search icon
என் மலர்tooltip icon

    துலாம் - வார பலன்கள்

    துலாம்

    இந்தவார ராசிபலன்

    20.5.2024 முதல் 26.5.2024 வரை

    குடும்ப தோஷம் விலகும் வாரம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு குரு மற்றும் ராசி அதிபதி சுக்ரன் பார்வை பதிவதால் குடும்ப தோஷம், கண் திருஷ்டி பாதிப்பு விலகும். குடும்ப உறவுகளின் பேச்சுக்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். பொன், பொருள், ஆடம்பரச் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த அரசு உத்தியோகம் கிடைக்கும். சக ஊழியர்களிடம் வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும்.வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல் உண்டாகும். வெளிநாட்டு தொழில், வேலை வாய்ப்பு கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.

    வாழ்க்கைத் துணையின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். பொதுநலச் செயலால் சமுதாய அந்தஸ்து கூடும். வேலைப்பளு மிகுதியாகும். தேவையற்ற அலைச்சலால் உடல் அசதி உண்டாகும். கணவன், மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு புதிய பாதையை அமைத்து கொடுப்பீர்கள். திருமணம், வீடு, வாகன யோகம், சுப விரயங்கள் உண்டு. நவகிரக சுக்ரனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    13.5.2024 முதல் 19.5.2024 வரை

    சுபச் செலவுகள் உண்டாகும் வாரம். ராசியை ராசி அதிபதி சுக்ரனுடன் இணைந்து புதன் பார்ப்பது ஸ்ரீபதி யோகம். மகா விஷ்ணு சமேத மகாலட்சுமியின் அருட்கடாட்சம் உங்களுக்கு கிடைக்கும். புதன் உங்களின் பாக்கிய அதிபதி என்பதால் குலதெய்வ அனுகிரகமும் முன்னோர்களின் நல்லாசியும் பக்க பலமாக இருக்கும். ஆன்மீக சுற்றுப்பயணம் மற்றும் மகான்களின் சந்திப்பு கிடைக்கும்.

    அழகு ஆடம்பர பொருட்கள், தங்க நகைகள், சில சுப விரயங்கள் உண்டு. சிலருக்கு பூர்வீகச் சொத்து வழக்கில் திருப்பம் ஏற்படலாம்.முன்னோர்களின் சொத்து தொடர்பான பாகப் பிரிவினைகள் நடக்கலாம். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். இளைய சகோதர, சகோதரிகளுக்கு திருமணம் நடக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வில், பொதுத் தேர்வில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. சிலர் உயர் கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்லலாம்.

    விவசாயிகளின் தேவைக்கு கடன் கிடைக்கும். நல்ல விளைச்சலும், லாபமும் உண்டாகும். புதிய வேலை பற்றிய எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். பெண்களுக்கு குடும்ப சுமைகள், பொறுப்புகள் அதிகரிக்கும். பரம்பரை வியாதிகளால் ஏற்பட்ட இன்னல்கள் சீராகும். மகாவிஷ்ணுவை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிபலன்

    6.5.2024 முதல் 12.5.2024 வரை

    தன் நிறைவு உண்டாகும் வாரம். ராசிக்கு சுக்ரன், சூரியன், புதன், செவ்வாய் பார்வை. அஷ்டம குருவால் பொருளாதார நிலை சீராகும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை மாறும். பற்றாக் குறை வருமானத்தில் குடும்பத்தை நடத்தியவர்களுக்கு கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் விதத்தில் தொழிலில் உயர்வு உண்டாகும்.

    வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பம் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்ததாக இருக்கும். வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் நல்ல நேரம். புதிய சொத்துக்கள், உயர்ரக வாகனங்கள் சேரும்.

    மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சிக்கவும். தேவையற்ற கற்பனை, சிந்தனைகளை தவிர்க்கவும்.மனதிற்கு பிடித்த வரன் அமையும். அரசு அங்கீகாரமற்ற வங்கிகளில் முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். உடல் நிலை தேறும். 8.5.2024 மாலை 7.06 முதல் 10.5.2024 இரவு 10.25 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடனிருப்போரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். அமாவாசையன்று பித்ருக்களை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிபலன்

    29.04.2024 முதல் 05.05.2024 வரை

    விபரீத ராஜயோகம். உச்சம் பெற்ற லாப அதிபதி சூரியன் ராசியை பார்க்கிறார். அஷ்டம ஸ்தானத்தில் நிற்கும் குரு தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். ஆடம்பர குடும்ப விருந்து உபசாரங்கள், விழாக்களில் கலந்து கொள்வீர்கள். வருமானத் தடை அகலும். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுப நிகழ்வுகள் நடக்கும்.

