர்வீகச் சொத்து கிடைக்கும். அளவுக்கு மீறிய கடன், தவறான காதல் , கெட்ட நண்பர்கள் சாகவசம் இன்றி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

  ராகு/கேதுவின் சஞ்சார பலன்கள்:

  வருட துவக்கத்தில் ராகு தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். கேது அஷ்டம ஸ்தானத்தில் நிற்கிறார். அக்டோபர் 30,2023 முதல் ராகு பகவான் ராசிக்குள் வருகிறார். கேது பகவான் ஏழாமிடம் செல்கிறார். வாழ்க்கையில் முன்னேறத் தேவையான சந்தர்ப்பங்கள் கூடி வரும்.பெண்கள் நண்பிகள் மற்றும் உறவுகளுக்கு தங்க நகைகளை இரவல் கொடுக்ககூடாது. ஆபரணச் சேர்க்கை உருவாகும். வேலையாட்களால் உருவாகிய பிரச்சனை சீராகும். வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்பு கிடைக்கும்.

  மனோதிடம் கூடும்.கவுரவமான குடும்பத்தில் பிறந்து நேரம் கெட்டு வேலைக்கு சென்று தவறான காதலில் மாட்டி மனதையும் வாழ்க்கையையும் கெடுக்காமல் மிகவும் கவனமாக காலத்தை கடத்த வேண்டும்.தந்தை வழிச் சொத்து தொடர்பாக உடன் பிறந்தவர்களுடன் சிறு பிணக்கு மன பேதம் தோன்றும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும்.

  திருமணம்: ஏழரைச் சனிக்கும் திருமணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சுய ஜாதக ரீதியாக ஏதேனும் திருமணத் தடை இருந்தாலும் தடைகள் விலகி திருமண வயதில் உள்ளவர்கள் மணக் கோலம் காண்பார்கள்.

  2-ல் ராகு 8-ல் கேது.இருப்பதால் காதல்,கலப்பு திருமணம் அதிகரிக்கும். அத்துடன் பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் கலப்பு திருமணமும் அதிகமாகும். மேலும் நின்று போன திருமணங்கள் இனி சுலபமாக நடைபெறும்.

  பெண்கள்: இந்த புத்தாண்டில் உங்கள் செயல்கள் யாவும் வெற்றியாகும். வாழ்க்கையில் நீங்கள் நடக்க வேண்டும் என்று விரும்பும் , அனைத்து சுப திட்டங்கள், ஆசைகள் ,கனவுகளை நடத்தி மகிழ்வீர்கள்.குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன், மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடு மறையும். பிள்ளைகளின் திருமணம் முடிவுக்கு வரும். ஆன்மீக சிந்தனை மேலோங்கும்.

  மாணவர்கள்: உங்கள் ராசி அதிபதி குரு என்பதால் பொதுவாகவே கல்வியில் ஆர்வமாக இருப்பீர்கள்.எதிர்காலம் பற்றிய திட்டமிடுதலுடன் செயல்படுவீர்கள். ஆசிரியர்களின் அறிவுரையுடன் பொதுத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

  பூரட்டாதி 4: கடந்த சில வருடங்களாக ஏற்பட்ட இன்னல்கள் குறையும். தொழில் துறையில் சில புதிய முதலீடுகள் செய்ய ஏற்ற நேரம். சற்று கூடுதலாக உழைக்க நேரும்.

  முன்னேற்றம் கூடும். சிலர் வீட்டு மனை அல்லது புதிய வாகனம் வாங்குவீர்கள். முக்கிய முடிவுகளை பெரியவர்களை கலந்து ஆலோசிப்பது சிறப்பு. சிலருக்கு பதவி மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம். சிலர் ரிலாக்ஸாக மன மாற்றத்திற்காக சொந்த ஊர் சென்று உற்றார் உறவுகளைக் கண்டு வரலாம். தந்தை வழி உறவுகளிடம் முக்கிய பேச்சு வார்த்தையை நடத்த ஏற்ற காலம். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அழகு, ஆடம்பர பொருட்கள் விற்கும் சில்லறை வியாபாரிகளுக்கு வியாபாரம் அமோகமாக இருக்கும்.

  தாய், தந்தை உடன் பிறப்புகளுடன் கூடி மகிழ்வீர்கள். முதலீடு இல்லாத கமிஷன் அடிப்படையான புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். அதன் முலம் நல்ல வருவாயும் கிடைக்கும். பணம் பைகளில், கைகளில் நிரம்பி வழியும். கோபூஜை மற்றும் கோதானம் எதிர்பார்த்த மாற்றத்தை கிடைக்கச் செய்யும்.

