என் மலர்
சிம்மம்
வார ராசிபலன் 15.3.2026 முதல் 21.3.2026 வரை
சிம்மம்
இழந்த இன்பம் மீண்டும் கிடைக்கும் வாரம். லாப ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு பகவான் வக்கிர நிவர்த்தி பெறுவதால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். எந்த நன்மையை எழுதுவது, எந்த நன்மையை விடுவது என்றே தெரியவில்லை. எனவே அஷ்டமச் சனியை நினைத்து பயப்படாமல் உங்கள் கடமையில் கவனமாக இருந்தால் எண்ணங்களும் லட்சியங்களும் நிறைவேறும் உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிலரின் மேல் இருந்த வீண் பழி விலகும். வேலையில் இடமாற்றம் உண்டாகும்.
வேலைப்பளு அதிகமாகும். மனதிற்கு இனிமை தரும் இடமாற்றங்கள் கிடைக்கும். சிலருக்கு தாய்மாமாவால் வீண் செலவு அல்லது கடன் உருவாகும். 18.3.2026 அன்று இரவு 11.36 முதல் 21.3.2026 அன்று காலை 2.28 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தோல் அலர்ஜி, அரிப்பு போன்ற சிறிய உடல் உபாதைகள் இருக்கும். சிலருக்கு எதிர் கால நன்மைக்காக பூர்வீகத்தை விட்டு வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் எண்ணம் மேலோங்கும். அமாவாசையன்று முன்னோர்களை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






