என் மலர்tooltip icon

    துலாம்

    இந்தவார ராசிபலன்

    20.11.2023 முதல் 26.11.2023 வரை

    நன்மையும், மேன்மையும் உண்டாகும் வாரம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன் மூன்று கிரகச் சேர்க்கை. லவுகீக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துவிதமான சுக போக பொருட்கள் மீதும் நாட்டம் சற்று மிகுதியாகும். தொழில், உத்தியோகத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உருவாகும். தொழிலை விரிவுபடுத்த தேவையான கடன் கிடைக்கும். உடன் வேலை பார்ப்பவர்களால் ஏற்பட்ட கவுரவக் குறைவு அகலும். சனி, செவ்வாய் சம்பந்தம் விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்று பணமாகி விடும் அல்லது வேறு புது சொத்தாகி விடும். சொத்து வாங்க தாயின் ஆதரவு கிடைக்கும்.மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் கூடும்.

    ஆன்லைன் வர்த்தகம் செய்பவர்களுக்கு ஏற்றமான காலம்.தம்பதிகளிடையே நிலவிய கருத்து வேற்றுமை மறையும். திருமண முயற்சி பலிக்கும்.கலைத் துறையைச் சேர்த்த பெண்களுக்கு வாய்ப்புகள் தடைபடும். வீண் செலவுகளை குறைத்து வருமானத்திற்கு ஏற்ப திட்டமிட்டு நிதானமாக செயல்பட்டால் கடன் சுமை குறையும். பவுர்ணமியன்று அஷ்டலட்சுமியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×