  உத்திரட்டாதி: பங்குச் சந்தை முதலீட்டால் ஆதாயம் உண்டு. ஊடகங்களில் பணி புரிபவர்களுக்கு புகழ் உண்டாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு ஓங்கும். விவசாயிகளுக்கு ஆதாயம் உண்டு. சுய தொழிலுக்கு முயற்சிப்பவர்களுக்கு தேவையான உதவி வாழ்க்கைத் துணையின் மூலம் கிடைக்கும். குலத் தொழில் விருத்தியடையும். நெருங்கிய உறவில் திருமண முயற்சி கைகூடும். வீடு, மனை தொடர்பாக நீங்கள் எதிர்பார்த்த நற்செய்திகள் உங்களை திக்கு முக்காடச் செய்யும். வாரிசுகள் கல்வி, வேலை விசயமாக இடம் பெயர நேரும். சிலருக்கு மருத்துவம் சம்பந்தமான உயர்கல்வியில் சேர வாய்ப்பு உள்ளது. புத்திர பாக்கியம் உண்டாகும். பராம்பரிய விவசாயிகள் நல்ல ஏற்றம் பெறுவார்கள். புதிய இன்சூரன்ஸ் பாலிஸி எடுப்பீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை சீராகும். வேலை விஷயமாக பிரிந்திருந்தவர்கள் மீண்டும் குடும்பத்தோடு ஒன்று சேருவார்கள். மகான்களை சந்தித்து ஆசி பெறவும்.

  ரேவதி: உங்கள் எண்ணங்கள், யோசனைகள், சிந்தனைகள் அனைத்தும் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும். பல புதிய மாற்றங்கள் உண்டாகும். நிதி, நிர்வாகத்தை நன்கு திடப்படுத்திக் கொள்வீர்கள். புதிய வெளிநாட்டு தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். பங்குதாரர் மூலம் புதிய தொழில் முதலீடு உண்டாகும். சேமிப்பு உயரும். ஒரு சிலர் அசைவ உணவிலிருந்து சைவ உணவுக்க மாறுவார்கள். அரசு வேலைக்கு முயற்சி செய்யும் எண்ணம் உண்டாகும். வயோதிகர்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும். பெண்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

  தொழில் வகையில் அரசு அதிகாரிகளை அனுசரித்து ஆதாயம் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக உங்கள் எதிர்பார்ப்பிற்கு கிடைக்காத வரன் இப்பொழுது தேடி வரும். சில விவாகரத்து தம்பதிகள் மீண்டும் சேரும் வாய்ப்பு வரும். சிலரது வாரிசுகளுக்கு திருமண யோகம் உண்டாகும். பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சையில் மூத்த சகோதரத்தின் ஆதரவு மகிழ்ச்சியைத் தரும். தினமும் கால பைரவரை வழிபடவும்.

  மீன ராசியினர் ஆங்கிலப் புத்தாண்டிற்கு சென்று வழிபட வேண்டிய ஸ்தலம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில். ஏழரைச் சனி துவங்க உள்ளதால் மீன ராசியினர் இங்கு சென்று வழிபட சனி பகவானால் ஏற்படும் இன்னல்கள் தீரும்.

  மீனம்

  ஆங்கில ஆண்டு பலன் - 2022

  குருவின் ஆசி பெற்ற மீன ராசியினருக்கு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டு உங்களுக்கு பல விதமான மாற் றங்களை கொண்டு வரப் போகி றது. குரு மற்றும் சனியின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் முத்தாய்பான முன்னேற்றங்கள் உண்டு. ராகு/கேதுக்களின் சஞ் சாரம் சற்று சாதகமற்று இருந் தாலும் வழிபாட்டால் சரி செய்ய முடியும். தங்கு தடையில்லாத பண வரவும் தொழில் மாற்றமும் ஏற்படப் போகிறது. எந்த விசயத்தையும் மன உறுதியோடு தைரியமாக எதிர்கொள்வீர்கள். கட்டுக்கடங்காத யோசனைகளும் திட்டங்களும் தோன்றும். அதன் மூலம் வெற்றியும் உண்டாகும். இந்த புத்தாண்டில் அனைத்துவிதமான முன்னேற்றங்களும் தேடி வரும். இனி விரிவான பலன்களைப் பார்க்களாம்.

