என் மலர்

  துலாம் - குருப்பெயர்ச்சி பலன்கள்

  துலாம்

  குருப்பெயர்ச்சி பலன்கள் 2023

  கலையார்வம் நிறைந்த துலாம் ராசியினரே இதுவரை ராசிக்கு 6ம்மிடத்தில் நின்ற குரு பகவான் ராசிக்கு ஏழாமிடம் செல்கிறார். அக்டோடர் 30, 2023 வரை மேஷ ராசியில் உள்ள ராகுவுடன் இணைகிறார். இந்த குருப்பெயர்ச்சி முழுவதும் சனியின் மூன்றாம் பார்வை பெற்று பலன் தரப்போகிறார்.

  சமசப்தம குருவின் பொது பலன்கள்:

  துலாம் ராசிக்கு 3, 6ம் அதிபதியான குருபகவான் வாழ்க்கைத் துணை, நண்பர்கள், கூட்டுத் தொழில் பற்றிக் கூறும் ஏழாமிடம் செல்கிறார்.வாழ்க்கைப் பயணத்தில் ஒரு சிலரின் வாழ்க்கை நிகழ்வுகள், கடவுளின் நேரடிகண்காணிப்பில் இருப்பது போல் தோன்றும். அவர்களைப் பார்த்து கொடுத்து வைத்தவர்கள் என்று கூறுவதுண்டு. இப்பொழுது இந்த குருப்பெயர்ச்சியில் கொடுத்து வைத்தவர்கள் துலாம் ராசியினர் என்றால் அது மிகையாகாது. ஏனெனில் நீங்கள் தன் பார்வை பலத்தால் கோடி புண்ணியம் தரும் குருபகவானின் நேரடி பார்வைக்கு செல்லப் போகிறீர்கள். இதை விட வேறு - என்ன வேண்டும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதையெல்லாம் அடைய வேண்டும் என்று லட்சியமாக நினைத்துக் கொண்டு இருந்தீர்களோ அந்த இலக்கை எட்டிப் பிடிக்க குருபகவான் அருளப்போகிறார்.

  அதுவும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சனியின் மூன்றாம் பார்வையில் சஞ்சரிப்பது மிகச் சிறப்பு. இதனால் உங்களுக்கு இருந்த பயம், வெறுமை, தனிமையுணர்வு அகலும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம், தைரியம் உண்டாகும். அதிர்ஷ்டம் கூரையைப் பிரித்துக் கொண்டு கொட்டப் போகிறது. அச்சுறுத்திய ஆரோக்கியத் தொல்லைகள் அகலும். இந்த ஓராண்டுக்குள் குரு பகவான் உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியே தீருவார்.

  எல்லாம் விதித்தபடி தான் நடக்கும் என்பது பொதுவான கருத்து. ஆனாலும் விதியை மதியால் வெல்ல முடியும் என்ற சூட்சுமமும் உலகை ஆண்டு கொண்டு தானே இருக்கிறது. விதியை மதியால் வெல்லும் கலையை குருபகவான் உங்களுக்கு அருளப்போகிறார்.

  குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்: ராசிக்கு பதினொன்றாமிடமான லாப ஸ்தானத்தில் குருவின் ஐந்தாம் பார்வை பதிகிறது. ஒருவருடை ஜாதகத்தில் குருபகவான் இரண்டு விதத்தில் பலன் தருவார். ஒன்று சுய ஜாதக ரீதியான பலன். இரண்டு கோட்சார ரீதியான பலன். சுய ஜாதக ரீதியான பலன்கள் வாழ்நாள் முழுவதும் சிறிதுசிறிதாக கிடைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் கோட்சார ரீதியான பலன்கள் சுபமோ, அசுபமோ ஓராண்டுக்குள் நடந்து முடியும்.இதுவரை உழைத்த உழைப்பிற்கான பலன் கூட்டு வட்டியோடு லாபமாக கிடைக்கப் போகிறது.. மூத்த சகோதர, சகோதரி சித்தப்பா மூலம் ஏற்பட்ட பாகப்பிரிவினை சுமூகமாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இழுத்து மூடும் நிலையில் உள்ள தொழில்கள் கூட விறுவிறுப்பாகும்.

