என் மலர்

  துலாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

  ஆங்கில ஆண்டு பலன் - 2022

  பிறரை எளிதில் வசீகரிக்கும் ஆற்றல் நிறைந்த துலா ராசியினருக்கு புத்தாண்டு நல்வாழ்த் துக்கள். இந்த ஆண்டில் பல வளமான பலன்கள் கிடைக்க உள்ளது. உங்கள் முயற்சிகளுக்கு நற்பலன் தேடி வரும். கடந்த கால நெருக்கடிகள் குறையும். இந்த ஆண்டில் குரு மற்றும் ராகு/கேதுக்களின் சஞ்சாரம் சுமாராகவே உள்ளது.

  4--ல் சுகாதிபதி சனி ஆட்சி பலம் பெற்றதால் இந்த ஆண்டு எதிர்பாராத முன்னேற்றங்கள் உண்டாகும். மன உளைச்சல் குறைந்து நிம்மதி அதிகரிக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை திட்டமிட்டு முறையாக பயன்படுத்தினால் இந்த புத்தாண்டு பொற்காலமாக அமையும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இனி புத்தாண்டு பலன்களை விரிவாகக் காணலாம்.

  குரு சஞ்சார பலன்: ஆண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் 13, 2022 வரை குருபகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆன்மீக நாட்டம் மிகுதியாகும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். வேதம் கற்கும் ஆர்வம் உண்டாகும்.சாஸ்த்திர ஞானம் அதிகரிக்கும். ஜோதிடம் கற்கும் ஆர்வம் வரும்.

  சமுதாய அந்தஸ்த்தை உயர்த்தக் கூடிய சங்கங்க ளில் முக்கிய நிர்வாகப் பதவிகள் தேடி வரும். இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். கைவிட்டுப் போன பூர்வீகச் சொத்து திரும்பி வரும். புனித ஸ்தலங்களுக்கு சென்று புனித நீராடுவார்கள். காசி ராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரை செல்வார்கள். எப்பொழுதும் யாருக்காவது ஏதேனும் உபதேசம் செய்து கொண்டே இருப்பார்கள். வாழ்வில் நடைபெற வேண்டிய அனைத்து சுப நிகழ்வுகளும் நடக்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபம் பெற்றுத் தரும். வலது பக்க வீட்டுக்காரரின் தொல்லை குறையும். உயர் கல்வி முயற்சி வெற்றி தரும். தந்தை வழி பூர்வீகச் சொத்து சில மனஸ்தாபங்களுக்கு பின் கிடைக்கும்.

  ஏப்ரல் 2022-ல் குரு பெயர்ச்சி யாகி 6ம் இடமாகிய மீனத்தில் ஆட்சி பலம் பெற்றப்பிறகு கடன், நோய் எதிரி தொல்லை மிகும். வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் ஏற்படும். எந்த செயலிலும் முடிவு எடுக்க முடியாமல் தடை, தாமதம், தடுமாற்றம், மன சஞ்சலம், மனக் குழப்பம் உண்டாகும்.

  வெளிநாட்டவர் தொடர்பு ஏற்படும். கடன் தொல்லை அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பாக எதிர்பாராத வம்பு, வழக்கு உருவாகும். சிலருக்கு கண் திருஷ்டி, எதிரி தொல்லை உண்டாகும். வீட்டில் வயது முதிர்ந்தவர்களுக்கு ஆரோக்கிய குறைபாடு இருக்கும். இளைய சகோதர வழியில் சில ஆதாயங்கள் கிடைக்கப் பெற்றாலும் அவரால் சில மன உளைச்சலும் ஏற்படும். ஞாபக சக்தி குறையும். முன்னோர் வழி சொத்தின் பங்கீடுகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. பங்காளிகளுடன் கருத்து வேறுபாடு மிகுதியாகி வழக்கு ஏற்படலாம். சிலருக்கு சொத்திற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால் பிரச்சனைகள் அதிகரிக்கும்.