  குரு சஞ்சார பலன்: ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் ஏப்ரல் 13 வரை விரய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்தாலும் பணவரவு இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். சிலருக்கு வீடு, நில, புலன், நகை வாங்குதல் திருமணம் என சுப விரயமும் உண்டாகலாம். சிலருக்கு தேவையில்லாத மருத்துவச் செலவு வரலாம். சிலர் வெளியூர், வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்லலாம். சிலர் பற்றாக்குறை பட்ஜெட்டை சரி செய்ய சொத்து நகைகளை அடமானம் வைக்கலாம். செய்யும் தொழிலில் நிலையற்ற தன்மை இருப்பது போன்ற மனக்குழப்பம் உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்து வம்பில் மாட்டலாம்.

  12ம் இடம் என்பது மீள முடியாத இழப்புகளை தரும் இடம் என்பதால் குல தெய்வ வழிபாட்டில் ஆர்வம் செலுத்த தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்று விடும். இவை எல்லாம் குறுகிய காலத்திற்கு மட்டுமே என்பதால்விழிப்புணர்வோடு அக்கறையாக திட்டமிட்டு செயல்பட்டால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும்.

  ஏப்ரல் 13ல் ராசியில் குரு ஆட்சி பலம் பெறும் போது கடந்த கால இழப்புகளை சரி செய்யக் கூடிய சூழ்நிலை உண்டாகும். 11ல் ஆட்சி பெற்ற சனி ராசியில் உள்ள குருவை 3ம் பார்வையாக பார்க்கும் பொழுது பொருளாதாரக் குற்றம் அகலும்.

  1,10ம் அதிபதி குரு ராசியில் ஆட்சி பலம் பெறுவதால் தொழிலில் இமாலய வளர்ச்சி உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றி பெறும். ராசி அதிபதி குருவே 10ம் அதிபதி என்பதால் தொழிலில் சீரான முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடா முயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும். நேர்மையான கடின உழைப்பாளிகளை குரு பகவான் உயர்வடையச் செய்வார். திருமணத் தடை அகலும். திருமணத்திற்கான முயற்சி பலிதமாகும். சிலரின் விரும்ப விவாகத்திற்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்கும். மறுமணம் கைகூடும்.

  சனியின் சஞ்சார பலன்கள்: ஆண்டு முழுவதும் சனி பகவான் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். சொந்த தொழில் ஆரம்பிக்க விருப்புபவர்களுக்கு விரும்பிய தொழில் வாய்ப்பு தேடி வரும்.புதிய தொழில், தொழில் கிளைகள், விரிவு செய்ய ஏற்ற நேரம். தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். அரசின் திட்டங்கள், மானியம், உதவி தொகை கிடைக்கும். புதிய தொழில் கூட்டாளிகள், ஒப்பந்ததாரர்கள் கிடைப்பார்கள். வாகனங்கள்,போக்குவரத்து சம்பந்தப்பட்ட தொழிவாளர்கள் நல்ல வேலை கிடைக்கப் பெறுவர். இரும்பு , எண்ணெய் விவசாயம். தொழில்கள் ஏற்றம் பெறும்.

  தோல் உற்பத்தியாளர்கள் வெளிநாட்டு ஏற்றுமதி மூலம் நல்ல லாபம் பெறுவர். மேலும் மண் விற்பனை, நிலக்கரி, மரம், பழைய பொருட்கள் விற்பனை, காபி, ஓட்டல் போன்ற தொழில்கள் உரிமையாளர்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கும். முதலீடு இல்லாத தொழில் செய்பவர்கள் நல்ல லாபம் காண்பார்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கும் பொருள்களை வாங்கி விற்கும் டிரேடிங் தொழில் செய்பவர்களுமக்கும் இது மிகப் பொன்னான காலம்.

  26. 2. 2022 முதல் 6. 4. 2022 வரை ராசிக்கு11ல் 11, 12ம் அதிபதி சனியுடன் மீனத்திற்கு 2,9ம் செவ்வாய் இணைகிறது. உங்களின் ராசி அதிபதி குருவும் செவ்வாயும் நட்பு கிரகங்கள் என்பதால் சுப பலன்கள் மிகுதியாகும். சிலர் தொழில் அல்லது உத்தியோகத்திற்காக ஊர் விட்டு ஊர் மாற நேரும். விரும்பிய பதவி உயர்வு தேடி வந்தாலும் பணிச் சுமை உங்களை வாட்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, புதிய சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தந்தை மகன் உறவு சிறக்கும்.

