என் மலர்

    சிம்மம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo

    இந்த வார ராசிப்பலன்

    24.10.2022 முதல் 30.10.2022 வரை

    உள்ளம் மகிழும் சுப நிகழ்வுகள் இல்லத்தில் நடைபெறும் வாரம். யோக அதிபதி செவ்வாய் தனம் வாக்கு ஸ்தானத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும்.

    ராசி அதிபதி சூரியன் 3,10-ம் அதிபதி சுக்ரனுடன் இணைந்து நீச்ச பங்க ராஜயோகம் அடைவதால் சகோதர சகோதரிகளிடையே நிலவிய மனப் போராட்டம் அகலும். பாகப் பிரிவினையில் நல்ல முடிவு எடுக்கப்படும். புதிய திட்டங்கள், முயற்சிகள் செயல் வடிவம் பெறும்.நினைத்தது நிறைவேறி நிம்மதி பிறக்கும்.

    பயணங்களும் சுப விரயங்களும் ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். தொழில் பங்காளிகளை சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். தடைபட்ட உயர் கல்வி வாய்ப்பு கூடி வரும்.பிள்ளைகளால் மகிழ்சியும் பெருமையும் உண்டாகும். சிலர் கடன் பெற்று சொந்தத் தொழில் துவங்கலாம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். சூரிய கிரகணத்தன்று கோதுமை தானம் வழங்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×