என் மலர்
சிம்மம்
வார ராசிபலன் 11.1.2026 முதல் 17.1.2026 வரை
11.1.2026 முதல் 17.1.2026 வரை
சிம்மம்
தேவையற்ற கடனை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் 6ம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். விரக்தி மனப்பான்மை அதிகமாகும். ஆனால் குருவின் பார்வை பட்ட இடங்கள் பல மாற்றத்தையும் ஏற்றத்தையும் தரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. எந்தக் கை உங்களை விட்டாலும் நம்பிக்கையை விடாமல் இருப்பது முக்கியம். புதிய முதலீடுகளை தவிர்த்தல் நலம். பார்க்கும் வேலையை மாற்றக்கூடாது. சிலருக்கு அசையாச் சொத்து, பிள்ளைகளின் திருமணம், கல்வி போன்ற சுப விரயம் உண்டாகும்.
திறமையான வேலையாட்கள் இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். தன லாப அதிபதி புதனால் பணப் புழக்கம் சரளமாக இருக்கும். சீட்டு, ரேஸ், பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். சில தம்பதிகள் தொழில் அல்லது உத்தியோகத்திற்காக பிரிந்து வாழலாம். பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டாகும். ஆரோக்கியம் அதிகரிக்கும். படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






