என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
துலாம் - சோபகிருது வருட பலன்
துலாம்
சோபகிருது வருட பலன் 2023
புது வசந்தம் வீசப்போகிறது.!
நியாயத்திற்கு துணை நிற்கும் துலாம் ராசியினருக்கு இந்த சோப கிருது வருட தமிழ் புத்தாண்டு புதிய வாழ்க்கைப்பாதையை காட்டும் புத்தாண்டாக அமைய நல் வாழ்த்துக்கள். ஆண்டின் தொடக்கத்தில் திருக்கணித பஞ்சாங்கப்படி ஏப்ரல் 22 முதல் குருபகவான் ராசிக்கு ஏழாமிடம் சென்று உங்கள் ராசியை பார்க்கிறார்.ஜனவரி 17 முதல் சனி பகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தற்போது 7, 1ம்மிடத்தில் சஞ்சரிக்கும் ராகு கேதுக்கள் அக்டோபர் 30, 2023க்குப் பிறகு 6,12ம்மிடம் செல்கிறார்கள்.
இந்த தமிழ் புத்தாண்டில் அனைத்து வருட கிரகங்களும் ஓரளவு சாதகமாக உள்ளதால் புதிய முயற்சிகள் கைகூடும். உங்கள் வாழ்க்கை நிலை உயரப்போகிறது. நீங்கள் பிறந்த பலனை அடையப் போகிறீர்கள். உங்கள் புகழ், பெருமையை உற்றார், உறவினர் அறியப்போகிறார்கள். எதையோ இழந்தது போல் வருத்தப்பட்டவர்கள் வாழ்க்கையில் புதுவசந்தம் வீசப்போகிறது. தோற்றத்தில் மிடுக்கு கூடும். செயலில் வேகம் அதிகரிக்கும்.
உங்கள் வாட்டி வதைத்துக் கொண்டிருந்த நோய்கள் அகலும். உடலின் ஐம்புலன்களும் மகிழ்ச்சியடையும். சொத்து, வீடு,வாகனம் என உங்கள் ஆழ்மன எண்ணமும் ஆசையும் நிறைவேறும். வேலை இல்லாதவர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும்.
குடும்பம், பொருளாதார நிலை: இதுவரை உங்களுக்கு கிடைக்கவில்லை என்று ஏங்கிக்கொண்டு இருந்தீர்களோ அவையெல்லாம் உங்களுக்கு கிடைக்கும். தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலை உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு இக் காலம் வசந்த காலமாக இருக்கும்.
லாபம் பல வழிகளிலும் வரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். கேட்ட இடத்தில் கேட்ட உதவி கிடைத்து முன்னே ற்றம் காண்பீர்கள். வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்வில் வசந்தம் வீசும். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சனை குறையும்.பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும். வசதியும், அந்தஸ்தும் அதிகரிக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.
குடும்பத்திலும் நட்பு வட்டாரத்திலும் சுமூகமான நிலை நீடிக்கும். தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களை வாங்கி அணிவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கலாம்.சிலருக்கு ராஜயோகமாக அடிப்படையில் கைவிட்டுப் போன சொத்துகிடைக்கும்..திருமணத் தடை அகலும்.
பெண்கள் : பெண்களின் புத்தி சாதுர்யத்தால் குடும்பத்தில் அமைதி நிலவும்.வீடு, வாகனம், அலங்கார ஆடம்பர பொருட்கள், உயர் ரக ஆடைகள் நகைகள் என வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். புகுந்த வீட்டாருடன் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறையும். இல்வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.தாய் வழியில் ஏற்பட்ட மனக்கவலைகள், கருத்து வேறுபாடு அகலும்.உங்கள் சேமிப்புகள் சுப விரயங்களாக மாறும். வேலை செய்யுமிடத்தில் பிரச்சனைகள் குறையத்துவங்கும்.
சித்திரை 3, 4 : திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் காலம். தொழில் வளம் சிறக்கும் காலம். வாக்கு சாதுர்யத்தால் தொழிலில் நல்ல வருமானம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக டென்ஷன் குறையும்.உங்கள் மீது போடப்பட்டவழக்கில் தீர்ப்பு சாதகமாகும் அல்லது தண்டனைக் காலம் குறையும். தாய்மாமனுடன் இருந்த மனஸ்தாபம் குறையும். மூத்த சகோதர வகையில் ஆதாயம் உண்டு.இளைய மனைவியின் மூலம் சொத்து கிடைக்கும்.ஒரு சிலர் விருப்ப ஓய்வு பெறுவார்கள். பாலிசி முதிர்வு தொகை, எதிர்பாராத பண வரவு உண்டு. ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவர். தொழில் நிமித்தமாக பிரிந்த தம்பதியினர் சேர்ந்து வாழ்வார்கள்.புதிய சொத்து வாங்கும் போது முக்கிய ஆவணங்களை சரிபார்க்கவும்.ஸ்ரீ லலிதா திரிசதி நாமாவளி படிக்கவும்.