  குருவின் ஏழாம் பார்வை பலன்கள்: ராசியில் குருவின் நேரடி ஏழாம் பார்வை பதிகிறது. இதனால் பேச்சிலே மிடுக்கு, நடையில் கம்பீரம், தோற்றத்தில் டாம்பீகம் உருவாகும். நடை, உடை, பாவனை மாறும். தகுதி, திறமை, வசதி எல்லாம் உயரும் .கடன் தொல்லையிலிருந்து நிரந்தர விடுதலை கிடைக்கும்.வராக்கடன்கள் வசூலாகும். தொழில் கூட்டாளிகளிடம் நிலவிய பகைமை மாறும். தொழில் முன்னேற்றம் கருதி ஒற்றுமையாக உழைப்பார்கள். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். சிலர் கூட்டுத் தொழிலில் இருந்து விடுபட்டு சுயமாக தொழில் துவங்கலாம். கணவன், மனைவி அன்பு பெருகும். ஈகோ காரணமாக விவாகரத்து வரை சென்ற தம்பதிகள் சேர்ந்து வாழக்கூடிய சூழல் அமையும். வாழ்க்கைத் துணைவி உங்கள் மனதை புரிந்து கொண்டு செயல்படுவார்கள். இல்வாழ்க்கை இனிமையாகும்.

  குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்

  ராசிக்கு மூன்றாமிட மான சகாய, வெற்றி ஸ்தானத்தில் குருவின் ஒன்பதாம் பார்வை பதிகிறது.உங்களின் எண்ணங்கள், முயற்சிகள் உயர்வானதாக இருக்கும்.நீண்ட காலமாக முடங்கி கிடந்த அனைத்து காரியங்களும் வெற்றியைத் தரும். ஞாபகசக்தி அதிகரிக்கும். அண்டை அயலாருடன் நிலவிய எல்லைத் தகராறுகள் முடிவுக்கு வரும்.சொத்துக்கள் விற்பனையால் ஆதாயம் உண்டாகும். பூர்வீகச் சொத்தில் நிலவிய சர்ச்சைகள் அகலும். சுகங்களும் சந்தோஷமும் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும். பொன், பொருள் ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். மன சஞ்சலத்தால் வேறு மதத்திற்கு மாறியவர்கள் மீண்டு சொந்த மதத்திற்கு மாறுவார்கள். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படும். நல்ல நம்பிக்கையான திறமையான வேலையாட்கள் கிடைப்பார்கள்.

  அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்-  22.4.2023 முதல் 21.6.2023 வரை

  கோட்சாரத்தில் ராசியில் சஞ்சரிக்கும் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் விலகிப் போன சொந்தங்கள் விரும்பி வருவார்கள். உங்களை விமர்சித்தவர்கள் கூட உண்மையான திறமை உணர்ந்து வாழ்த்துவார்கள். கவலை, கஷ்டங்கள் நீங்கி ஆனந்தம் அடைவீர்கள். மனதில் இருந்த பெரிய பாரம் விலகியது போன்று உணருவீர்கள். போதுமடா மனிதப் பிறவி என்று நொந்தவர்களுக்கு கூட வாழ வேண்டும் என்ற ஆசையும், வாழ்க்கையில் பிடிப்பும் உண்டாகும். புத்திர பிராப்தம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். துணிந்து சில முக்கிய முடிவுகளை எடுத்து வெற்றியை உறுதி செய்வீர்கள்.

  பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்-  22.6.2023 முதல் 17.4.2024 வரை

  ராசி மற்றும் எட்டாம் அதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும். முன்னேற்றத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும்.உடன் பிறந்தவர்கள், பெற்றோர்கள் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.தொழில், பங்குச் சந்தை, ரேஸ், லாட்டரி, கூட்டுத் தொழில் என பல வகையில் வருமானம் பெருகும். பொன், பொருள், வெள்ளி , ஆடை, ஆபரணம் வாங்குதல் என வாழ்வாதாரம் கூடும். வீடு வாங்குதல், வீடு கட்டுதல், இரண்டு, நான்கு சக்கரம் வாங்குதல் சுப செலவுகள் அதிகரிக்கும். உங்கள் மேல் இருந்த வம்பு, வழக்கு, கோர்ட் கேஸ் பிரச்சனைகள் சீராகும். இது வரை வெளிநாட்டு காற்றை சுவாசிக்காதவர்களுக்கு வெளிநாட்டிற்கு இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உள்ளது.

  கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்- 18.4.2024 முதல் 30.4.2024 வரை

  லாபாதிபதி சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் தொழில் முன்னேற்றம் ஏற்படும். வருமானமும் வாழ்க்கைத் தரமும் உயரும். சுப காரியப் பேச்சுக்கள் கைகூடும்.திடீர் பெயர் புகழலால் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசு சார்ந்த நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்க உங்கள் வீடு தேடி வருவார்கள். தொய்வு இல்லாத முயற்சியும் துவண்டு போகாத மனமும் உங்கள் முன்னேற்நத்தை அதிகரிக்கும். சிரமங்கள் குறையும்.

