என் மலர்
துலாம்
வார ராசிபலன் 28.12.2025 முதல் 3.1.2026 வரை
28.12.2025 முதல் 3.1.2026 வரை
துலாம்
தடைகள் தகரும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தேவையற்ற பேச்சுக்கள், வாக்கு வாதங்கள் குறையும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வருமானம் உயரும். வருமானம் தரக்கூடிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். கைவிட்டுப் போனது எல்லாம் கிடைக்கும். திருமணத் தடை அகலும். புத்திரப் பிராப்தம் கிடைக்கும்.
பெற்றோர்கள், பெரியோர்கள், முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க மாற்று முறை வைத்தியத்தை நாடுவீர்கள். பொருளாதாரம், ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை திருப்தியான வாரம் என்பதால் நிம்மதியாக இருக்கலாம். மேலும் நன்மையை அதிகரிக்க குல தெய்வம், முன்னோர்களை வழிபடவும்.
31.12.2025 அன்று காலை 9.23 மணி முதல் 2.1.2026 அன்று காலை 9.26 மணி வரை இருப்பதால் அன்றைய தினம் யாருக்கும் பணம் கடனாக தர, வாங்கக் கூடாது. நன்மையும் தீமையும் கலந்த வாரமாகவே இருக்கும் என்பதால் ஒரு செயலில் இறங்கும் முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். திருவாதிரையன்று நடராஜருக்கு கரும்புச் சாறு அபிஷேகம் செய்து வழிபடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






