என் மலர்
துலாம்
வார ராசிபலன் 4.1.2026 முதல் 10.1.2026 வரை
4.1.2026 முதல் 10.1.2026 வரை
துலாம்
தெய்வ அனுகூலமும், அதிர்ஷ்டமும் வழி நடத்தும் வாரம். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சுக்கிரனுக்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது. புகழ், அந்தஸ்து, ஆளுமை அதிகரிக்கும். இனம் புரியாத கவலைகள் குறையும். ராசிக்கு குரு பார்வை இருப்பதால் எதிர் நீச்சல் போட்டு இழந்ததை மீட்பீர்கள். நண்பர்கள், சகோதரர்களால் கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு சுப தேவைக்காக கடன் வாங்கும் சூழல் உண்டாகும்.
சொத்து வாங்கும் முயற்சிகள் சித்திக்கும். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். திருமண வாய்ப்புகள் தேடி வரும். ஓயாத உழைப்பால் அசதி மன உளைச்சல் ஏற்படும். விரும்பிய வேலையில் சேர சிபாரிசுக்கு அலைய நேரும். ஆரோக்கியம் சிறக்கும். கொடுத்து வாக்குறுதியை காப்பாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். சங்கடங்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் மாற்றும் வல்லமை இறைபக்திக்கு உண்டு என்பதால் சரபேஸ்வரரை வழிபட்டு நலம் பெறவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