  குருவின் வக்ர பலன்கள் : 4.9.2023 முதல் 26.11.2023 வரை பரணி நட்சத்திரத்திலும் 27.11.2023 முதல் 31.12.2023 வரை அசுவினி நட்சத்திரத்திலும் குரு பகவான் வக்ரம் அடையும் காலத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். பிரச்சனைகள் படிப்படியாக அகலும்.செயல் திட்டங்களை முறைப்படுத்துவதில் உங்கள் திறமைகள் பளிச்சிடும். அறிமுகம் இல்லாதவர்களை நம்பக்கூடாது. சுய தொழில் எண்ணம் உருவாகும்.

  பெண்கள் : மாமியார், மருமகள் பிரச்சனையில் மனம் உடைந்தவர்களுக்கு நிம்மதியும், தெளிவும் பிறக்கும். கணவர் உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பார்.கடந்த காலத்தில் பட்ட கஷ்டத்திற்கு கடவுள் கண் திறந்து விட்டார் என்று மகிழ்வீர்கள். பிள்ளைகளின் திருமணம், உத்தியோகம் மகிழ்ச்சியை அதிகரிக்கும். குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உள்ளது. பொருளாதார குற்றம் விலகும்.

  மாணவர்கள் : ராசியை குரு பார்ப்பதால் படிப்பு வேண்டாமென்று கல்வியை கைவிட்ட மாணவர்களை மீண்டும் கல்வி கரம் கொடுக்கும். ஆசிரியர், சக மாணவர்களுடனான பகைமை மாறிடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். படித்த பாடம் மனதில் நன்றாக பதியும். உயர் ஆராய்ச்சி கல்வி மாணவர்களின் திறமை உலக அரங்கில் பேசப்படும்.

  உத்தியோகஸ்தர்கள் : ஆறாமிட குருவால் ஆட்டம் கண்ட உத்தியோகம் மீண்டும் சீராகும். அவரவர் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்த அரசு உத்தியோகம், வெளிநாட்டு வேலை, உள்ளூர் வேலை கிடைக்கும். குறைந்த உழைப்பில் மன நிறைவான வருமானம் கிடைக்கும். விரும்பிய பதவி உயர்வு, ஊதிய உயர்வு, இடமாற்றம் உண்டு. மேலதிகாரியால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். பணிபுரியும் இடத்தில் உற்சாகம் பொங்கும்.

  ராகு/கேது பெயர்ச்சி: அக்டோபர் 30,2023ல் ராசியில் உள்ள கேது பனிரெண்டாமிடம் செல்கிறார். ராகு ஆறாமிடம் செல்கிறார். ராகு/கேது ராசியில், ஏழாமிடத்தில் நின்ற காலத்தில் ஏற்பட்ட பங்கம் மறையும். அவமானம், மன சஞ்சலம் தீரும். கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கும்.

  பரிகாரம் : சம சப்தம குரு பனிரென்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும். இது மிக அருமையான கிரக பலம்.கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்தி வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். வியாழக்கிழமை குரு ஓரையில் 3 நெய் தீபம் ஏற்றி வழிபட லாபக் கடலில் நீந்துவீர்கள்.ஜென்ம நட்சத்திர நாளில் சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் தானம் கொடுத்து மகாலஷ்மியை வழிபட நிலையான முன்னேற்றம் உண்டாகும்.

  பிரசன்ன ஜோதிடர்

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  துலாம்

  குருப்பெயர்ச்சி பலன்கள் - 2023

  அன்பும் காதல் உணர்வும் மிகுந்த துலா ராசியினரே உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் குருபகவான் ஆட்சி பலம் பெறுகிறார். சனி பகவான் 4, 5ம் இடத்திலும், ராகு பகவான் 7ம் இடத்திலும் கேது பகவான் ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள். இதுவரை ராசிக்கு 5ம் இடத்தில் சஞ்சாரம் செய்த குருபகவான் ஆறாமிடமான ருண ரோக, சத்ரு ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். துலாம் ராசிக்கு 3, 6ம் அதிபதியான குரு 6ல் ஆட்சி பலம் போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.