    புதிய தொழில் ஒப்பந்தங்கள் வந்து சேரும். குலத்தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். சிலருக்கு காதல் திருமணம் கைகூடும். மறு திருமணம் நடக்கும். விவாகரத்து வழக்கு சாதகமாகும். சொத்துக்கள் விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் திருமண முயற்சியில் அலைச்சல் மிகுந்த பயணம் உண்டு. மனைவி வழி உறவுகளுடன் நிலவிய கருத்து வேறுபாடு சீராகும்.

    பிள்ளைகள் கல்வி, தொழிலுக்காக இடம் பெயரலாம். பெண்களுக்கு தாய் வழி ஆதரவு கிடைக்கும். ராசியை செவ்வாய் பார்ப்பதால் முக்கிய பணிகள் சிறிய தடுமாற்றத்திற்குப் பிறகு வெற்றி தரும். புதிய தொழில் முதலீட்டிற்கு சுய ஜாதக ஒப்பீடு அவசியம். சிலர் வேலையை மாற்றுவார்கள். தாய்மாமனுடன் ஏற்பட்ட மன பேதம் மறையும். ஸ்ரீ தான்ய லட்சுமியை வழிபடவும்

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்தவார ராசிபலன்

    22.4.2024 முதல் 28.4.2024 வரை

    துக்கம் அகலும் வாரம். ராசிக்கு சூரியன், குரு பார்வை. சூரியன் குரு சம்பந்தம் சிவராஜ யோகம். இது போல் ராசிக்கு 7ல் சூரியன் குரு சேரும் கிரக அமைப்பு மீண்டும் 12 ஆண்டுகளுக்குப் பிறகே ஏற்படும். மே1,2024 வரை நீடிக்கப் போகும் இந்த கிரக நிலவரம் துலாம் ராசியினருக்கு இழந்ததை மீட்டுக் கொடுக்கும் அமைப்பாகும். கூட்டுக் குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் கட்டுப்படும். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் துறையினரின் வருமானம் அதிகரிக்கும். புதிய தொழில் துவங்கும் திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகம் தொடர்பான புதிய முயற்சிகள் வெற்றி பெறும்.

    இதுவரை தொழில், வேலை பற்றி சிந்திக்காதவர்கள் கூட வருமானம் சம்பாத்தியம் பற்றி யோசிப்பார்கள். வாரத்தின் பின் பகுதியில் ராசி அதிபதி சுக்ரன் ராசியை பார்ப்பதால் பெண்களுக்கு ஆடம்பர பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவதில் நாட்டம் மிகுதியாகும். வீடு, வாகன பிராப்தம் உண்டு. சிலருக்கு சகோதர, சகோதரிகள் அல்லது தந்தையின் கடன் மற்றும் ஜாமீன் தொகைக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய சூழல் உண்டாகும்.வெளிநாட்டு வேலை முயற்சி கைகூடும். சித்ரா பவுர்ணமி யன்று அம்பிகைக்கு தயிர் சாதம் படைத்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்தவார ராசிபலன்

    15.4.2024 முதல் 21.4.2024 வரை

    அனுகூலமான வாரம். ராசிக்கு குரு மற்றும் உச்ச சூரியனின் பார்வை. ஆன்ம பலம் பெருகும்.நம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும் துலாம் ராசியினரின் காட்டில் இன்ப மழைதான். மகன், மகளுக்கு விரும்பிய விதத்தில் வரன் அமையும். ஒரு சிலர் வேலை மாற்றம் செய்வார்கள் அல்லது வேலையிலிருந்து தொழிலுக்கு மாறுவார்கள். தொழில் உத்தியோகத்தில் வேலைப் பளு மிகுதியாக இருக்கும்.

    உச்சம் பெற்ற ராசி அதிபதி சுக்ரன் 6ல் ராகுவுடன் இருப்பதால் அரசு, தனியார் துறையில் இருப்பவர்கள் வேலையில் விழிப்புடன் இருக்க வேண்டும் ஆதார் கார்டு, ஏடிஎம் கார்டு, பாஸ் புக், ஆர்.சி. புக் போன்ற ஆவணங்களையும் பணத்தையும் கவனமாக கையாள வேண்டும்.

