search icon
என் மலர்tooltip icon

  மீனம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

  மீனம்

  ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்8.10.2023 முதல் 25.4.2025 வரை

  மீன ராசி நேயர்களே!

  இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், அக்டோபர் 8-ந் தேதி முதல் உங்கள் ராசியிலேயே பிரவேசிக்கப் போகிறார். அதே நேரத்தில் சப்தம ஸ்தானத்திற்கு கேது வருகிறார். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் ராகுவும், கேதுவும் இந்த இடத்தில் சஞ்சரித்து, நட்சத்திரப் பாதசாரங்களின்படி பயணித்து பலன்களை வழங்குவார்கள். பொதுவாக ஜென்மத்தில் ராகுவும், ஏழில் கேதுவும் இருந்தால் சர்ப்பதோஷ ஆதிக்கம் என்று சொல்வார்கள். எனவே சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்வது நல்லது.

  உங்கள் ராசிக்கு 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த ராகு, இப்பொழுது ஜென்ம ராசிக்கு வருகிறார். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்த கேது சப்தம ஸ்தானத்திற்கு வருகிறார். எனவே குடும்பத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது. முன் கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் தளரவிட வேண்டாம். பொருளாதாரம் திருப்திகரமாக இருந்தாலும், விரயங்கள் கூடும். அடிக்கடி மாற்றங்களைச் சந்திப்பீர்கள். வீண் விரயங்களில் இருந்து தப்பிக்க சுபவிரயங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தகராறு செய்தவர்கள் தானாக விலக தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். சப்தம ஸ்தானத்தில் கேது இருப்பதால், வாழ்க்கைத் துணையோடு அனுசரித்துச் செல்வதன் மூலம் மட்டுமே அமைதி காண இயலும். குடும்பச் சுமை கூடும்.

  குரு மற்றும் சனி வக்ர காலம்

  8.10.2023 முதல் 20.12.2023 வரை மேஷ ராசியிலும், 25.9.2024 முதல் 22.1.2025 வரை ரிஷப ராசியிலும் குரு வக்ரம் பெறுகிறார். அவர் வக்ரம் பெறும்பொழுது மிகக் கவனமாக செயல்பட வேண்டும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அடிக்கடி இடமாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் வந்து கொண்டேயிருக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிக்க இயலாது. வீண்பழிகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

  8.10.2023 முதல் 24.10.2023 வரை மகர ராசியிலும், 10.7.2024 முதல் 5.11.2024 வரை கும்ப ராசியிலும் சனி வக்ரம் பெறுகிறார். அவரது வக்ர காலத்தில் சஞ்சலங்கள் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு லாபாதிபதி யாகவும், விரயாதிபதியாகவும் சனி இருப்பதால், லாபம் முழுவதும் விரயமாகும். நல்ல சந்தர்ப்பங்கள் வந்தாலும் அதை பயன்படுத்த இயலுமா? என்பது சந்தேகம்தான்.

  சனிப்பெயர்ச்சி காலம்

  20.12.2023 அன்று கும்ப ராசிக்கு சனி பகவான் செல்கிறார். இப்பொழுது ஏழரைச் சனி ஆரம்பமாகிவிட்டது. அடுத்த 7½ ஆண்டுகளுக்கு சனிக்கிழமை விரதமும், சனீஸ்வர வழிபாடும் அவசியம். இரண்டாவது சுற்று நடப்பவர்கள் ஓரளவு நற்பலன்களைப் பெறுவார்கள். இருப்பினும் விரயங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கும்.

  குருப்பெயர்ச்சி காலம்

  1.5.2024 அன்று ரிஷப ராசிக்கு குரு செல்கிறார். உங்கள் ராசிநாதன் குரு, சகாய ஸ்தானத்திற்கு செல்வது யோகம்தான். அவரது பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே கல்யாண முயற்சிகள் கைகூடும். கொடுக்கல்- வாங்கல் சுமுகமாக இருக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். இடம் வாங்கும் யோகம் உண்டு.