  எதிரிகள் விலகுவார்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். ஒரு கடன் வாங்கி மற்றொரு கடனை அடைப்பீர்கள். உற்றார், உறவினர்கள் அல்லது தொழில், உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றும். உடன் பிறந்தவர்களுடன் பாகப் பிரிவினையில் முரண்பாடான கருத்துக்கள் தோன்றும். பத்திரப் பதிவு காலதாமதமாகலாம். இந்த பிரச்சனையில் தாயின் ஆதரவு உடன் பிறந்தவர்களுக்கு இருக்கும், அல்லது விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். சிலர் உடன் பிறந்தவர்களின் கடனுக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய நிலை ஏற்படும். முக்கிய தேவைகளுக்கு தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெறாமல் அரசுடைமை , அரசு அங்கீகாரம் பெற்ற வங்களில் கடன் பெறுவது சிறப்பு.

  உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை மிகுதியாக இருக்கும். குறைந்த சம்பளத்திற்கு அதிக நேரம் உழைக்க நேரும். சக ஊழியர்களுடன் மனக் கசப்பு உருவாகும். சிலருக்கு விருப்பம் இல்லாத ஊருக்கு வேலை மாற்றலாகும். அரசு ஊழியர்கள் இந்த ஓராண்டு காலம்கொடுக்கப்பட்ட வேலையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். முதலாளிகளுக்கு புதிய தொழில் முதலீடுகள் கிடைக்கும். வேலையாட்களிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். நம்பிக்கையான விசுவாசமான வேலையாட்கள் விலகலாம். 7ல் ராகு இருப்பதால் நல்ல தொழில் திறமையும், அனுபவமும் நிறைந்த நம்பிக்கையான தொழில் கூட்டாளிகள் விலகலாம். வெளிப்பார்வைக்கு அனுபவம்மிகுந்தவர் போலவும் தொழில் தந்திரம் தெரியாத புதிய கூட்டாளியுடன் நட்பு ஏற்படலாம்.

  யாரையும் நம்பி பணம் சம்பந்தபட்ட விஷயங்கள் மற்றும் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க கூடாது. தன விரயம் மிகுதியாக இருக்கும் என்பதால் எந்த விசயத்தையும் அனுபவஸ்தர்களின் ஆலோசனை கேட்டு செய்ய வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். பழக்கமில்லாத அறிமுகமில்லாத நபர்களுக்கு கடன் கொடுப்பதையும், கடன் பெறுவதையும் தவிர்க்க வேண்டும். அலைச்சல் அதிகரிக்கும். வீடு மாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம் என இடப்பெயர்ச்சி செய்ய நேரும்.அமைதியாக நிதானமாக திட்டமிட்டு செயல்பட்டால் இந்த ஒரு வருட காலத்தை எளிதில் கடக்க முடியும். சிலர் உயில் எழுதலாம் அல்லது எழுதிய உயிலில் திருத்தம் செய்யலாம். 6ல் குரு ஊரில் பகை என்ற பழமொழி இருந்தாலும் குருவின்பார்வையால் தொழில் ஸ்தானம் , விரய ஸ்தானம் . தன ஸ்தானம் பலம் பெறும். அபரிமிதமான சுப பலன்கள் உண்டு.

  குருவின் 5ம் பார்வை பலன்கள்:குருவின் 5ம் பார்வை 10ம்மிடமான கர்ம ஸ்தானத்தில் பதிகிறது. வாரிசு இல்லாதவர்களுக்கு கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். 10ம்மிடம் தொழில் ஸ்தானம் என்பதால் ஏற்கனவே வியாபாரத்தில் உள்ளவர்கள் தொழிலை விரிவு செய்ய புதிய தொழில் கிளைகள் உருவாக்க ஏற்ற காலம். அதற்கு தேவையான நிதி உதவிகள் கிடைக்கும்.பரம்பரை குலத்தொழில் செய்பவர்கள் தொழில் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும். தீட்டிய திட்டம் வெற்றி பெற திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். போட்டியாளர்கள் விலகுவார்கள். புதிய பாதை புலப்படும்.

  17.1.2023 வரை ராசி, 6, 10ம் இடத்திற்கு சனிப் பார்வை உள்ளது. ராசியில் கேதுவும் 7ல் ராகுவும் உள்ளார் பல புதிய தொழில் ஆர்வலர்கள் உருவாகுவார்கள். நன்கு பரிட்சயமான தொழிலை மட்டும்செய்யவும். புதியதடாலடியான முடிவுகள் எடுக்க கூடாது. வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். வேலை இழந்தவர்கள், பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் சந்தர்ப்பம் உண்டாகும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். சிலர் அதிக சம்பளத்திற்கு புதிய வேலையில் சேரலாம். சிலருக்கு ஓய்வு பெற்ற தந்தையின் வாரிசு வேலை கிடைக்கும்.

