என் மலர்
சிம்மம்
இந்த வார ராசிபலன்
17.10.2022 முதல் 23.10.2022 வரை
சிக்கல்கள் மற்றும் சிரமங்களில் இருந்து விடுபடும் காலம். ராசி அதிபதி புதனை செவ்வாயும், குருவும் பார்ப்பதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.பொருளாதாரத்தில் நிலவிய ஏற்ற இறக்க மந்த நிலை மாறும். பூமி, மனை வாங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். பத்திரப்பதிவில் நிலவிய தடை தாமதங்கள் விலகும்.
5ம் அதிபதி சனி வக்ர நிவர்த்தி பெறுவதால் பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் தங்கம், வெள்ளி, அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாமல் வருந்தியவர்களுக்கு ஊதிய உயர்வு உண்டாகும். பெண்கள் ருசியான தீபாவளி பலகாரம் செய்து குடும்பத்தினரின் பாராட்டைப்பெறுவார்கள்.
சிலருக்கு சுய தொழில் பற்றிய ஆர்வம், எண்ணம் அதிகரிக்கும். திருமண முயற்சி சாதகமாகும். உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும்.வயோதிகர்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும். சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பால் அசவுகரியங்கள் ஏற்படும். நவகிரகங்களில் புதனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406