  தந்தை வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறு பாடு குறையும். பித்ருக்கள் தொடர்பான வழிபாட்டின் மூலம் காரிய சித்தி கிடைக்கும். பல தலைமுறையாக பித்ரு தோஷத்தால் பாதிக்கப் பட்டவர்கள் தில ஹோமம் செய்ய ஏற்ற காலம். புனித நீராடல், புனித தல யாத்திரை சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். இஷ்ட , குல, உபா சனை தெய்வ வழிபாடு பலிதமாகும் காலம். பூர்வீக சொத்துக்களை பிரிப்பதில் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால் இப்பொழுது சரியாகி விடும். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு உங்களின் செல் வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள்.

  ராகு /கேது சஞ்சார பலன்: ஆண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் 12, 2022 வரை மூன்றில் ராகு ஒன்பதில் கேது இருப்பதால் முன் ஜென்ம கர்மாவை கழித்து ஆன்மாவை சுத்தபடுத்தும் ஆன்மீக வழிபாடு செய்ய வாய்ப்பு கிடைக்கும்.முன்னோர்களின் ஆன்மாவை சாந்திப்படுத்தும் பித்ருக்கள் வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் முயற்சிகள் சிறு மன சஞ்சலத்திற்கு பிறகு காரிய சித்தியை ஏற்படுத்தி தரும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். அலைச்சல் மிகுதியான பிரயாணங்கள் அடிக்கடி செய்ய நேரும். தாய் மாமன் அனுசரணையால் பூர்வீகம் தொடர்பான பல பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாகும். உங்களின் நீண்ட நாள் பரம்பரை நோய்க்கு மாற்று மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முயல்வீர்கள்.

  சிறு பிரச்சனைகளால் பிரிந்த நண்பர்கள், உறவினர்கள் பகை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். உங்களுடைய வீண் பிடிவாதம், முன் கோபம் குறையும். தர்ம சிந்தனையுடன் பிறருக்கு மனக்குறையோ, பாதகமோ இல்லாத நல்ல முடிவை எடுப்பீர்கள்.

  ஏப்ரல் 12ல் ராகு 2ம் இடத்திற்கும் கேது 8ம் இடத் திற்கும் மாறும் போது கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் ஏற்படும்.எட்டாமிடம் என்பது பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானம் என்பதால் சுய ஜாதகத்தில் 7,8ம் பாவகங்களில் பிரச்சனை இருந்தால் அதற்கு உரிய பரிகார வழிபாட்டு முறையை செய்து பின் திருமணத்தை நடத்த வேண்டும்.

  சாதகமற்ற தசாபுத்தி நடப்பில் இருந்தாலும் கணவன் மனைவியிடம் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். பெற் றோர்கள் மற்றும் உற்றார் உறவினர்களின் தலை யீட்டால் கருத்து வேறுபாடு மிகுதியாகி நிம்மதி குறையும். ஒரு சிலருக்கு கருத்து வேறுபாடு அதிகமாகி விவாகரத்து வழக்கு பதிவாகும். சிலருக்கு எப்பொழுதோ பதிவான வழக்கிற்கு சாதகமற்ற தீர்ப்பும் வரும். கோட்சாரம் உங்களுக்கு சாதகமாக இல்லாத காரணத்தால் கோர்ட், கேஸ், போலீஸ் ஸ்டேசன் செல்லாமல் சமரசமாக பேசி பிரச்சனைய முடிப்பது புத்திசாலித்தனம்.

  திருமணம்: மீனம் கால புருஷத்திற்குப் பன்னிரன்டாம் இடம் என்பதால் பொதுவாகவே 27 வயதிற்கு மேல் தான் திருமணம் நடக்கிறது. சிறப்பான திருமண வாழ்க்கை அமைகிறது. இளம் வயதில் திருமணம் நடந்த பலர் இரண்டாம் வாழ்க்கையை நோக்கி பயணிக்கிறார்கள். கோட்சர குரு, ராகு/கேது ஏப்ரல் 2022 வரை சாதகமாக இருப்பதால் இதற்குள் திருமணம் முடிப்பது சிறப்பு. சனியின் 3ம் பார்வை ராசிக்கு இருப்பதால் சிலருக்கு தடை, தாமதம் ஏற்படலாம். ராகு/கேது 2022 ஏப்ரலில் மேஷம், துலாத்திற்கு மாறியவுடன் கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் உண்டாகும். எனினும் குருவின் கோட்சாரம் 2022 முழுவதும் திருமணத்திற்குச் சாதகமாக உள்ளதால் இந்த ஆண்டு கெட்டிமேளம் கொட்டப்படும்.