  சனியின் சஞ்சார பலன்கள்: ஆண்டு முழுவதும் சனி பகவான் 4--ல் ஆட்சி பலம் பெறுவதால் தொழில் வேலை போன்ற ஜீவன அமைப்புகள் வலிமை பெறும். வாடகை வீட்டிலிருந்தவர்கள் கடன்பட்டாவது சொந்த வீடுகட்டுவீர்கள். சிலர் வீட்டை புதுப்பிப்பது, புதிய வாகனம் வாங்குவது என சொத்து தொடர்பான வேலைகள் செய்ய ஏற்ற நேரம். தாய்வழி பூர்வீகச் சொத்தை விற்று முழுப் பணமும் வந்து சேரும். விற்ற பணத்தில் தாயார் சகோதரருக்கு அதிக பங்கு கொடுப்பது மன உளைச்சலை அதிகமாக்கும். தாயாருக்கு ஆரோக்கிய குறைபாடு சீராகும்.

  சிலருக்கு உத்தியோகம் அல்லது தொழில் நிமித்தமாக தாயாரை பிரிந்து செல்ல நேரும். சொத்து வாங்குதல், விற்றல் தொடர்பான செயல்களில் அதிக கவனம் தேவை. சிலருக்கு நாய், பூனை, பறவைகள், மீன் என வீட்டு விலங்கு வளர்ப்பில் நாட்டம் உண்டாகும்.

  26. 2. 2022 முதல் 6. 4. 2022 வரை 2, 7-ம் அதிபதியான செவ்வாய் 4, 5-ம் அதிபதியான சனி பகவானுடன் 4ம் இடத்தில் இணைகிறார்கள். சனி செவ்வாய் பகை கிரகங்கள் என்பதால் தன வரவில் தடை தாமதம் இருக்கும். குடும்ப உறவுகளுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும். பேச்சால் குடும்பம் பிரியும். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்பவர்களுக்கு விவாகரத்து கிடைக்கும். தெளிந்த நீரோடையாக இருக்கும் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும்.

  கணவன், மனைவி கருத்து வேறுபாடு, அவர்களைச் சார்ந்த குடும்பத்தினருக்கு மன வேதனை தரும் விதத்தில் இருக்கும் என்பதால் விட்டுக் கொடுத்து வாழப் பழகவும். சிலருக்கு காதல் கலப்புத் திருமணம் நடைபெறும். சிலருக்கு வீடு, வாகன விற்பனையால் வில்லங்கம் உருவாகும். உடன் பிறந்தவர்களுடன் தாயை யார் பராமரிப்பது என்ற கருத்து வேறுபாடு அதிகரிக்கும். பக்கத்து வீட்டுக்காரர்கள், தெருவாசி களுடன் கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருக்கும். மிகுதியான விரக்தியால் சிலர் தர்ம சிந்தனையை ஒதுக்கி சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவார்கள். கலைத் துறையைச் சேர்த்த பெண்களுக்கு வாய்ப்புகள் தடைபடும் அல்லது சம்பளம் கிடைக்க கால தாமதம் உண்டாகும்.

  துலா ராசி ஆண்கள் காதலால் அசிங்கப்படுவர். குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். சிலர் குல ஆச்சாரங்கள் மற்றும் விரத நெறிமுறைகளை கடைபிடிக்க முடியாத சூழல் நிலவும்.

  ராகு/கேது சஞ்சார பலன்: ஏப்ரல் 12, 2022 வரை 2-ல் கேதுவும் 8-ல் ராகுவும் இருப்பதால் கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் உண்டாகும். பொதுவாக அசுப கிரகங்கள் மறைவு ஸ்தானத்திற்கு வரும்போது நன்மை செய்யுமென்பது ஜோதிட விதி. அதாவது 'கெட்டவன் கெட்டிட கிட்டிடும் ராஜ யோகம்'. வாரா கடன்கள் வசூலாகும். பாலிசி முதிர்வுத் தொகை, பங்குச் சந்தை முதலீடு என பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். தொழிலில் இருந்த மந்தநிலை மாறி சூடுபிடிக்கும். நீண்டநாட்களாக தீர்க்கமுடியாத வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். மூத்த சகோதரருடன் இருந்த பிணக்குகள் மாறும்.

  கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்த மூத்த சகோதர் மீண்டும் குடும்பத்துடன் சேர்வார். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கையுண்டு. தொழிலில் நல்ல முன்னேற்றமும் அபரிமிதமான வருமானமும் வரும். லாபத்தை மறுமுதலீடாக மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் நிலவிய தடை, தாமதங்கள் சீராகும். தடைப்பட்ட ஊதியம் மொத்தமாக வந்துவிடும். வேலையில் 'மெமோ' வாங்கியவர்களுக்கு மீண்டும் சேர உத்தரவு வரும். தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தந்தையால் ஆதாயமுண்டு. தடைப்பட்ட வாடகை வருமானம் மீண்டும் வரத் துவங்கும். ஒரு சிலருக்கு 2-வது திருமணம் நடைபெறும்.

  ஏப்ரல் 12-ல் ராசியில் கேதுவும், 7-ல் ராகுவும் மாறுகிறார்கள். ராசியில் உள்ள கேது உங்களின் செயல்பாடுகள் எண்ணங்களை சுத்தப்படுத்துவார். புகழ், அந்தஸ்து, கவுரவம் போன்ற லௌகீக இன்பங்க ளில் ஆர்வம் குறையும். ஆடம்பரத்தில் வாழ்க்கை மனம் வெறுக்கும். ஆனால் ஏழாமிட ராகுவால் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் உண்டாகும். தொழில் பங்குதாரர், கூட்டாளிகளை நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்காமல் நீங்களே முன்னின்று அனைத்து பணிகளையும் கவனிக்க வேண்டிய நேரம். பரம்பரை கூட்டுக் குடும்பத்தில் பிரிவினை ஏற்படலாம்

  அல்லது பரம்பரைக் கூட்டுத் தொழில் நிர்வாக கணக்கு வழக்குகளில் குளறுபடி செய்து பழியை உங்கள் மேல் திசை திருப்பலாம். தொழில் ஞானம் உழைக்கும் ஆர்வம் நிறைந்த நல்ல பங்குதாரரிடம் பகைமை உண்டாகும். குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதில் கில்லாடியான ஒரு புதிய கூட்டாளியை இணைவார். ஆருயிர் நண்பர்களுடன் ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு மனக்கசப்பு உண்டாகும். குடும்பத்தில் சம்பந்தம் இல்லாத மூன்றாம் நபரின் குறுக்கீடு இருக்கும்.

  திருமணம்: கோட்சார ராகு/கேதுக்களால் சர்ப்ப தோஷ தாக்கம் உள்ளது. ஜனன கால ஜாதக ரீதியாக குரு தசை நடப்பவர்களைத் தவிர பிறருக்கு கோட்சார ராகு/கேதுக்களால் திருமணம் தடைபடாது.

  மேலும் ராசிக்கு நான்கில் உள்ள சனியின் பத்தாம் பார்வை ராசிக்கு இருப்பதால் வரன் குறித்த தெளிவான முடிவு எடுக்க முடியாமல் நீங்களே நிறைய சிந்தித்து உங்களை குழப்பிக் கொள்வீர்கள். எது எப்படி இருந்தாலும் கோட்சார குரு கும்பத்தில் நிற்பதால் வரன் பற்றிய தெளிவான முடிவு எடுப்பீர்கள்.

  பெண்கள்: ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 2-ல் கேது இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தலை தூக்கும். அதை பெரிது படுத்தாமல் விட்டுக்கொடுத்தால் நாட்கள் சுமூகமாக நகரும். கருப்பை தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுக வேண்டும். கணவருக்கு ஆரோக்கிய குறைபாடு இருந்தால் சரியாகும். கணவன், மனைவி உறவு மகிழ்வைத் தரும்.

