என் மலர்
சிம்மம்
வார ராசிபலன் 4.1.2026 முதல் 10.1.2026 வரை
4.1.2026 முதல் 10.1.2026 வரை
சிம்மம்
நெருக்கடிகள் விலகும் வாரம். ராசி அதிபதி சூரியன் குரு மற்றும் சனி பார்வையில் உள்ளார். தடை, தாமதங்கள் விலகும். மனச் சங்கடங்கள் அகலும். ஞாபக சக்தி அதிகரிக்கும். தைரியமும் தெம்பும் குடிபுகும். நினைப்பது எல்லாம் நடக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்ப உறவுகளின் அனுசரனையால் அனைத்து பிரச்சினைகளும் கானல் நீராக மறையும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். சிலருக்கு நிலம், வீடு போன்ற சொத்துச் சேர்க்கை உண்டாகும். சிலரது காதல் பிரிவினையில் முடியும்.வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட இடையூறுகள் குறையும்.
அதிக முதலீடு கொண்ட செயல்களை தற்காலிகமாக ஒத்தி வைப்பது நல்லது. வேலையில் பதவி உயர்வுகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. கை,கால், மூட்டு வலியால் சிலருக்கு சிறு அறுவை சிகிச்சைக்கும் வாய்ப்பு உள்ளது. பூர்வீகம் தொடர்பான விசயங்கள் விரைவில் முடிவிற்கு வரும். குடும்ப முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்து மகிழ்வீர்கள். சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள். முன் கோபத்தை குறைப்பது நல்லது. வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






