என் மலர்

  சிம்மம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

  வார ராசிப்பலன்

  7.11.2022 முதல் 13.11.2022 வரை

  எண்ணங்கள் ஈடேறும் வாரம். விரய ஸ்தானத்தை சனி மற்றும் குரு பார்ப்பதால் சுப செலவுகள் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை தருவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி பணவரவும் சேமிப்பும் அதிகரிக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். விவசாயிகளுக்கு கிணறு வெட்டக் கடன் கிடைத்து வாழ்வாதாரம் உயரும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் மிகுதியாகும். வீடு மாற்றும் எண்ணம் நிறைவேறும். ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் கிரகணம் ஏற்படவுள்ளது.

  குழந்தை பாக்கியத்தில் தடை இருப்பவர்கள் அன்றைய தினம் குல தெய்வத்தை வழிபட்டால் பாக்கிய பலம் அதிகரிக்கும். உயர் கல்வி தொடர்பான முயற்சிகளை அன்று தவிர்க்கவும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலர் விலை உயர்ந்த பொருளை ஆன்லைனில் வாங்கி ஏமாறுவார்கள். அந்தணர்களுக்கு இயன்ற தானம் தர நல்ல வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் கூடி வரும். தந்தையின் ஆசிர்வாதம் பெறுவது மிக முக்கியம்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×