சுவாதி : மனநிறைவும், நிம்மதியும் அதிகரிக்கும் காலம். செயல் திறனில்மாற்றம் ஏற்பட்டுலகுவாக பணியாற்றி நற்பெயர்பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். மருமகன் மகன் ஸ்தானத்தில் நின்று உங்கள் தேவைகளை நிறைவு செய்வார். குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். அரசு வேலை முயற்சி சாதகமாகும். கூட்டாளிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். சில காரியங்கள் ஆரம்பிக்கும் போது தோல்வி தருவது போல் இருந்தாலும் முடிவில் வெற்றியைக் கொடுக்கும். தொட்டது துலங்கும்.வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் அல்லது வாபஸ் பெறப்படும். தந்தை வழிச் சொத்துப்பிரச்சனைகள் சித்தப்பா, பெரியப்பாவின் மூலம் தீர்த்து வைக்கப்படும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நினைவாகும்.ஸ்ரீ குபேர லஷ்மி அஷ்டோத்திரம் படிக்கவும்.
விசாகம் 1,2,3 : சகாயங்கள் நிறைந்த வருடம். வசீகரமான தோற்றம் ஏற்படும். சாஸ்திர ஞானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை சீராகும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை மறையும். குடும்ப சுமை குறையும். பணம் எனும் தனம்சமூக அங்கீராத்தை பெற்றுத் தரும். ராஜ மரியாதை கிடைக்கும்.
வெளியூர், வெளிநாட்டு வேலை அல்லது குடியுரிமை பெற்று செட்டிலாவது போன்ற பலன்களை எதிர்பார்க்கலாம். கடன்காரர்களின் கெடுபிடி குறையும். வாழ்க்கைத் துணையால் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டு. தம்பதிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மாறி புரிதல் உண்டாகும். அனாவசிய வைத்தியச் செலவு இருக்காது. அங்காளி பங்காளி வகையில் நிலவிய மனக்கசப்புகள் விலகும். மகாலஷ்மி காயத்திரி மந்திரம் படிக்கவும்.
பரிகாரம் : துலாம் ராசியினர் சுக்ரனின் அம்சம் பெற்ற சென்னை மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரரை வழிபட ஏற்றமான பலன் உண்டாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
சுபகிருது வருட பலன் - 2023
ஆடம்பர வாழ்வில் நாட்டம் மிகுந்த துலா ராசியினருக்கு தமிழ் புத்தாண்டில் சுப பலன்கள் அதிகரிக்க நல் வாழ்த்துக்கள்.
ராசியில் கேதுவும், ஏழாமிடத்தில் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். குரு பகவான் 6ம் இடத்திலும் சனி பகவான் 4, 5ம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார்கள். ராசியில் உள்ள கேதுவால் ஆத்ம ஞானத்தை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். மன முதிர்ச்சியுடன் விவேகமாக நடந்துகொள்வீர்கள். உங்களின் அனுசரணையான அணுகுமுறை எல்லாரிடமும் நன்மதிப்பைப் பெற்றுத் தரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுபவர்களின் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, கவுரவம் உயரும். 7ல்ராகு நிற்பதால் வெகு சிலருக்கு தவறான எண்ண அலைகள் மிகுதியாகும். நட்பு வட்டாரங்களால் மன சங்கடம் உருவாகும்.
ஆறாம் அதிபதியாகிய குரு மறைவு ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால்பெரிய பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற பய உணர்வு அனைவருக்கும் இருக்கும். இந்த கால கட்டத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. சில வளர்ச்சிகள் தடைபடலாம். ஆனால் குரு பார்வை பட்ட இடத்தின் மூலம் நன்மைகள் உண்டாகும் என்பது மறுக்க முடியாத உண்மை. 4ம்மிட சனி பகவானால் சுக போக பலத்தால் அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். முன்னோர்களின் பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் ஆர்வம் உண்டாகும்.
