என் மலர்
துலாம் - வார பலன்கள்
துலாம்
இந்த வார ராசிப்பலன்
2.1.2023 முதல் 8.1.2023 வரை
மேன்மையான வாரம். தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகளும் அதற்கான உதவிகளும் கிடைக்கும். வீடு, தோட்டம் என அசையாச் சொத்துக்களின் சேர்க்கை மனதை மகிழ்விக்கும்.
குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் நிலவும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் மறுமுதலீடாக மாறும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். தொழிலில், உத்தியோகத்தில் நிலவிய பிரச்சினைகள் குறையும். பெண்களுக்கு புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு தொழில் ரீதியாகவோ, வேறு காரணத்திற்காகவோ வெளியூர், வெளிநாடு செல்ல நேரும்.
2.1 .2023 இரவு 8.50 மணி முதல் 5.1.2023 அன்று காலை 8.05 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் ஏதாவது செலவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி நேரத்திற்கு சாப்பிட்டு ஓய்வு எடுப்பது நல்லது. ஏகாதசியன்று திருமஞ்சன அபிசேகம் செய்து மகாவிஷ்ணுவை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிப்பலன்
19.12.2022 முதல் 25.12.2022 வரை
நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் வாரம்.2,7- ம் அதிபதி செவ்வாய் 8-ல் இருப்பதால் வாழ்க்கை துணையால் எதிர்பாராத அதிர்ஷ்ட பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.
வருமானம் சீராக இருந்தாலும் சமாளிக்க முடியாத விரயங்களும் ஏற்படும். தாய்மாமாவிடம் எதிர்பார்த்த காரியம் முடிய சற்று காலதாமதமாகும்.வியாபாரத்தில் பணியாளர்களால் சிறு சிறுபிரச்சினை ஏற்படக்கூடும். வீடு, வாகன யோகம் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.
பணிபுரியும் பெண்களுக்கு சம்பள உயர்வும், சலுகைகளும் உற்சாகத்தை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு மாமியார் டார்ச்சர் குறையும். அரசின் இலவச தொகுப்பு வீடு கிடைக்கும்.
கல்விக்காக வெளியூர், வெளிநாடு மற்றும் விடுதியில் தங்கியிருந்த பிள்ளைகள் இல்லம் திரும்புவார்கள். தந்தை-மகன் உறவு பலப்படும். தம்பதிகளிடம் புரிதல் அதிகரிக்கும்.திருமண முயற்சி கைகூடும். ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிப்பலன்
12.12.2022 முதல் 18.12.2022 வரை
சகாயமான வாரம். ராசி அதிபதி சுக்ரன் பாக்கிய அதிபதி புதனுடன் சகாய ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் நல்ல ஞானம், சிந்தனைகள் பெருகும். பிறர் அறியா நுட்பங்களை அறிந்து தன்னிச்சையாக செயல்படும் தைரியம் உருவாகும்.பொருளாதார சுணக்கங்கள் விலகி அதிகப்படியான வருமானம் கிடைக்கும்.
சுகமான, சொகுசான ஆடம்பர பங்களா, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. திருமணம், கல்வி, தொழில், உத்தியோகம், பிள்ளைப் பேறு போன்ற சுப செலவிற்காக உடன் பிறந்தவர்களுக்கு உதவ வேண்டிய சூழ்நிலை உள்ளது. காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்சினைகள் அறுவை சிகிச்சையால் சீராகும். இடப்பெயர்ச்சி செய்ய வாய்ப்புகள் உள்ளது.
வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சக ஊழியர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். சிலர் வேலையில் இருந்து விடுபட்டு கடன் பெற்று புதிய சுய தொழில் துவங்கலாம். திருமண முயற்சி நிறைவேறும். எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல் நிதானமாக செயல்பட்டால் அதிக நன்மையடையலாம். வெள்ளிக் கிழமை அஷ்ட லட்சுமிகளை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிப்பலன்
5.12.2022 முதல் 11.12.2022 வரை
லாபகரமான வாரம். லாப அதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் துடிப்புடன் செயல்பட்டு தொழிலை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வீர்கள்.பங்குதாரர் வாழ்க்கைத் துணையால் ஆதாயம் கிடைக்கும். சொத்துக்கள் மீதான வாடகை வருமானம் அதிகரிக்கும்.
நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு ஞானத் தன்மை அதிகரிக்கும். பெண்கள் கணவரின் தொழில், உத்தியோக உயர்வால் நிம்மதி அடைவார்கள். 2,7-ம் அதிபதி செவ்வாய் 8-ல் வக்ர கதியில் இருப்பதால் திருமண முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. கணவன்- மனைவி இடையே சின்னச்சின்ன ஊடல்கள் வந்து போகும். எதிரிகளால் பிரச்சினைகளும், கடன் தொல்லைகளும் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் நல்ல செய்திகள் தேடி வரும்.
