என் மலர்tooltip icon

    துலாம்

    வார ராசிபலன் 7.12.2025 முதல் 13.12.2025 வரை

    7.12.2025 முதல் 13.12.2025 வரை

    துலாம்

    வளர்ச்சிகள் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் தன ஸ்தானத்தில் சூரியன் மற்றும் புதனுடன் சேர்ந்துள்ளார். சனி பகவான் வக்ர நிவர்த்தியாகிறார். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்து இருந்த நல்ல காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தைரியம், தன்நம்பிக்கை அதிகரிக்கும்.

    மிகப்பெரிய வெற்றி கிடைக்கப் போகிறது. உங்களுக்கு இருந்த சிக்கல்கள் நீங்கி நல்ல நேரம் தொடங்கப்போகிறது. திருமணத்தடை அகன்று நல்ல வரன் பற்றிய தகவல் கிடைக்கும். அயல் நாட்டிலிருந்து தாயகம் திரும்ப முடியாமல் இருந்தவர்கள் வீடு திரும்புவார்கள். குடும்பத்தில் காரணமின்றி நடந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தன வரவு மட்டற்ற மகிழ்ச்சி தரும்.

    கடன் தொல்லை குறையும். செவ்வாய்க்கும் சனிக்கும் சம்பந்தம் இருப்பதால் சிலருக்கு தொழில் கூட்டு பிரியும். அல்லது நம்பியவர்களால் ஏமாற்றம், மன வருத்தம் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் கவனம் தேவை. வரலாற்று புகழ்மிக்க ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள். வழக்குகளால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும். தினமும் லலிதா சகஸ்ர நாமம் படிப்பதால் எண்ணங்கள் ஈடேரும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×