    6-ம்மிட ராகுவால் ஏற்படும் உடல் நிலையை சீராக்க உணவு கட்டுப்பாடு தேவை. குருவும், சூரியனும் முழுவலுவுடன் இருப்பதால் திருமணத் தடை அகலும். முன்னோர்களின் பூர்வீகச் சொத்து தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளது. ஸ்திர சொத்துக்கள் சேரும்.குருவின் பார்வை படும் இடங்கள் சாதகமாக இருப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்று விடும். எனினும் மன அமைதியையும், ஆனந்தத்தையும் அதிகரிக்க தினமும் ஆதித்ய ஹ்ருதயம் கேட்பதும், படிப்பதும் இன்னல்களை நீக்கும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்தவார ராசிபலன்

    8.4.2024 முதல் 14.4.2024 வரை

    நிம்மதியான வாரம். ராசி அதிபதி சுக்ரன் உச்சம் பெறுவதால். பொருள் சேர்க்கை உண்டாகும். துணிச்சலாக செயல்பட்டு எதிர்பார்த்த வருமானத்தை அடைய முடியும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். பெண்க ளுக்கு யோகமான வாரம். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னல்களும், இம்சைகளும், துயரங்களும் விலகும். விவாகரத்து வழக்கிற்கும் தீர்ப்பு கிடைக்கும். ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் தடைபட்ட, நிலுவையில் உள்ள சில முக்கிய பணிகளை இப்பொழுது சீர் செய்யலாம். கூட்டுத் தொழிலில் நிலவிய கருத்து வேறுபாட்டில் புரிதல் உண்டாகும். விலகிச் சென்ற நண்பர்களின் நட்பு துளிர் விடும். பணியாளர்களுக்கு சக ஊழியர்களால் பணியில் நிலவிய சங்கடங்கள் மாறும். சிலர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த தொழில் முயற்சியில் ஈடுபடலாம்.

    11.4.2024 அன்று காலை 8.40 முதல் 13.4.2024 மதியம் 12.44 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பொருள் விரயம் மிகுதியாக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பாது காக்கவும். யாருக்கும் வாக்கு கொடுக்க கூடாது. 6-ம்மிட ராகு மற்றும் 12-ம்மிட கேதுவின் தாக்கம் குறைய செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை, காளியை வணங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்தவார ராசிபலன்

    1.4.2024 முதல் 7.4.2024 வரை

    சுமாரான வாரம். ராசி அதிபதி சுக்ரன் லாப அதிபதி சூரியனுடன் 6-ல் உச்சம். அவரே அஷ்டமாதிபதியாகி 6-ல் மறைவதால் சிலருக்கு விபரீத ராஜயோகம் ஏற்படும். தோற்றப் பொலிவு உண்டாகும். புத்துணர்ச்சி பெறுவீர்கள். எதிர்காலம் சார்ந்த தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். இந்த வாரத்தில் வீட்டுக்க டன், தொழில் விரிவாக்க கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிரந்தர வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு பணிக் காலம் முடிந்தப் பிறகும் பதவி நீடிப்புகள் ஏற்படலாம். உத்தியோகத்தின் மூலம் சமுதாய அங்கீகாரம் உயரும். திருமணத்திற்கு ஏற்ற காலம்.

    பார்த்துச் சென்ற வரனிடமிருந்து நல்ல தகவல் கிடைக்கும். தாய்வழிச் சொத்திற்காக தாய் மாமாவுடன் கருத்து வேறுபாடு, பகைமை உருவாகும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை.ஆன்மீக எண்ணங்கள் சற்று அதிகரிக்கும். சில நீண்ட நாளைய குழப்பங்களுக்கு முடிவு கிடைக்கும்.பெண்க ளுக்கு தந்தையின் பூர்வீக வீடு, ஆடம்பர பொருட்கள், நகை கிடைக்கும்.கனவு வீடு கட்டு வீர்கள். தம்பதிகளிடம் ஒற்றுமை உணர்வு மேலோங் கும். அஷ்ட லட்சுமி வழிபாடு உயர்வினைத்தரும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்தவார ராசிபலன்

    25.3.2024 முதல் 31.3.2024 வரை

    சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம். 6-ம்மிட ராகுவால் வேலையை விட்டு விடலாமா என்று குழப்பத்தில் இருந்தவர்களுக்கு உச்ச சுக்கிரனால் சாதகமான சூழ்நிலைகள் அமைந்து வேலையை விட வேண்டிய நிலை நீங்கும். உத்தியோ கத்தில் நல்ல பெயர் உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டு வேலை முயற்சி கைகூடும். வியாபாரி களுக்கு தொழிலில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும்.நண்பர்களின் ஆதரவால் முக்கிய சில பிரச்சினைகள் முடிவிற்கு வரும். பூர்வீகம் தொடர்பான தடைப்பட்ட சில செயல்கள் நிறைவடையும்.வீடு மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம் என பல்வேறு மாற்றத்தையும், ஏற்றத்தையும் சந்திப்பீர்கள்.