  பெண்களுக்கான பலன்கள்

  இந்த ராகு-கேது பெயர்ச்சியில் ஜென்ம ராகுவாகவும், சப்தம கேதுவாகவும் இருப்பதால் ஏற்றமும், இறக்கமும் கலந்த வாழ்க்கையே அமையும். பணம் வந்த மறுநிமிடமே செலவாகிவிடும். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துச் செல்லுங்கள். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு திடீர் இடமாற்றம் வரும்.

  வளர்ச்சி தரும் வழிபாடு

  ஜென்ம ராகுவால் சிறப்பான வாழ்க்கை அமையவும், சப்தம கேதுவால் தடைகள் அகலவும், இல்லத்து பூஜையறையில் நாக கவசம் பாடி ராகு-கேதுக்களை வழிபட்டு வாருங்கள்.

  மீனம்

  ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - 2023

  12.4.2022 முதல் 30.10.2023 வரை

  இரண்டாமிட ராகு/எட்டாமிட கேது

  குருவின் ஆசி பெற்ற மீன ராசியினரே ராசிக்கு 2ல் ராகுவும், 8ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். குருபகவான் 1,2 ம் இடத்திலும் சனி பக வான்11, 12ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.

  2மிட ராகுவின் பொது பலன்கள்:இரண்டாமிடம் என்பது தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் என்பதால் வாக்கில் மாற்றம் தெரியும். பேச்சில் தைரியம், தன் நம்பிக்கை உண்டாகும். அமைதியாக பேசுபவர்கள் கூட அதிகார தோரணையான பேச்சில் அனைவரையும் கட்டிப் போடுவார்கள். சிலர் பேசியே பிறரை வதைப்பார்கள் சிலர் . பேச்சுத் திறமையால் வருமானத்தை அதிகரிக்கப்பர். ஒருவர் சம்பாத்தியத்தில் தள்ளாடிய குடும்பம் பிள்ளைகளின் வருமானத்தால் நிமிர்ந்து நிற்கும்.வருமானம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வந்து குவியும். இதுவரை வீட்டு வேலையில் காலத்தை கழித்த பெண்கள் கைத் தொழில் கற்று வருமானம் திரட்டும் முயற்சியில் ஈடுபடுவார்கள். கடன் சுமை குறையத் துவங்கும்.

  பண வாசனை வீடு முழுவதும் நிரம்பும். பண வரவு பேசாத உறவுகளையும் பேச வைக்கும். பணத்தைப் பார்த்த சில போலியான உறவுகள் உண்மையானவர்கள் போல் உருகுவார்கள். ஆடம்பர விருந்து உபசாரங்கள் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். மீன ராசியினரின் காட்டில் அடை மழைதான். ராகு மேஷ ராசியில் உள்ள நட்சத்திரப் பாதங்களான கிருத்திகை, பரணி, அசுவினி நட்சத்திரங்களில் மூலம் ராசியை கடக்கிறார்.

  12.4.2022 முதல்14.6.2022 வரை ராகுவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்:சூரியன் மீனத்திற்கு ஆறாம் அதிபதி. இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சனை இனி இல்லை. பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும். உங்களை ஏமாற்றி பணம் பறித்தவர்கள் கூட பணத்தை கொடுக்க முன் வருவார்கள். வராக்கடன்கள் வசூலாகும். வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்வில் வசந்தம் வீசும். நோய் தாக்கம் கட்டுக்குள் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மேலதிகாரிகளால் முதலாளிகளால் சக ஊழியர்களால் ஏற்பட்ட தொந்தரவு அகலும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய ஊருக்கு வேலை மாற்றம், பதவி உயர்வு உண்டாகும்.