6.12.2022 மதியம் 3.02 முதல் 9.12.2022 அன்று காலை 1.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உதவி பெற்றவர்களே உங்களுக்கு எதிராக திரும்புவார்கள். உடன் இருப்பவர்களே குழி பறிக்கும் முயற்சியில் இறங்குவார்கள் என்பதால் யாரையும் நம்பக்கூடாது.மகா கணபதியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிப்பலன்
28.11.2022 முதல் 4.12.2022 வரை
கடனை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய வாரம். 2,7-ம் அதிபதி செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் நின்று வாக்கு ஸ்தானத்தைப் பார்ப்பதால் வாக்கில் நிதானம் தேவை. குடும்ப உறவுகளிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும்.பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொழில் முதலீடுகளில் விழிப்புணர்வு அவசியம்.
தொழில் பங்குதாரர்களால் வம்பு, வழக்கு உருவாகலாம். சில தம்பதிகள் தொழில் நிமித்தமாக அல்லது கருத்து வேறுபாட்டால் பிரியலாம். 3, 6-ம் அதிபதி குரு ஆட்சி பலம் பெற்று இருப்பதால் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும். வழக்குகள் சாதகமாகும்.
சிலருக்கு கடன் அல்லது பொருள் இழப்பு அல்லது சிறு நோய் தாக்கம் உண்டாகலாம். வீண் கவலைகளை விடுத்து உங்கள் கடமைகளை சரியாகச் செய்யுங்கள். அனைத்தும் வெற்றி பெறும் நல்ல காலமாக இந்த வாரம் அமையும். தினமும் மாலை வேளையில் சிவனை வணங்க காரிய வெற்றி உண்டாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிப்பலன்
21.11.2022 முதல் 27.11.2022 வரை
நிம்மதி பெருமூச்சு விடும் வாரம். 3,6-ம் அதிபதி குரு 6-ல் ஆட்சி பலம் பெற்று ஆட்சி பலம் பெற்ற பூர்வ புண்ணியாதிபதி சனியின் பார்வை பெறுவதால் எந்தப் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று தெரிந்து அதன்படி செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளால் பூர்வீகச் சொத்தில் நிலவிய மன உளைச்சல் குறையும். உயில் எழுத, திருத்தம் செய்ய உகந்த நேரம்.
ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் அகலும். மேலதிகாரி, முதலாளிகள், சக ஊழியர்களால் ஏற்பட்ட தொந்தரவு அகலும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய ஊருக்கு வேலை மாற்றம், பதவி உயர்வு உண்டாகும். செய்தி, தகவல் தொடர்பு, ஊடகங்களில் வேலை செய்பவர்களுக்கு ஏற்றம் உண்டாகும். ஆலோசனை வழங்கி புத்தியைத் தீட்டி சம்பாதிப்பவர்களின் வருமானம் இரட்டிப்பாகும். ஏழாமிட ராகுவை சமாளிக்க தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம்.
குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். வீடு, வாகனம், தொழில் போன்றவைகளுக்கு விண்ணப்பித்த கடன் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல், டென்சன் குறையும். சிவ வழிபாடு செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிப்பலன்
14.11.2022 முதல் 20.11.2022 வரை
மகிழ்சியான நிம்மதியான வாரம். ராசி அதிபதி சுக்ரனும் லாப அதிபதி சூரியனும் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.லாபம் அதிகரிக்கும். நெருக்கடியாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். புதிய தொழில் தொடங்கலாம். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும்.
எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். வேலை பார்த்து கொண்டே உபதொழில் செய்து லாபம் ஈட்டும் மார்க்கம் தென்படும். பங்கு வர்த்தகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
பிள்ளைகளின் திருமணம், குழந்தை பாக்கியம், உத்தியோக, தொழில் அனுக்கிரகம் மன நிம்மதியைத் தரும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். சிலருக்கு நிலம், வீடு போன்ற சொத்துச் சேர்க்கை உண்டாகும். கை,கால், மூட்டு வலியால் ஏற்பட்ட அவதியிலிருந்து விடுதலை உண்டாகும்.குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பருவ வயதினர் மண நாளை எண்ணலாம். வீட்டில் சுப காரியங்கள் நடை பெறும். அனுமன் சாலிசா கேட்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
வார ராசிப்பலன்
7.11.2022 முதல் 13.11.2022 வரை
சுமாரான வாரம். ராசியில் சூரியன், சுக்ரன், புதன், கேது என நான்கு கிரகச் சேர்க்கை. அதற்கு சந்திரன், ராகுவின் சம சப்தம பார்வை மற்றும் சனியின் பத்தாம் பார்வை. என ராசிக்கு 7 கிரக சம்பந்தம். திருமணம் போன்ற சுப நிகழ்விற்கான பேச்சுக்களைத் தவிர்க்கவும். ராசிக்கு ஏழாம் இடத்தில் சந்திர கிரகணம் ஏற்படப் போகிறது. தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்களுடன் அதிருப்தி ஏற்படும்.
