என் மலர்tooltip icon

    சிம்மம்

    வார ராசிபலன் (1.9.2024 முதல் 7.9.2024 வரை)

    1.9.2024 முதல் 7.9.2024 வரை

    ஆன்மபலம் பெருகும் வாரம்.ராசி அதிபதி சூரியன் ஆட்சி. ஆன்ம பலம் பெருகி தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரம் பெருகும். புதிய தொழில் கூட்டாளி மற்றும் தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணியில் இருப்பவர்கள் விரைந்து செயல்படுவதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டு பெற முடியும். புதிய சொத்து வாங்கும் முயற்சி கைகூடும்.சொத்துக்களின் பராமரிப்புச் செலவு அதிகமாகும். பிள்ளைகளுக்கு நடைபெற வேண்டிய சுப காரியம் நடக்கும்.சில தம்பதிகள் தொழில், உத்தியோக நிமித்தமாக பிரிந்து வாழலாம்.

    தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நேரம். வக்ர சனியின் பாதிப்பால் சிறு சோர்வு, அசதி அலுப்பு அவ்வப்போது தோன்றி மறையும். பெண்கள் வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவார்கள். திருமணத்திற்கு நல்ல வரன் கூடி வரும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு நிற்பதாலும் முக்கியமான பணிகளை பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைக்க கூடாது. குடும்பத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.பச்சை கற்பூரம் அபிசேகம் செய்து விநாயகரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×