  15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:பரணி சுக்ரனின் நட்சத்திரம். சுக்ரன் மீனத்திற்கு 3 , 8ம் அதிபதி. சுக்ரன் மீனத்திற்கு அஷ்டமாதிபதிஎன்பதால் சுபத் தன்மை குறைவுபடும்.இனம் புரியாத மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். தைரியம் , நம்பிக்கை, ஞாபகசக்தி குறையும். காது வலி, செவித்திறன் குறைபாடு வரும். சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய நேரலாம். இது நாள் வரை முன்னோர்கள் கடைபிடித்து வந்த கொள்கைகளிலிருந்து மாறுபட்டு செயல்பட நேரும். அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்ய நேரும். அலைச்சல் மிகுதியாகும். வேலைப் பளு அதிகமாகும். சிலருக்கு உயில் எழுத வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். சிலருக்கு ஆவணங்கள் தொடர்பான பிரச்சனையால் வழக்கு உருவாகலாம். அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு உருவாகும். சிலர் போக மிகுதியால் போக்சோ சட்டத்தில் சிக்கலாம்.

  கோட்சாரத்தில் ராசிக்கு 8ல் சுக்ரனின் வீட்டில் சஞ்சரிக்கும் கேதுவின் நட்சத்திரத்தில் கோட்சார ராகு பயணிக்கும் காலம். இதுவரை மறைமுக தொல்லை கொடுத்த சகோதரிகள் நேரடியாக இறந்த தாயின் நகைகள் மற்றும் உடைமைகளில் உரிமைகோரி தகராறு செய்வார்கள். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதால் உடன் பிறந்தவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு அலுவலகத்தில் எதிர் பாலின ஊழியர்களால் வம்பு, வழக்கு ஏற்படலாம். சிலரின் மனைவி வருமானத்திற்கு சம்பந்தமில்லாத ஆடம்பர பொருட்கள் கேட்கலாம். சில பெண்களுக்கு குடும்ப உறவுகளுக்கு சம்பளம் இல்லாத வேலைக்காரியாக வீட்டு வேலை செய்து சலிப்பு உண்டாகும். ஆக மொத்தத்தில் எதிர் பாலினத்தவரால் மன உளைச்சல் உருவாகும்.

  21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்:கோட்சாரத்தில் ராசிக்கு 8ல் சஞ்சரிக்கும் கோட்சார கேதுவின் நட்சத்திரத்தில் ராகு பயணிக்கும் காலம் என்பதால் எந்த செயலையும் நினைத்தவுடன் அவசரமாக செய்யாமல் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்பட வேண்டும். உங்களின் முயற்சிகள் சிறு மன சஞ்சலத்திற்கு பிறகு காரிய சித்தியை ஏற்படுத்தி தரும்.

  அலைச்சல் மிகுதியாக இருக்கும். பங்குச் சந்தை, ரேஸ், லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் குறைப்பது நல்லது. பங்குச் சந்தை முதலீடுகள் உங்களை நிலை தடுமாற வைக்கும். வரவு இல்லாமல் இருந்தால் கூட பரவாயில்லை. முதலுக்கே மோசமாக முடியும் என்பதால் கவனம் தேவை.

  8ம்மிட கேதுவின் பொது பலன்கள்: வயோதிகர் களுக்கு ஆயுள் பற்றிய சிந்தனை மிகுதியாகும். எந்த வேலை செய்தாலும் மன நிறைவு இருக்காது. பொய்யான வதந்திகளால் பெயர் கெடும். அவமானம் தேடி வரும். நேரத்திற்கு உண்ண உறங்க முடியாமல் வெறுமை உணர்வு உங்களை ஆட்டுவிக்கும்.

  சுக போகத்தை கூட மனக் கஷ்டத்துடனேயே அனுபவிக்க நேரும்.வாழ்வின் நடந்த பல்வேறு அவமானங்களை நினைத்து மனம் வெறுத்து சிலர் இல்வாழ்க்கையில் இருந்து விடுபட்டு சந்நியாச மனநிலைக்கு தள்ளப்படுவார்கள். தனியாக அமைதியாக இருப்பதையே மனம் விரும்பும். புதிய கோர்ட், கேஸ் பிரச்சனை உருவாகலாம்.ஆக மொத்தத்தில் கேது பகவான் உங்களை சந்நியாச நிலைக்கு தள்ளுவதில் மிகவும் கவனமாக இருப்பார். மனிதன் பிறக்கும் போது பிரச்சனையும் உடன் பிறந்தது என்பதால் கடவுள் நம்பிக்கையுடன் சந்தோசமாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.கேது துலாம் ராசியில் உள்ள விசாகம், சுவாதி, சித்திரை நட்சத்திரங்கள் மூலம் தன் பயணத்தை செலுத்துகிறார்/

