என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன் - 7 செப்டம்பர் 2024
வீண்பழிகள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். நண்பர்களால் பிரச்சனைகள் உருவாகலாம். வியாபாரப் போட்டி உண்டு. முன்கோபத்தால் சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 6 செப்டம்பர் 2024
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நண்பர்களை நம்பி ஒப்படைக்கும் பொறுப்புகள் நல்லவிதம் நடைபெறும். பண வரவு திருப்தியளிக்கும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 5 செப்டம்பர் 2024
பிரியமானவர்களை சந்தித்து மகிழும் நாள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். தொடர்கதையாய் வந்த கடன்சுமை குறையும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 4 செப்டம்பர் 2024
ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரியும் நாள். குடும்பத்தில் ஏற்படும் திடீர் செலவுகளை சமாளிப்பீர்கள். அன்னிய தேசத்திலிருந்து உத்தியோகத்திற்கான அழைப்புகள் வரலாம்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 3 செப்டம்பர் 2024
யோகமான நாள். திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தீட்டிய திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். பாராட்டும், புகழும் கூடும். உத்தியோகத்தில் நல்ல நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 2 செப்டம்பர் 2024
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ் சேர்ப்பீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 1 செப்டம்பர் 2024
வளர்ச்சி மேலோங்கும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். பாதியில் நின்ற பணிகளை சுறுசுறுப்போடு செய்து முடிப்பீர்கள். விலகிச்சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவர்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 31 ஆகஸ்ட் 2024
யோகமான நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை கூடும். வியாபார விருத்தி உண்டு. உடல்நலனில் கவனம் தேவை. அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 30 ஆகஸ்ட் 2024
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு உண்டு. மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதல் செலவு செய்வீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 29 ஆகஸ்ட் 2024
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் உங்கள் நிர்வாகத்திறமை பளிச்சிடும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 28 ஆகஸ்ட் 2024
இனிமையான நாள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டு. தொழில் வளர்ச்சிக்கு பால்ய நண்பர்கள் பக்கபலமாக இருப்பர்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 27 ஆகஸ்ட் 2024
யோகமான நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். சுபகாரிய பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும்.






