என் மலர்

    சிம்மம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo

    இந்த வார ராசிப்பலன்

    22.5.2023 முதல் 28.5.2023 வரை

    கடன் சுமை குறையும் வாரம்.ராசி அதிபதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தொழில் ஸ்தான அதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்தில் நிற்கிறார். பலவிதமான கிரகங்கள் சிம்ம ராசிக்கு சாதகமாக இருப்பதால் தடைபட்ட எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.

    மனதில் தைரியம் கூடும். சுயநம்பிக்கை உண்டாகும். செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். உத்தியோகஸ்தர் களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.புதிய முதலீடுகள் செய்யும் ஆர்வம் அதிகரிக்கும்.

    பொருளாதார நிலை மிக மிகச் சிறப்பாக இருக்கும். கடன் சுமை குறைந்ததால் வீட்டில் இன்பம் நிலைத் திருக்கும். குடும்பத்தில் வீண் செலவுகளை குறைத்து பணத்தை சேமிப்பது பற்றிய முயற்சிகள் எடுக்கப்படும். கல்வியில் பிள்ளைகளின் தேர்ச்சி உங்களை பெருமை கொள்ளச் செய்யும். உடல் ஆரோக்கியம் சிறக்கும். ஞாயிற்றுக்கிழமை நெய் தீபம் ஏற்றி சிவனை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×