  விவசாயிகள்: விவசாயிகளுக்கு விளைச்சல் எதிர் பார்த்தபடி இருந் தாலும் விரும்பிய விலை படியாது. இந்த ஆண்டு விளைச்சலுக்கு போதிய மழை பெய்யும். பயிர்களை காப்பீடு செய்வதால் அரசின் ஆதாயம் பெற முடியும். விவசாயத்திற்குத் தேவையான தளவா டங்கள் வாங்கலாம். குத்தகைப் பணம் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும்.

  உத்தியோகஸ்தர்கள்: உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். வேலையில்லாமல் திணறிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அனுசரனையும் ஆதரவும் உண்டு. உங்கள் அலுவலக வேலை தொடர்பாக அடிக்கடி வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள்.

  முதலீட்டாளர்கள்/வியாபாரிகள்: புதிய தொழில் ஒப்பந்தம் மற்றும் ஆர்டர்கள் கிடைக்கும். தொழிற்சாலைகள்,சுய தொழில் நடத்துபவர்களுக்கு பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் முதலில் சோதனை கொடுத்தாலும் முடிவில் வெற்றியைத் தரும்.தொழிலுக்கு அரசு அதிகாரிகளின் தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும் என்பதால் மனம் தளரக்கூடாது.தொழில் சிறப்பாக நடக்கும்.வருமானம் வந்து கொண்டே இருக்கும்.கூட்டம் கூடும் ஆனால் கல்லா களைகட்டாது. அதிக பணப் புழக்கம் இருக்கும் கையில் பணம் தங்காது.

  அரசியல்வாதிகள்: தடைகள் விலகும். எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரும்.உங்கள் கனவுகள் நிறைவேறும் ஆனந்தமான நேரம். மக்களிடம் அமோக வரவேற்பு கிடைக்கும்.உங்களுக்கு தொல்லை கொடுத்த எதிர் கட்சியினர் விலகிச் செல்வார்கள்.வெளி உலகத்திற்கும்,கட்சி மேலிடத்திற்கும் தெரியாத உங்கள் மக்கள் சேவை தெரியத் தொடங்கும்.உங்களின் பெயரில் இருந்த புகார் மனுக்கள் ,ஊழல், தேர்தல் வழக்குகள் அனைத்திலும் சாதகமாக தீர்ப்பு வரும்.

  மாணவர்கள்: கல்வியில் தடைகள் தகரும்.அரியர்ஸ் பாடங்களை எழுதி பாஸ் பண்ண ஏற்ற நேரம். அரசு பொது தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் நாட்டின் சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தாமல் நன்றாக படித்து தேர்வுக்கு தயராகுங்கள்.சரியாக படிப்பு வரவில்லை என்றால் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான தொழிற்கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.

  சித்திரை 3, 4-ம்பாதம்: பூர்வீக நிலம், வீடு போன்றவற்றை விற்பதை ஒத்திவைத்தால் வீண் விரயம் தடுக்கப்படும். பங்குச் சந்தையில் எதிர்பாராத இழப்புகள் ஏற்படலாம்.

  உஷ்ணநோய்க்கு மருத்துவ சிகிச்சை செய்யநேரும். மன சஞ்சலத்தை தவிர்க்க 27 வாரம் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடவும்.

  சுவாதி: வெளிநாட்டு வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமாகும். காதல் திருமணம் கைகூடும். புத்திர பாக்கியம் உண்டாகும். இடப்பெயர்ச்சி செய்ய நேரும். இடர்களை தவிர்க்க ஞாயிறு மாலை 4.30- 6 மணி வரையான ராகு வேளையில் 9 நெய் தீபம் ஏற்றி சிவ வழி பாடு செய்யவும்.

  விசாகம் 1,2,3ம் பாதங்கள்: சொத்து வாங்கும் விற்கும் முயற்சியில் அதிக கவனம் தேவை.

  கணப்பொழுதில் தவறான பத்திரப் பதிவு, தவறான விலை நிர்ணயம், பூமி தோஷம் உள்ள இடம் , விருத்தியில்லாத வீடு போன்ற வில்லங்கத்தில் மாட்டி மீள முடியாத விரயத்தை தந்து விடும்.செவ்வாய்கிழமை வாராஹி அம்மனை வழிபட தொந்தரவுகள் அகலும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×