என் மலர்tooltip icon

    சிம்மம்

    வார ராசிபலன் 30.11.2025 முதல் 6.12.2025 வரை

    30.11.2025 முதல் 6.12.2025 வரை

    சிம்மம்

    சாதகமான வாரம். ராசி அதிபதி சூரியன் 4-ம்மிடமான சுகஸ்தானத்தில் சுகஸ்தான அதிபதி செவ்வாயுடன் சேர்ந்து இருக்கிறார். எதிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். தாராள தன வரவால் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வீட்டிலும் வெளி இடத்திலும் உள்ள நிலைமைகளை சமாளித்து வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் தேடி வரும்.

    புதிய சொத்துக்கள் சேரும். சொந்தத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பொறுப்புகள் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் ஆராய்ச்சி திறன் உயரும். உயர் கல்வி வாய்ப்புகள் தேடி வரும். தந்தையின் ஆசியுடன் குலதெய்வ அருள் கடாட்சம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த சாதகமான பலன்கள் நடக்கும்.

    விவசாயிகளுக்கு அரசாங்க உதவிகள் கிடைக்கும். 1.12.2025 அன்று இரவு 11.18 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீண் விரயங்கள் ஏற்படலாம். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு பஞ்சகவ்ய அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×