  12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்:விசாகம் குருவின் நட்சத்திரம். குரு மீனத்திற்கு ராசி அதிபதி மற்றும் 10ம் அதிபதி. பத்தாமிடம் என்பது கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம். ஜனன கால ரீதியாக கேது தசை இல்லாதவர்களுக்கு தொழில் பெருகும். கோட்சார குரு ராசியில்நின்று 5,9ம் இடத்தை பார்ப்பதால் நியாய தர்மத்திற்கு கட்டுப்பட்டு சம்பாதித்து புகழடைவீர்கள். மேலும் குரு ஏப்ரல் 2023க்கு பிறகு தன ஸ்தானத்தில் ராகுவுடன் இணையும் காலத்திலும் தொழிலால் புகழ் அந்தஸ்து கவுரவம் உயரும். குறுக்கு வழியை கையாண்டால் எட்டாமிட கேது சட்ட சிக்கலில் மாட்டி விடுவார் என்பதால் கவனம் தேவை.

  18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்:கோட்சாரத்தில் ராசிக்கு 2ல் சஞ்சரிக்கும் ராகுவின் நட்சத்திரத்தில் கோட்சார கேது பயணிக்கும் காலத்தில் நீங்கள் பேசும் வார்த்தைகளே உங்களை கட்டம் கட்டி நிற்க வைக்கும் என்பதால் வாக்கில் நிதானம் தேவை. உங்களின் கவனக் குறைவான செயல்களால் மறைமுக எதிரிகள் உருவாகலாம். நம்பியவர்களே உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். பிறர் பிரச்சனைகளை உங்கள் தலையில் இழுத்துப் போட்டு அசட்டு தைரியத்துடன் செயல்படுவது கெட்ட பெயரை உண்டாக்கும் என்ப தால் ஒதுங்கி நிற்பது நல்லது.

  27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்:சித்திரை செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் மீனத்திற்கு 2,9ம் அதிபதி என்பதால் இது வரை நடக்காமல் தடை தாமதமாக இருந்த நல்ல விஷயங்கள் நடக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். குல தெய்வ அருளும் முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். கடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் நிவாரணம் கிடைக்கப்பெறுவீர்கள். வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாமல் தவித்தவர்கள் நிம்மதி பெரு மூச்சு விடும் நேரம். உறவினர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தேவையற்ற வாக்கு வாதங்கள் சிறு சண்டைகள் வரலாம். அரசின் உதவிகள், நலத்திட்டங்கள் உங்களை தேடி வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் இழுபறியாக இருக்கும்.

  பெண்கள்:பெண்களுக்கு வீட்டிலும் வேலை பார்க்கும் இடத்திலும் நிம்மதியான நிலை நீடிக்கும். வீட்டுப் பெரியவர்களின் அன்பும், ஆசியும் கிடைக்கும். தங்கம், வெள்ளி பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். சிலர் தொழில், உத்தியோக நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ நேரும்.

  உத்தியோகஸ்தர்கள்:நேர்மையான வழியில் உழைப்பவர்களுக்கு 8 மிட கேது உபரி வருமானம் பெற்றுத் தருவார்.ஊதிய உயர்வு நிச்சயம் உண்டு. முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் மேல் வீண் பழி சுமத்தப்படலாம். அவப் பெயர் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

  உண்மையாக உழைப்பவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் எந்த அசுபமும் நடைபெறாது. ஆனால் குறுக்கு வழியை நாடுபவர்களுக்கு அதற்கான பலன் கிடைக்கும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×