  குருவின் 7ம் பார்வை பலன்கள்: குருவின் 7ம் பார்வை 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் பதிவதால் சிலர் வாழ்நாள் முன்னேற்றத்திற்கு தொழில் வளர்ச்சிக்கு வெளிநாட்டிற்கு செல்லலாம். சிலர் ஒர்க் பிரம் ஹோமில் வெளிநாட்டு வேலை செய்யலாம். தம்பதிகள் உத்தியோகத்திற்காக வெவ்வேறு ஊர்களுக்கு செல்லலாம். எதிலும் நிதானத்துடன் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய காலம்.நம்பியவர்களே எதிரியாக, துரோகியாக மாறும் வாய்ப்பு உள்ளதால் அதீத விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். முயற்சிகள் கால தாமதமாக பலிதமாகும்.சிலருக்கு வீடு கட்டும் வாய்ப்பு அல்லது வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் பழைய வீட்டை புதிப்பிக்கலாம். சிலருக்கு நின்று போன வீடு கட்டும் பணி தொடரும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலம். சிலர் கண் அல்லது மூட்டு அறுவை சிகிச்சை செய்யலாம்.

  சிலர் மன நிம்மதிக்காக வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள் வீட்டிற்கு சென்று வரலாம். சிலர் பக்தி முத்தி ஆன்மீக தொண்டு, சேவை செய்யலாம். சிலர்கேதார்நாத், பத்ரிநாத் என ஆன்மீகச் சுற்றுலா சென்று வரலாம். சிலர் துக்கம் தாளாமல் சந்நியாசியாகலாம். சிலர் கடனுக்காக தலை மறைவாகலாம். எது எப்படி இருந்தாலும் நிம்மதியான தூக்கம் வரும்.

  குருவின் 9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம் பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் எவ்வளவு இழுபறியான நிலை இருந்தால் கூட குடும்ப உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள். இதுவரை எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தவர்கள் கூட வேலைக்கு செல்லும் முயற்சியில் ஈடுபடலாம். புதிய பொறுப்புகள் வந்து சேரும். தந்தை, தாயின் ஆரோக்கியம் சீராக இருக்கும். தாய், தந்தையின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் உற்றார், உறவுகள் சுப விசேஷங்கள் என குதூகலம் நிரம்பி இருக்கும். மனதை மகிழ்விக்கும் சம்பவங்கள் நடக்கும். உடன் பிறந்தவர்கள் பகை மறப்பார்கள். கூட்டுக் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். ஒருவர் சம்பாத்தியத்தில் தள்ளாடிய குடும்பம் பிள்ளைகள் சம்பாத்தியத்தால் தலை நிமிரும்.சிலர் உத்தியோகத்தில் இருந்து கொண்டு ஆன்லைனில் இன்னொரு வருமானம் ஈட்டலாம்.இல்லை என்ற நிலை இருக்காது.புதிய உறவுகளான மருமகள், மருமகன் கிடைக்கப் பெறுவீர்கள்.

  குருவின் வக்ர பலன்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை

  குரு பகவான் சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் நிறைந்த தன லாபம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். சிலருக்கு விரும்பிய ஊருக்கு பணி மாற்றம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும். முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். எப்பொழுதோ வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயரும். இட விற்பனையில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். விற்க முடியாத சொத்துக்கள் விற்கும். கடன் தொல்லையிலிருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். சகோதர, சகோதரிகள் வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம். அரை குறையாக நின்ற பணிகள் துரிதமாகும். எதிர் காலம் பற்றிய கவலைகள் அகலும். அண்டை அயலாருடன் ஏற்பட்ட எல்லைத் தகராறு சுமுகமாகும்.

  பெண்கள்:6ம் அதிபதி குரு 6ல் ஆட்சி பலம் பெறுவதால் எதையும் எதிர்கொள்ளும் தைரியமும், தெம்பும் அதிகரிக்கும். பற்றாக்குறை பட்ஜெட்டை உபரி பட்ஜெட்டாக மாறும்படி குடும்பத்தை நிர்வகிப்பீர்கள்.பணிபுரியும் இடத்தில் சம்பள உயர்வு கிடைக்கும்.

  பரிகாரம்: தினமும் மாலை 4.30 முதல் 6 மணிக்குள் சக்ரத் தாழ்வாரை வழிபட கடன், எதிரி தொல்லை குறையும். நோய்கள் அண் டாது.வெள்ளிக்கிழமை குத்து விளக்கு ஏற்றி லலிதா சகஸ்ஹர நாமம் படிக்க பொருள் வரவு அதிகமாகும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ×