என் மலர்
சிம்மம்
வார ராசிபலன் 6.7.2025 முதல் 12.7.2025 வரை
6.7.2025 முதல் 12.7.2025 வரை
அனைத்து இடையூறுகளும் விலகி, காரிய சித்தி உண்டாகும் வாரம். 13.7.2025 முதல் அடுத்த நான்கரை மாதங்களுக்கு சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கப் போவதால் அஷ்டம சனியின் தாக்கம் வெகுவாக குறையும். உங்கள் காரியங்களை தெளிவான மனநிலையோடு சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் தடைபட்ட சுப காரியங்கள் நடக்கும்.
மருத்துவச் செலவுகள், விரயங்கள் குறையும். அடிப்படை வாழ்வாதாரத்திற்கு போராடியவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். சக ஊழியர்களால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறைய துவங்கும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கி கணிசமான தொகையாகச் சேர்ந்து கிடைக்கும். வாடகை பணம், வராக் கடன்கள் வசூலாகும் வாய்ப்பு உள்ளது.
உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் தேவையில்லாத வீண் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். வாழ்க்கைத் துணை உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். அடமான நகைகள், சொத்துக்களை மீட்கக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. மற்றபடி விழிப்புடன் செயல்பட்டால் நன்மைகள் கூடி வரும். பவுர்ணமி அன்று சிவ வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406