என் மலர்tooltip icon

    துலாம் - வார பலன்கள்

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    10.10.2022 முதல் 16.10.2022 வரை

    கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட இன்னல்கள் குறையும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் விரய ஸ்தானத்தில் உச்சம் பெற்று விரய அதிபதி புதனுடன் குருப் பார்வையில் இருப்பதால் ஒரு சில நேரங்களில் சின்ன சின்ன சங்கடங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் சமாளித்து விடுவீர்கள். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். மனமும், உடலும் உற்சாகமாக இருக்கும்.

    அழகு, ஆடம்பர பொருட்கள் விற்கும் சில்லரை வியாபாரி களுக்கு வியாபாரம் அமோகமாக இருக்கும். மொத்த வியாபாரிகள் தீபாவளி விற்பனைக்கு புதியவர்களை நம்பி பண முதலீடு செய்ய வேண்டாம். குடும்பத்தில் திருமணம், சடங்கு போன்ற சுப நிகழ்வுகள் நடைபெறும். ராசியில் கேது நிற்பதால் உலக வாழ்வில் பற்றற்ற நிலையை அடையச் செய்யும் பக்தி மார்க்கத்தில் மனம் லயிக்கும். பாவம், புண்ணியம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

    12.10.2022 இரவு 11.30 முதல் 15.10.2022 காலை 10.01 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கிரடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை கவனமாக கையாள வேண்டும். அஷ்ட லட்சுமிக ளையும் வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    3.10.2022 முதல் 9.10.2022 வரை

    சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி சுக்ரன் உச்சம் பெற்ற விரய அதிபதி புதனுடன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடன் வாங்கி குடும்பத்திற்குத் தேவையான உயர்ரக பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரிகள் எச்சரிக்கையுடன் விலை பேச வேண்டும்.பங்குச் சந்தை வணிகம் பின்னடைவு தரும்.நண்பர்களை, கூட்டாளிகளை நம்பி தொழில் பொறுப்புகளை முழுமையாக ஒப்படைக்கக் கூடாது.

    வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கடுமையாக உழைக்க நேரும். பழைய பாக்கிகள் வசூலாகுவதில் சற்று காலதாமதமாகும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். சொத்துக்கள் வாங்கும் முன்பு முக்கிய பத்திரங்களை படித்துப் பார்ப்பது அவசியம்.

    திருமண முயற்சி சாதகமாகும். விவாகரத்து வழக்குகளை ஒத்திப் போடவும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு சாதகமாகும். நிதானமும், நம்பிக்கையும் அனைத்து இன்னல்களிலும் இருந்து உங்களை காப்பாற்றும். சண்டி ஹோமத்தில் கலந்து கொள்ளவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    26.9.2022 முதல் 2.10.2022 வரை

    ஏற்ற இறக்கம் நிறைந்த வாரம். ராசி அதிபதி சுக்கிரன் நீசம் பெற்று விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தன வரவில் தாமதம் இருந்தாலும் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.அழகு ஆடம்பரப் பொருட்கள், உணவுத் தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் தொடரும். திரைப்பட கலைஞர்களுக்கு தடைகளைத் தாண்டி வெற்றி உண்டு.

    சிலருக்கு தடைபட்ட வேலை கிடைக்கும். உயில் எழுதுவதில் சில நடைமுறைச்சிக்கல்கள் தோன்றும் அல்லது காலதாமதமாகும். மகன், மகளுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.தாய், தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கடன் தொகை கிடைப்பதில் சற்று காலதாமதமாகும். அரசு சம்பந்தப்பட்ட முயற்சிகளில் தாமத பலன் உண்டு.

    தாய் வழி இல்ல விசேஷங்களில் நடைபெறும் உறவுகளின் சந்திப்பு பால்ய வயது இன்பங்களை மலரச் செய்யும். ராசி அதிபதிக்கு குருப்பார்வை கவசமாக இருந்தாலும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். குல தெய்வ வழிபாடு அவசியம்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    19.9.2022 முதல் 25.9.2022 வரை

    தெளிவான திட்டமிடுதலும் முயற்சியும் அவசியம். லாப அதிபதி சூரியன் விரய அதிபதி புதனுடன் சேர்ந்து இருப்பது சுபித்துச் சொல்லக்கூடிய பலன் அல்ல. கவனத்துடன் செயல்பட வேண்டிய காலம். 6மிட வக்ர குருவால் கடன், வம்பு, வழக்கு, சண்டை உத்தியோகம், நோய், போட்டித் தேர்வுகள் போன்றவற்றில் ஏமாற்றங்கள் உருவாகிக் கொண்டே இருக்கும்.

    தன ஸ்தான அதிபதி செவ்வாய் தன் வீட்டைத் தானே பார்ப்பதால் ஆதரவு கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால் விரயத்தை தவிர்க்க முடியாத நிலை நீடிக்கும். விரய ஸ்தானத்திற்கு குருப்பார்வை இருப்பதால் வியாபாரத்தில் சிறு சறுக்கல் தோன்றுவது போல் இருந்தாலும் சமாளிக்க முடியும்.

    சிலருக்கு கை,கால், மூட்டு எலும்பு,நரம்பு, சுகர், பிரஷர் தொடர்பான பிரச்சினைகள் உண்டாகும். பிள்ளை களால் ஏற்பட்ட மனக்கவலை அகலும். சிலருக்கு திரு மணத் தடை நீடிக்கும். தம்பதிகள் தொழில் நிமித்தமாக பிரிந்து வாழலாம். அமாவாசையன்று இயன்ற அளவு அன்னதானம் வழங்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    12.9.2022 முதல் 18.9.2022 வரை

    கடன் சுமை குறையும் வாரம். குருவின் பார்வை தனம், வாக்கு ஸ்தானத்திற்கு இருப்பதால் பேச்சில் தெளிவு இருக்கும். பண வாசனை வீடு முழுவதும் நிரம்பும். பண வரவு பேசாத உறவுகளையும் பேச வைக்கும். நிலுவையில் உள்ள வாடகை வருமானம், சம்பள பாக்கிகள் கிடைக்கும்.

    அடமான நகைகள் மீண்டு வரும்.பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கு ஒரு தொகையை முதலீடு செய்யும் ஆர்வம் உண்டாகும். தொழில், உத்தியோகத்தில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத் துணை பற்றிய எதிர்பார்ப்பை குறைத்தால் திருமண வாய்ப்பு உடனே தேடி வரும். தந்தை வழிப் பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும்.

    தம்பதிகளிடையே சுமூக உறவு நிலவும்.கை,கால் வலி,அலைச்சல் போன்ற சிறுசிறு அசவுகரியங்கள் இருக்கும். 15.9.2022 மதியம் 2.28 முதல் 18.9.2022 மதியம் 1.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால்சக்திக்கு மீறிய செலவுகளில் ஈடுபடுவதையும், முன் கோபத்தை யும் தவிர்க்கவும். நன்மைகளை அதிகரிக்க ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    5.8.2022 முதல் 11.9.2022 வரை

    பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் லாப அதிபதி சூரியனுடன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியானவெற்றிகள் அதிகரிக்கும் தேவையான பணம் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளால் நெருக்கடிகள் சற்று குறையும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.உங்களின் அனைத்துச் செயல்களும் லாபகரமானதாகவும், எதிர்காலத்தில் நன்மை தருவதாகவும் இருக்கும்.எதையும் சமாளிக்கும் தைரியம் தெம்பு உண்டாகும்.

    குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலைக்கும். வியாதிகள் குறைய மேற்கொள்ளும் சில மனப் பயற்சிகள் பலன் தரும்.பூர்வீக சொத்து விசயத்தில் மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார்.இளைய சகோதரரால் மன சஞ்சலம் ஏற்படலாம். ஆறாமிட குருவால் சிலருக்கு வேலையில் மாற்றங்களும் இடப் பெயர்ச்சியும்உண்டு.

    பெண்களுக்கு ஊதிய உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும். முதல் வாழ்க்கையை இழந்தவர்களுக்கு இரண்டாம் திருமணம் நடக்கும். ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி வழிபட்டால் தடை, தாமதங்கள் விலகி காரிய சித்தி கிடைக்கும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    29.8.2022 முதல் 4.9.2022 வரை

    பட்ட கஷ்டங்கள் விலகி நன்மையே நடக்கும் வாரம். சுய தொழில் புரிகிறவர்களுக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சுக்ரனும், லாபாதிபதி சூரியனும் லாபத்தையும் அனுகூலத்தையும் வழங்குவார்கள். சிலருக்கு தொழிலில் மாற்றம் ஏற்படும். பூர்வீகச் சொத்து சர்ச்சையில் தாய்மாமன் ஆதரவாக இருப்பார்.

    தந்தையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத் துணைக்கு இழந்த வேலை கிடைக்கும். கடன் தொல்லையில் சிக்கியவர்களுக்கு அதை தீர்ப்பதற்கான வழிகள் தெரிய ஆரம்பிக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நல்ல செய்தி உண்டு. பெண்களுக்கு தாய் வழிப் பாட்டியின் நகைகள், பணம், பட்டுப் புடவைகள் சீதனமாக கிடைக்கும்.

    சிலர் நவீன வெளிநாட்டு செல்போன் வாங்குவீர்கள். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். குல தெய்வ அருளால் சிலர் தாத்தா, பாட்டியாகுவார்கள். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். விவசாயிகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினருக்கு பொன்னான நேரம். சங்கரன் கோவில் சங்கரநாராயணர், கோமதியம்மனை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    22.8.2022 முதல் 28.8.2022 வரை

    சுமாரான வாரம். ராசியில் உள்ள கேதுவை சனி, ராகு பார்ப்பதால் அவ்வப்போது குடும்ப சுகம் தடைபடும். இந்த அமைப்பு ஒரு வகை புனர்பு தோஷமாக இருந்தாலும் திருமணத்தை விரைந்து முடிப்பது நல்லது. சிலருக்கு பொருளாதார ரீதியாக தடங்கல்களும், பணவரவுத் தடையும், மன அழுத்தங்களும் உண்டாகும்.

    தந்தையுடன் முரண்பட்ட போக்கு ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் விற்பனையாகும். நிலையாக ஓரிடத்தில் தங்க இயலாது. எவ்வளவு சம்பாதித்தாலும் தேவைப்ப டும்போது பணம் கைகளில் தங்காது. சிலர் மன அமைதிக்காக ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள் வார்கள். சிலருக்கு ஆன்லைன் விளையாட்டு பங்குச்சந்தை, லாட்டரி போன்றவைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

    விரயாதிபதி புதன் விரய ஸ்தானத்தில் உச்சம் பெற்று இருப்பதால் நஷ்டங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ராசியில் ராகுவும் ஏழில் கேதுவும் இருப்பதால் தம்பதிகள் ஈகோவை குறைப்பது நல்லது. மனக் குழப்பங்களும், முடிவெடுக்க முடியாத தடுமாற்றங்களும் இருக்கும் என்பதால் சிந்தித்து செயல்படுவது சிறப்பு. வீட்டில் நெய் தீபம் ஏற்றி குலதெய்வத்தை வழிபட நன்மைகள் மட்டுமே நடக்கும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    15.8.2022 முதல் 21.8.2022 வரை

    புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சுமூக நிலை ஏற்படும். நண்பர்கள் விரும்பி வந்து உதவி செய்வார்கள்.வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். தன ஸ்தான அதிபதி செவ்வாய் தன் வீட்டை தானே பார்ப்பதால் வியாபாரங்கள் நல்ல லாபத்தைக் கொடுக்கும். நிலம் வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடக்கும்.

    ஊழியர்கள் உற்பத்தியை அதிகப்படுத்திக் காட்டுவார்கள். பிள்ளைகளின் நடவடிக்கையை நன்றாக கண்காணிக்க வேண்டும். லாப ஸ்தான சூரியனால் சித்தப்பா, மூத்த சகோதரர் உதவியால் பல நல்ல காரியங்கள் நடக்கும். மாணவர்கள் பாடங்களைஅக்கறையுடன் கவனத்துடன் படித்தாலே அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். திருமண விஷயங்கள் முன்னுக்கு பின் முரணாக நடக்கும்.

    19.8.2022 காலை 6.06 முதல் 21.8.2022 மாலை 6.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். வாங்கிய நபர் வார்த்தை மாறிப் பேசலாம். உங்கள் உதவியைப் பெற்றவர்கள் உங்களுக்கு எதிராக மாறலாம்.தினமும் மகாலட்சுமி அஷ்டகம் படிக்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    8.8.2022 முதல் 14.8.2022 வரை

    அனுபவப்பூர்வமான அறிவுத்திறன் கூடும் வாரம். தன அதிபதி செவ்வாய் எட்டில் நின்று தன் வீட்டை பார்ப்பதால் வியாபாரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களை கவர்ந்து லாபத்தைப் பெருக்குவார்கள். செய்யும் தொழிலில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். சிலருக்குப் புதுப் பதவிகளும் அதனால் வருவாய் பெருக்கமும் ஏற்படும். ராசிக்கு 7-ல் கெட்டவன் ராகு நிற்பதால் நண்பர்களால் திடீர் லாபங்கள் உண்டாகும்.

    கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் மீண்டும் கைகூடும். வராக்கடன்கள் வசூலாகும். 6-ல் குரு வக்ரம் பெறுவதால் செலவுகளும், விரயங்களும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் இருக்கும். வந்த பணம் அடுத்த நிமிடமே செலவாகலாம்.இந்த கால கட்டத்தில் ஜாமீன் கொடுப்பதையும், வாக்குறுதி கொடுப்பதையும் தவிர்த்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

    பெண்களுக்கு மாமியாருடன் ஏற்பட்ட கருத்து வேறு பாடு சீராகும். பூமி, வீடு மூலம் லாபம் ஏற்படும் பங்குச்சந்தைமற்றும் போட்டி பந்தயங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.சாமர்த்தி யமாக செயல்பட்டால் அனுகூலமான பலனை அடைய முடியும். சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் வழங்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    1.8.2022 முதல் 7.8.2022 வரை

    திட்டங்களில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும் வாரம். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். லாபத்தை அதிகரிக்க புதிய விற்பனை யுக்திகளைக் கையாள்வீர்கள்.

    3,6-ம் அதிபதி குரு வக்ரம் பெறுவதால் கிணற்றில் போட்ட கல்லாக கிடந்த சில முயற்சிகள் முடிவிற்கு வரும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் மூலம் சொத்து தகராறு, கருத்து வேறுபாடு போன்றவற்றை சந்திக்க நேரும். பகைகளை வெல்லும் திறன் ஏற்படும். சிலருக்கு இந்த வாரம் வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம்.

    வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாக கிடைக்கும். பணிபுரியும் பெண்களின் அறிவுத்திறன் கூடும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.பண விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சுபகாரியச் செய்திகளால் சுபசெலவுகள் அதிகரிக்கும். ஓரிரு வாரங்களில் விரயங்கள் குறையும்.நல்ல ஆன்மீக குரு கிடைக்கப் பெற்று ஆன்மீக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும். வெள்ளிக்கிழமை சப்த மாதர்களை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    வார ராசி பலன்கள்

    25.7.2022 முதல் 31.7.2022 வரை

    செயல் திறன் மிகவும் சிறப்பானதாக இருக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புகழ், அந்தஸ்து, கவுரவம் உயரும்.புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.

    வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு மறையும். சீரான பொருளாதார முன்னேற்றத்தால், மனதிற்குப் பிடித்தபடி மனை, வண்டி வாகனம் என அனைத்தும் அமையும். மாணவர்களின் உயர் கல்வி முயற்சி சித்திக்கும். கண் சிகிச்சை பலன் தரும். கலைத் துறையினர் பலர் வெளியூர், வெளிநாடு செல்வார்கள். சிலருக்கு அரசாங்க வேலை கிடைக்கும்.

    தந்தையின் ஆயுள், ஆரோக்கிய குறைபாடுசீராகும். தடைபட்ட பணி மாற்றம், ஊதிய உயர்வு, இடமாற்றம் இப்பொழுது உங்களை மகிழ்விக்கும். குடும்பத்துடன் பூர்வீகம் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைப்பேறு, புதிய தொழில் வாய்ப்புக்கள், அதிர்ஷ்ட வாய்ப்புகள், யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை கிடைக்கும்.பிரதோசத்தன்று சிவனுக்கு பஞ்சாமிர்த அபிசேகம் செய்யவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×