என் மலர்tooltip icon

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    31.7.2023 முதல் 6.8.2023 வரை

    லாபகரமான வாரம். லாப ஸ்தானத்தில் புதன், சுக்ரன், செவ்வாய். லாப அதிபதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை அதிகரிக்கும். பங்குச் சந்தையில் நாட்டம் மிகுதியாகும். பலருக்கு குறுகிய காலத்தில் பங்குச் சந்தையில் எதிர்பாராத மிகுதியான பொருள் வரவு உண்டாகும். ஜனன கால ஜாதகத்தில் தசா - புத்தி சாதகமாக இருந்தால் பல துலா ராசியினருக்கு புதிய திருப்புமுனைகள் உண்டாகும்.

    வெளிநாட்டில் இருப்பவர்கள் பூர்வீகம் வந்து செட்டிலாக முயற்சிக்கலாம். சிலருக்கு எதிர்பாலினத்தவரால் வம்பு உண்டாகும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும். ஆரோக்கிய குறைபாடு அதிகரித்து அதிக வைத்திய செலவு செய்ய நேரும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். பொன், பொருள், ஆடம்பரப் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் கம்பெனி சார்பாக வெளிநாட்டில் சென்று பணிபுரிகின்ற வாய்ப்பு இருக்கும். ஆடிப்பெருக்கன்று சுப மங்களப் பொருட்கள் தானம் வழங்கவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×