குடும்பம்:இரண்டாமிடமான குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். ஆயிரம் பிரச்சனைகள் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் அனுசரித்துச் செல்வார்கள். மன நிம்மதி இருக்கும். வீட்டில் எல்லோரும் எப்போதும்சந்தோசமாக இருப்பார்கள்.குடும்பத்திலிருந்து பிரிந்த மூத்த சகோதர் மீண்டும் குடும்பத்துடன் சேர்வார். நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாத வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். மூத்த சகோதரருடன் இருந்த பிணக்குகள் மாறும். முன்னோர்கள் சொத்தைப் பிரிப்பதில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்தசொத்துகள் உங்களுக்கு சாதகமாகப் பிரிக்கப்படும்.தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தந்தையால் ஆதாயமுண்டு. 3,6ம் அதிபதி குரு 6ல் ஆட்சி பலம் பெறுவதால் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள். வீடு மாற்றம் செய்ய நேரும். அடிக்கடி அலைச்சல் மிகுந்த பயணம் செய்யக் கூடும்.
ஆரோக்கியம்:6ம் அதிபதி குரு 6ல் ஆட்சி பலம் பெறுவதால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.ஆரோக்கியத்திற்காக மருத்துவ செலவு செய்ய நேரும்.ஞாபக சக்தி குறையும். மறதி ஏற்படலாம்.
மனதில் திடமான சிந்தனைகள் தோன்றும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான ஆரோக்கிய கேடுகளை அறுவை சிகிச்சையால் சரி செய்யும் நேரம்.
திருமணம்:துலாம் ராசியினருக்கு திருமண வாய்ப்பு கூடி வரும். திருமணமே வேண்டாம் என்றவர்கள் கூட திருமணத்திற்கு சம்மதிப்பார்கள். 7ல் உள்ளராகு சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்தி இருப்பதால் சிலருக்கு கலப்பு திருமணம் நடைபெறும். சிலருக்கு ராகு மேஷத்தை கடக்கும் முன்பு ஒன்றுக்குமேற்பட்ட திருமணம் நடக்கும்.
பெண்கள்:ஜனன கால ஜாதகப்படி தசா புக்தி சாதகமற்றவர்களுக்கு ராகு/கேதுக்களால் சிறு சிறு உடல் பாதிப்பு மனசஞ்சலம் இருக்கும். மற்றவர்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது. குடும்பத்தில் தொடர்ந்து சுபநிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் வருகையில் குதுகலம் நிரம்பியிருக்கும். தாய் வழிப்பாட்டியின் நகைகள், அசையாச் சொத்துக்கள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு வலுவாக இருக்கும்.
மாணவர்கள்:லக்னத்தில் உள்ள கேது கற்றல் ஞானத்தை மிகைப்படுத்துவார். உழைப்பிற்கு தகுந்த மதிப்பெண் கிடைக்கும். சில மாணவர்களுக்கு வேற்று மொழி கற்கும் வாய்ப்பும் ஆர்வமும் உண்டாகும். 6ல் குரு ஆட்சி பெறும் காலத்தில் போட்டித் தேர்வில் பெற்றி பெற்று பரிசுகளும், பாராட்டுகளும் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள்:அரசு உழியர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். இட மாற்றத்துடன் ஊதிய உயர்வும் கிடைக்கும்.தனியார் துறையினர் பழைய வேலையை விட்டு புதிய வேலைக்கு மாறலாம். 6ல் குரு ஆட்சி பலம் பெறுவதால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிய வேலையில் அதிக சம்பளம் கிடைக்கும்.
முதலீட்டாளர்கள்:தொழிலில் இருந்த மந்தநிலை மாறி சூடுபிடிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றமும் அபரிமிதமான வருமானமும் வரும்.தன வரவு மகிழ்வை தரும். லாபம் ஒன்றுக்கு இரண்டாகும். லாபத்தை மறுமுதலீடாக மாற்றுவீர்கள். பல புதிய தொழில் அதிபர்கள் உருவாகுவார்கள். சில உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களுக்கு டிரேட் மார்க் வாங்குவார்கள். சிலருக்கு வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
அரசியல்வாதிகள்:ஏழில் உள்ள ராகு பொது ஜனத் தொடர்பை அதிகப்படுத்தும். மக்களுடன் மக்களாக கலந்து சேவை செய்வீர்கள். அரசியல்வாதி களுக்கு மிகப் பொன்னான காலம்.6ல் குரு ஆட்சிபெறும் காலத்தில் எதிரிகள் விலகுவார்கள். உங்களின் புகழ் பரவும். யாரும் உங்களை அசைக்க முடியாது.