வாழ்க்கைத் துணையுடன் சின்னச் சின்ன பிரச்சினைகள் ஏற்படலாம். அன்றைய தினம் புதிய முயற்சிகளைத் தவிர்த்து விடுவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. கிரகண நேரத்தில் ஸ்ரீராம ஜெயம் எழுதலாம் அல்லது பாராயணம் செய்யலாம். கிரகணம் முடிந்த பின்னர் குளித்து விட்டு நாகாபரணம் தரித்த சிவலிங்கத்தை வணங்குவது நல்லது. 9.11.2022 காலை 7.58 முதல் 11.11.2022 மாலை 6.17 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
வார ராசிப்பலன்
31.10.2022 முதல் 06.11.2022 வரை
பாக்கிய பலன்கள் உண்டாகும் வாரம். லாப அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்ற சுக்ரனுடன் இணைந்து நீச பங்க ராஜயோகம் பெறுவதால் புகழ், பணம், அந்தஸ்து, செல்வாக்கு பெறுவீர்கள். ராசி அதிபதி சுக்ரன் புதனுடன் இணைந்து புதசுக்ர யோகத்தை வழங்குவதால் பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.
கடன் சுமை குறைய புதிய வழி பிறக்கும். பெண்களுக்கு கருவுருதலில் இருந்த பிரச்சினைகள் நீங்கி புத்திர பிராப்தம் உண்டாகும். வயோதி கர்களுக்கு தாத்தா, பாட்டி யோகம் உண்டு. ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பும், முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். திருமணம் மற்றும் சுப காரியங்களுக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றியுண்டு. ராசியில் புதன், சூரியன் இணைந்து புத ஆதித்ய யோகம் உண்டாகுவதால் மாணவர்க ளுக்கு கல்வி முன்னேற்றம் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். பூர்வீக சொத்தால் வில்லங்கம், வம்பு, வழக்கு உருவாகலாம். பெற்றோரை பிரிந்து சென்ற பிள்ளைகளின் கோபம் குறையும். பெண்களுக்கு மாமியார், மாமனாரின் ஒத்துழைப்பால் மன நிம்மதி உண்டாகும். மகா லட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிப்பலன்
24.10.2022 முதல் 30.10.2022 வரை
தாராள தன வரவு உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்ரனும் லாப அதிபதி சூரியனும் ராசியில் சேர்க்கை பெறுவது அற்புதமான கிரகச் சேர்க்கை. தொட்டது துலங்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தடை தாமதம் விலகும்.
தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வேலை யில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும், சிலருக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வசதி வாய்ப்புகள் பெருகும். அடமான நகைகள், நிலபுலன்களை மீட்கக் கூடிய சந்தர்ப்ப சூழ்நிலை கூடி வரும். இரண்டாம் திருமண முயற்சி சாதகமான பலன் தரும்.
மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்புகள் மாறும். ஏழாம் அதிபதி செவ்வாய் வார இறுதி யில் வக்ரம் பெறுவதால் கணவன்- மனைவி இடையை சின்னச் சின்ன சலசலப்புகள் வரலாம். முன்னோர் வழிச் சொத்துக்களில் முறை யான பங்கு கிடைக்கும். பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். கிரகணம் முடிந்த பிறகு சிவ வழிபாடு செய்து கருப்பு உளுந்து தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
24.10.2022 முதல் 30.10.2022 வரை
தாராள தன வரவு உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்ரனும் லாப அதிபதி சூரியனும் ராசியில் சேர்க்கை பெறுவது அற்புதமான கிரகச் சேர்க்கை. தொட்டது துலங்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தடை தாமதம் விலகும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும், சிலருக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
வசதி வாய்ப்புகள் பெருகும். அடமான நகைகள், நிலபுலன்களை மீட்கக் கூடிய சந்தர்ப்ப சூழ்நிலை கூடி வரும். இரண்டாம் திருமண முயற்சி சாதகமான பலன் தரும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்புகள் மாறும். ஏழாம் அதிபதி செவ்வாய் வார இறுதியில் வக்ரம் பெறுவதால் கணவன்- மனைவி இடையை சின்னச் சின்ன சலசலப்புகள் வரலாம். முன்னோர் வழிச் சொத்துக்களில் முறையான பங்கு கிடைக்கும். பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். கிரகணம் முடிந்த பிறகு சிவ வழிபாடு செய்து கருப்பு உளுந்து தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிபலன்
17.10.2022 முதல் 23.10.2022 வரை
வரவும், செலவும் சமன்படும் வாரம். 2,7-ம் அதிபதி செவ்வாய் ஒன்பதாமிடம் செல்வதால் தடைபட்ட திருமண முயற்சிகள் துரிதமடையும். விலகிச் சென்ற உறவுகள், உடன் பிறந்தவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். வீண் மனஸ்தாபங்களைத் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும். உயர் அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து லாபம் அதிகரிக்கும். வர வேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும்.
ராசியில் உள்ள சூரியனுக்கு சனி பார்வை இருப்பதால் தந்தையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். சனி, செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் பங்குச்சந்தை வியாபாரத்தை தவிர்க்கவும்.
லாப அதிபதி சூரியன் கேதுவுடன் இணைவதால் அனாவசியச் செலவுகளைக் குறைப்பது நல்லது.ராசியில் சுக்ரன் கேது சேர்க்கை இருப்பதால் கலைத்துறையினர் கடுமையாக உழைத்தால்தான் பலனை அடைய முடியும். நவகிரகங்களில் சுக்கிரனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