  பெண்கள்: உங்களின்ஆன்லைனில் பொருள் வாங்கும் மோகம் வங்கி சேமிப்பை கரைத்து விடும். பட்டுப்புடவைக்கு பணம் கட்டி பட்டு துண்டு கூட கிடைக் காமல் போகும்.வாழ்க்கைத் துணையால் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டு. பெண்களுக்கு இது பொற்காலம். அழகு, ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்த உங்களின் தாய் வழி சீதனம் உங்களைத் தேடி வரும்.

  விவசாயிகள்: மீன ராசி விவசாயிகளுக்கு இது பொற் காலம். விளை நிலங்களில் அமோக விளைச்சல் ஏற்பட்டு நல்ல வருமானம் கிடைக்கும். தடைபட்ட குத்தகை பணம் கிடைக்கும். விவசாய கடன் அல்லது வட்டி தள்ளு படியாகும். புதிய தோட்டம், விளைநிலம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். கால்நடைகளால் அனுகூலம் உண்டாகும்.

  உத்தியோகஸ்தர்கள்:உத்தியோகத்தில் இருப்ப வர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படும். மதிப்பு, மரியாதை சமூக அந்தஸ்து உயரும். வேலைப் பளு குறையும். குறைந்த வேலை நிறைந்த ஊதியம் என உங்கள் வாழ்க்கை இன்பமாக இருக்கும். அரசு உழியர்களுக்கு புதிய சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பலருக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து வாழும் கட்டாய சூழ்நிலையால் மனைவி மற்றும் குழந்தைகளை நினைத்து மனம் வாடும்.

  முதலீட்டாளர்கள்/வியாபாரிகள்: தொழிலுக்கு தந்தையின் அனுசரனையும், ஆதரவும் கிடைக்கும். தந்தையின் மூலம் பெரும் பணம் கிடைக்கும். நல்ல திறமையும் தகுதியும் வாய்ந்த வேலையாட்கள் கிடைப் பார்கள். தொழிலாளர்கள் நட்பு கரம் நீட்டி உற்பத்தியை பெருக்குவார்கள். தொழில் கூட்டாளிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். தொழிலை விரிவுபடுத்த மற்றும் ரொட்டேஷனுக்கு தேவையான கடன் அரசுடமை வங்கிகள் மூலம் கிடைக்கும். புதிய கடன் வாங்கி பழைய கடன் அடைப்பீர்கள்.

  அரசியல்வாதிகள்: மிகப் பெரிய அரசியல் தலைவர் களின் நட்பு நன்மையை தரும். மிகப் பெரிய கட்சியில் இணையும் வாய்ப்பு கிட்டலாம். பெரிய பதவிகளும் உங்களுக்கு கிடைக்க கூடிய சாத் தியக்கூறும் உள்ளது. பெயரை நிலை நாட்ட மிகப் பெரிய தொகை செலவு செய்ய நேரும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இது மேன்மையான காலம். அதிகாரப் பதவிகள் தேடி வரும். கட்சி மேலிடத்திற்கும் தெரியாத உங்கள் மக்கள் சேவை தெரியத் தொடங்கும்.

  மாணவர்கள்: உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற தாய், தந்தை பக்கபலமாக இருப்பார்கள். பள்ளி, கல்லுரி படிப்பை இடையில் நிறுத்திய மாணவ,மாணவிகள் மீண்டும் படிப்பை தொடர்வார்கள். நல்ல மதிப்பெண் பெற சுறுசுறுப்பும் தெளிந்த சிந்தனையும் தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

  பூரட்டாதி 4: உழைப்பும் முயற்சியும் உங்களுக்கு வெற்றி தரும் என்பதால் உண்மையாக கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம். முன்பு ஏற்பட்ட நஷ்டங்கள் இப்பொழுது பணமாக காய்க்கும். மேலும் சுப பலன்களை பெற வன்னி மரத்தடி விநாயகரை வழிபடவும்.

  உத்திரட்டாதி: பணம் எந்த வழியில் வருகிறது என்று இனம் காணமுடியாத வகையில் வந்து சேரும். எந்த செயலையும் நினைத்தவுடன் அவசரமாக செய்யாமல் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்படுவீர்கள். கிருஷ்ணரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

  ரேவதி: கடின உழைப்பும், விடா முயற்சியும் ,வைராக் கியத்தாலும் தடைகளை கடந்து வெற்றி வாகை சூடு வீர்கள்.உடலிலும் மனதிலும் புதிய தெம்பு பிறக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். பள்ளி கொண்ட பெருமாளை வழிபடுவது சிறப்பு.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×