என் மலர்
மீனம்
2025 மாசி மாத ராசிபலன்
வேகமும், விவேகமும் ஒருசேர அமைந்த மீன ராசி நேயர்களே!
மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்தக்தில் உங்கள் ராசிநாதன் குரு, சகாய ஸ்தானத்தில் பலம்பெற்று சஞ்சரிக்கிறார். அதுமட்டுமல்ல தானாதிபதி செவ்வாயும், வக்ர நிர்வத்தியாகப் போகிறார். எனவே சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாகவே அமையும்.
செய் தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். நீடித்த நோயில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிக்க இயலும். வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர்.
சூரியன் - சனி சேர்க்கை
இந்த மாதம் முழுவதும் கும்ப ராசியில் சூரியன் - சனி சேர்க்கை ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு விரயாதிபதியாக விளங்குபவர் சனி. 6-க்கு அதிபதியாக விளங்குபவர் சூரியன். இவர்கள் இருவரும் இணையும் இந்த நேரம் நல்ல பலன்களே நடைபெறும். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
அரசாங்க வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். கடமையைக் கண்ணும், கருத்துமாகச் செய்வீர்கள். உத்தியோகத்தில் திடீர் முன்னேற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சியடைவீர்கள். கடன் சுமை பாதிக்கு மேல் குறையும். கவலை என்ற மூன்றெழுத்து, உங்கள் அகராதியை விட்டு அகலும். இக்காலத்தில் 'உத்தியோகத்தில் இருந்து விடுபட்டு, சுயதொழில் செய்யலாமா?' என்று சிந்திப்பீர்கள். உங்கள் சிந்தனைகள் அனைத்தும் வெற்றி பெறும் நேரம் இது.
செவ்வாய் வக்ர நிவர்த்தி
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மாசி 9-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். தன - பாக்கியாதிபதி பலம் பெறும் இந்த நேரம் பொன்னான நேரமாகும். பொருளாதாரம் திருப்தி தரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். கடுமையாக முயற்சித்தும் நடைபெறாத காரியங்கள், இப்பொழுது நடைபெறும். கடமையைச் செவ்வனே செய்து பாராட்டு பெறுவீர்கள்.
உத்தியோகத்தில் உங்கள் திறமை பரிசீலிக்கப்படும். ஒரு சிலருக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கலாம். நல்ல சம்பவங்கள் பலவும் நடைபெறும் நேரம் இது. தொழில் வெற்றிநடைபோடும். புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து, பொருளாதாரம் உயர வழிகாட்டுவர். பாகப் பிரிவினை சுமுகமாக முடியும். சகோதர ஒற்றுமை பலப்படும்.
மீன - புதன் சஞ்சாரம்
மாசி 14-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர் புதன். அவர் நீச்சம் பெறுவது நன்மைதான். தாய்வழி ஆதரவு கிடைக்கும். கல்யாணக் கனவுகள் நனவாகும். கடமையைச் செவ்வனே செய்து வெற்றி பெறுவீர்கள். இடம், பூமி வாங்குவதில் இருந்த பிரச்சினைகள் அகலும்.
மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்பு மாறும். நீண்டநாள் முயற்சி கை கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு உயரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.
கலைஞர்களுக்கு நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் வெற்றி வந்து சேரும். பெண்கள் தங்கள் காதுக்கு வரும் சுபச் செய்திகளால் மகிழ்ச்சியடைவர். இடமாற்றம் இனிமை தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நட்கள்:-
பிப்ரவரி: 20, 21, 22, 26, 27, மார்ச்: 4, 5, 8, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.