கலைஞர்கள்:சுக்ரனை ராசி அதிபதியாகக் கொண்ட கலைத்துறையினர் சாதனை படைப்பீர்கள். புதிய படைப்புகள் உலகப் புகழ் பெறும். பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் உண்டாகும். 6ல் குரு ஆட்சி பெறும் காலத்தில் கடன் வாங்கி படம் எடுப்பதை தவிர்க்கவும். கலைத்துறையின் வளர்ச்சிக்கு பாடுபடுவார்கள்.
விவசாயிகள்: எதிர்மறை எண்ணங்கள் விலகும். கடன் வாங்கி வயல் தோட்டம் வாங்குவீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பால் தரமான பொருட்களை விளைவிப்பீர்கள்.உங்களின் உழைப்பிற்கு அபரிமிதமான பலன் கிடைக்கும். உங்கள் விலை பொருட்களுக்கு சந்தையில் நல்ல கிராக்கி இருக்கும்.
ராகு/கேது:21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் ராசியில் கேதுவும் ஏழில் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள்.சில தம்பதிகளுக்குள் ஈகோ பிரச்சனை ஆரம்பமாகும். அதனால் கருத்து வேறுபாடு சற்று மிகைப்படுத்தலாக உருவெடுக்கும்.சில தம்பதிகளுக்கு மூன்றாம் நபரின் குறுக்கீட்டால் பிரிவினை உண்டாகும். சில தம்பதிகள் தொழில் நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் வசிக்கலாம். வாழ்க்கைத் துணை மூலம் அதிகப்படியான பொருள் வரவு உண்டாகும்.
குரு: 29.7.2022 முதல் 23.11.2022 வரை கோட்சாரத்தில் ராசிக்கு 4ல் சஞ்சரிக்கும்சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில்தாய் வழி உறவுகளின் வெறுப்பை சம்பாதிக்க நேரும். தாய் வழிப் பூர்வீகச் சொத்துப் பிரிப்பதில் கருத்து வேறுபாடு உருவாகும் அல்லது நீதி மன்றத்தில் வழக்கு பதியலாம். அரசு சார்ந்த ஒப்பந்தங்கள் கை நழுவிப்போகலாம். செவித்திறன் குறைதல், சீழ்வடிதல்போன்ற காது தொடர்பான நோய் பாதிப்பு தோன்றி மறையும். நரம்பு, வாதம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம்.புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள். ஒரு கடன் அடைவதற்குள் மறுகடன் உருவாகும் என்பதால் கவனம் தேவை.
பரிகாரம்:வெள்ளிக்கிழமை காலை 6 --7 சுக்ர ஓரையில் மல்லிகை மலர் அணிவித்து மகாலட்சுமியை வழிபட சீரான முன்னேற்றம் உண்டாகும்.
பண வரவு அதிகரிக்கும்
6ம் அதிபதி குரு 6ல் ஆட்சி பலம் பெறுவதால் விரும்பிய கடன் தொகை எளிதில் கிடைக்கும்.ராசிக்கு 2ம் இடமான தன ஸ்தானத்திற்கு குருப் பார்வை பதிவதால் வரா கடன்கள் வசூலாகும். பாலிசி முதிர்வுத் தொகை, பங்குச் சந்தை முதலீடு என பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். அடமானத்தில் இருந்த நகைகள் மீண்டு வரும்.சிலருக்கு அதிர்ஷ்ட வசமாக பிள்ளை இல்லாதவர்களின் உயில் சொத்து, அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். பாலிசி முதிர்வுத் தொகை, பங்குச் சந்தை முதலீடு என பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கையுண்டு. என்றோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு பல மடங்காக உயரும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மும்முனை போட்டியில் வெற்றி யாருக்கு?: தெலுங்கானாவில் நாளை சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு
சுரங்க தொழிலாளர்கள் மீட்பில் முக்கிய பங்காற்றிய "Rat-Hole Miners": யார் இவர்கள்?
காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது... மீனவர்களுக்கு எச்சரிக்கை...
செம்பரம்பாக்கம் ஏரியில் 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டது: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
தென்ஆப்பிரிக்கா தொடரில் விராட் கோலி விளையாடுவது சந்தேகம்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