    கடன் பெற்று நகை அல்லது வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். வீடு, வாகனம் போன்ற சுபச் செலவும் ஏற்படலாம். சுக்ரன் அஷ்டமாதிபதியாகி சூரியன் ராகுவுடன் சேர்க்கை பெறுவதால் பொருளாதார நெருக்கடி மிகுதியாக இருக்கும். வரவிற்கு மீறிய செலவுகள் உண்டாகும். கண் திருஷ்டி, போட்டி-பொறாமை போன்ற வற்றால் வைத்தியச் செலவு உருவாகும். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்தவார ராசிபலன்

    18.3.2024 முதல் 24.3.2024 வரை

    திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் நிறைந்த வாரம். ராசியை குரு பார்ப்பதால் நிறைந்த அறிவு, திறமை இருந்தும் பயன்படுத்தவோ சாதிக்கவோ முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். இன்னல்களும் இடைஞ்சல்களும் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் செயல்வடிவம் பெறும். சிலர் அடிமைத் தொழிலைவிட்டு விலகி சுய தொழில் துவங்கலாம். சக ஊழியர்களால் அதிக நன்மை கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் உயரும்.புதிய அனுபவம் உண்டாகும். அலுவலக பணிகளை உற்சாகமாக வழக்கத்தைவிட குறைவான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். திருமணத்தடை அகலும்.

    குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். பழைய பாக்கிகள் வசூலாகும். அதனால் கடன்களும், சிக்கல்களும் தீரும். பெண்களின் வெற்றிக்கு கணவரின் ஆதரவு இருக்கும். மாமியாரின் பாராட்டு மகிழ்சியைத் தரும். வாக்கு ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பேச்சில் நிதானமும் பொறுமையும் தேவை. உங்களை வாட்டிய கடன் பிரச்சினைகள் தீரும். அநாவசிய செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கால பைரவரை அரளி மாலை அணிவித்து வழி படவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்தவார ராசிபலன்

    11.3.2024 முதல் 17.3.2024 வரை

    புண்ணிய பலன்கள் கூடும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசி அதிபதி சுக்ரன் 2,7-ம் அதிபதி செவ்வாய் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சனியுடன் சேர்க்கை பெறுவது துலாத்திற்கு மிக யோகம். குலதெய்வம் மற்றும் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். பேச்சை மூலதனமாக கொண்ட விற்பனை பிரதிநிதிகள், வக்கீல்கள், ஆசிரியர்களுக்கு, ஆடிட்டிங், நிதி நிர்வாகம் போன்ற துறையில் உள்ளவர்களுக்கு வருமானம் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும். வெளிநாடு செல்வார்கள். கடன் சுமை குறையும்.திருமணம் போன்ற சுப காரியங்களில் இருந்த தடைகள் அகலும்.

    காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். வீடு கட்டும் பணி துரிதமாகும்.அதற்கு தேவையான நிதியுதவி கிடைக்கும். சிலர் புதிய தொழில் அல்லது உத்தியோகத்திற்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம்.. உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். 14.3.2024 இரவு 10.39 முதல் 17.3.2024 காலை 4.21 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைக்கக் கூடாது. தினமும் சிவபுராணம் படிக்க நவகிரகத்தால் நன்மைகள் நடக்கும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்தவார ராசிபலன்

    4.3.2024 முதல் 10.3.2024 வரை

    செலவு குறைந்து சேமிப்பு உயரும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் உச்சம் பெற்ற 2,7-ம் அதிபதி செவ்வாயுடன் கேந்திரம் பெற்றதால் உற்சாகமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். நிரந்தரமற்ற வேலையில் இருப்ப வர்களுக்கு பணி நிரந்தரமாகும். தொழிலில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். வேலைக்கான நேர்காண வில் வெற்றி உறுதி. தந்தை விருப்ப ஓய்வு பெறுவார். கணவன், மனைவிக்குள் பாசம் அதிகரிக்கும். ராசிக்கு குருப் பார்வை மே மாதம் 1-ந் தேதி வரை மட்டுமே கிடைக்கப் போகிறது. எனவே முக்கியப் பணிகளை விரைந்து முடிப்பது நல்லது.

    திருமணம், குழந்தைபேறு, வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களில் இதுவரை இருந்த தடைகள் நீங்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். கட்டிய வீட்டை பழுது பார்ப்பது அல்லது புதிய மனை வாங்கி வீடு கட்டுவது போன்ற செலவுகளை மேற்கொள்ள நேரும். கல்வியில் நிலவிய மந்த நிலை மாறும். தலைமறைவாக வாழ்ந்தவர்கள் வீடு திரும்புவார்கள். தொழில், உத்தியோக ரீதியான வெளியூர், வெளி நாட்டு பயணங்கள் அமையும். உடல் நிலை தேறும். சிவராத்திரியன்று சிவனுக்கு பால் அபிசேகம் செய்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×