என் மலர்
மீனம்
வார ராசிபலன் 11.5.2025 முதல் 17.5.2025 வரை
11.5.2025 முதல் 17.5.2025 வரை
விழிப்புடன் செயல்பட வேண்டிய காலம். ராசியை விட்டு ராகு பகவான் வெளியேறப் போகிறார். ஜென்மச் சனியின் காலம் என்றாலும் சுக ஸ்தானம் செல்லும் குரு பகவான் உங்களை காப்பாற்றுவார். தன வரவு மகிழ்ச்சி தரும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சிலர் நடந்ததை நினைத்து மனம் வருந்துவார்கள் அல்லது நடக்காததை நடப்பது போல் நினைத்து பயப்படுவார்கள்.
பக்தி மார்க்கத்தில் மனம் லயிக்கும். பாவம், புண்ணியம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழில் கூட்டாளிகள் அல்லது வாழ்க்கை துணையால் வம்பு வழக்கு உருவாகலாம். மேலும் இந்த காலகட்டத்தில் யாருக்கும் ஜாமீன் போடக் கூடாது. எந்த செயலிலும் கவனமாக இருக்க வேண்டும். கோபத்தை குறைக்க வேண்டும்.
இது போல் ஒவ்வொரு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் இருந்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
13.5.2025 அன்று அதிகாலை 2.27 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணவால் ஒவ்வாமை ஏற்படும் என்பதால் எளிமையான உணவை சாப்பிடுவது நலம். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் கிரகங்களின் இயக்கம் பாதிப்பை தராது. சித்ரா பவுர்ணமி அன்று குல தெய்வத்தை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






