என் மலர்

  சிம்மம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

  இந்த வார ராசிப்பலன்

  9.1.2023 முதல் 15.1.2023 வரை

  சுப காரியங்கள் கைகூடும் வாரம். ராசி அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் தன, லாப அதிபதி புதனுடன் இணைவதால் முறையான முன்னோர்கள் வழிபாட்டால் தடைபட்ட சுப காரியங்கள் கைகூடும். பொருள் கடனும், பிறவிக் கடனும் தீரும். ஆன்ம பலம் பெருகும். சிலருக்கு கவுரவப்பதவிகள் கிடைக்கும். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தை பிரிந்து வாழ்ந்த தந்தை மீண்டும் குடும்பத்துடன் இணைவார்.

  நண்பர்களால், தொழில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். விரும்பிய சலுகைகள் கிடைக்கும். தீராத கடனைத் தீர்க்கும் வழி தென்படும். எதிரி தொல்லைகள் குறையும். திருமண முயற்சிகள் கைகூடும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். தொட்ட காரியங்கள் துலங்கும்.

  நிலுவையில் உள்ள தொகைகள் கைக்கு வந்து சேரும். மந்தமான தொழில் சூடு பிடிக்கும். தேங்கி கிடந்த பொருட்கள் விற்பனையாகும். தொழில் ரீதியான போட்டிகளை சமாளிக்க முடியும். பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. ஞாயிற்று கிழமை சிவ வழிபாடு செய்ய நன்மைகள் இரட்டிப்பாகும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×