என் மலர்

  சிம்மம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

  இந்த வார ராசிப்பலன்

  13.2.2023 முதல் 19.2.2023 வரை

  கொள்கை பிடிப்போடு செயல்படும் வாரம். ராசி அதிபதி சூரியன் தன் வீட்டைத் தானே பார்ப்பதால் ஆன்ம பலம் பெருகும். தொழிலில் நினைப்பதொன்று, நடப்பதொன்றுமாக இருந்த நிலை மாறும். ஏழாம் அதிபதி சனியுடன் சூரியன்இணைவதால் கணவன்-மனைவி ஒற்றுமை பெருகும்.கருத்து வேறுபாட்டால் பிரிந்த கணவன்-மனைவி மீண்டும் இணைந்து குடும்பம் நடத்துவார்கள்.

  திருமண வயதில் இருப்பவர்களுக்கு மனதில் நினைத்தது போன்று சிறப்பான நல்ல வரன்கள் தேடி வரும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், மூலம் ஆதாயம் உண்டாகும். உத்தி யோகஸ்தர்களுக்கு பணி நிரந்தரமாகும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்தவர்களுக்கு சாதகமான பதில் உண்டு.

  மனதிற்கு இனிமை தரும் இடமாற்றங்கள் கிடைக்கும்.தோல் அலர்ஜி, அரிப்பு போன்ற சிறிய உடல் உபாதைகள் இருக்கும்.பெண்களுக்கு குழந்தைகள் நலனில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களின் மனமறிந்து நடந்து கொள்வார்கள். சிவராத்திரியன்று பஞ்சாமிர்த அபிசேகம் செய்து சிவனை வழிபடுவது நல்லது.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×