என் மலர்

  சிம்மம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

  இந்த வார ராசிப்பலன்

  6.3.2023 முதல் 12.3.2023 வரை

  லாபகரமான வாரம்.ராசி அதிபதி சூரியனும் தன லாப அபதி புதனும் ராசியை பார்ப்பதால் சிறிய உழைப்பில் நல்ல வருமானம் கிடைக்கும். நிலையான வருமானத்திற்காக புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.பழைய கடன்கள் வசூலாகும். ஆடம்பர விருந்துகளில் கலந்துகொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சியாக ஆரவாரத்துடன் பொழுதைக் கழிப்பீர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.

  யோகாதிபதி செவ்வாய் ராசியை பார்ப்பதால் பிடிவாதமாக எந்தக் காரியத்தையும் முயற்சி செய்து அதில் வெற்றியும் பெறுவீர்கள். அரசுத் துறை வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் வெற்றி உறுதி. பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும்.

  மாணவர்களுக்கு கல்வியில் ஏற்றம் உண்டாகும். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். பாக்கிய ஸ்தான ராகுவால் லவுகீக விசயங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தை வழியில் இருந்த பிரச்சினைகள் சங்கடங்கள் விலகி மகிழ்ச்சி உண்டாகும். மாசி மகத்தன்று சிவனுக்கு பன்னீர் அபிசேகம் செய்து வழிபடவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×