என் மலர்

  சிம்மம் - சுபகிருது வருட பலன்

  கடகம்

  சுபகிருது வருட பலன் - 2022

  சுய கவுரவம் காப்பதில் வல்லவர்களான சிம்ம ராசியினருக்கு தமிழ் புத்தாண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள்.

  உங்கள் ராசிக்க 9ம் இடமான பாக்கியஸ்தானத்தில் ராகுவும், சகாய ஸ்தானமான 3ம் இடத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்கிறார்கள்.குருபகவான் 8ம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். சனி பகவான் 6,7ம் இடத்தில் உலா வருகிறார். குருபகவான் நின்ற 8ம் வீட்டு பலனாக விபரீத ராஜ யோகம் உண்டாகலாம். 8ம்மிடம் என்பதால்நிதானமற்ற செயல்களால் சில வம்பு வழக்குள் ஏற்படலாம். ஆனால் குரு பார்த்த இடத்தின் பலன்கள் உங்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும்.

  இதனால் லட்சியமும், எண்ணங்களும் நிறைவேறும். 3ல் கேது சஞ்சரிப்பதால் மனம்விரும்பும் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில முக்கிய திருப்பங்கள் உங்கள் வாழ்வில் உண்டாகும். 9ல் ராகு நிற்பதால் புகழ், அந்தஸ்து, கவுரவம், பொன், பொருள், செல்வம், செல்வாக்கு என எல்லாவிதமான பாக்கிய பலன்களும் உண்டு. சிலருக்கு மதம் மாறும் எண்ணம் அதிகரிக்கும். சிலருக்கு ஆன்மீக நாட்டம் குறையும். ஆறாம் அதிபதி சனி ஆறில் ஆட்சி பலம் பெறுவதால் எதிர்களின் தொல்லை குறையும்.

  குடும்பம்: இரண்டாமிடமான குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் குடும்பத்திற்கு கோடி நன்மைகள் உண்டாகும். ஒரே வீட்டில் வசித்தும் ஒருவருடன் மற்றொருவர் பேசாமல் ஆளுக்கொரு தீவாக மொபைலுடன் வாழ்ந்த நிலை மாறும். குடும்பம் மகிழ்ச்சியாக மாறும் வகையிலான சம்பவங்கள் நடக்கும். அனைவரும் விட்டுக் கொடுத்து இயல்பாக வாழ்வீர்கள். ஈகோ குறையும். சொல்வாக்கால் செல்வாக்கு உயரும். குடும்ப சந்தோஷமாக இருக்கும். கூடி வாழ்வதால் உண்டாகும் நன்மைகளை உணர்வீர்கள். உங்களுக்கு பேரன், பேத்தி யோகம் கிடைக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப நிகழ்வுகள் நடக்கும். வேற்று மொழி பேசுபவர்களள், வேற்று மதத்தின வரின் நட்பு மற்றும் உதவிகள் கிடைக்கும்.

  ஆரோக்கியம்:ஆறாம் அதிபதி சனி 6ல் ஆட்சி பலம் பெறுவதால் சிலருக்கு முன்னோர்களின் பரம்பரை வியாதியான கை, கால் வலி, சுகர், பிரஷர் போன்றவைகள் தலை தூக்கும்.ஆரோக்கியத்தில் கவனம் தேவை.நேரத்திற்கு சத்தான உணவாக நன்றாக சாப்பிட்டு ஒய்வெடுத்தால் எந்த வியாதியும் அண்டாது.வெளி உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

  திருமணம்: சிம்ம ராசியினருக்கு திருமணத்திற்கான சாத்தியக் கூறுகள் குறைவு. மேலும் ஏழாம் அதிபதி சனி கோட்சாரத்தில் 6ல் ஆட்சி பெற்று இருப்பதால் வெகு சிலருக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தடை இருக்கலாம். 5ம் அதிபதி குரு 8ல் ஆட்சி பலம் பெறப் போவதால் சிலர் காதல் திருமணத்தால் அவமானப்பட வாய்ப்பு உள்ளது. ஜனன கால ஜாதகத்தில் 8ம் இடம் சுத்தமாக இருந்து , தசா புத்தி சாதகமாக இருப்பவர்களுக்கு கோட்சார குருவால் எந்த பாதிப்பும் இருக்காது.

  பெண்கள்:கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். மனதிற்கும் நிம்மதியும் தன் நம்பிக்கையும் தரும் நிகழ்வுகள் நடக்கும். குடும்பச் சுமை சற்று கூடுதலாக இருக்கும். உங்கள் பெயரில் சொத்து வாங்கும் யோகம் உள்ளது.பிறந்த வீட்டு சொத்தில் கிடைத்த பங்கு புகுந்த வீட்டில் உங்களை கவுரவப்படுத்தும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பிள்ளைகளின் நலனில் அதிக கவனம்செலுத்துவீர்கள்.ஆயுள், ஆரோக்கியம் சிறக்கும்.எட்டாமிடமான மாங்கல்ய ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

  மாணவர்கள்:3ல் ராகு 9ல் கேது இருப்பதால் சில மாணவர்களுக்கு ஞாபக சக்தி குறையுலாம். படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு தடைபட்ட கல்வியை மீண்டும் தொடர வாய்ப்பு கிடைக்கும். சில பிள்ளைகள் பள்ளி, கல்லூரியை மாற்றலாம். தினமும் ஹயக்கீ வரை வழிபட படித்த பாடம் நன்றாக மனதில் பதியும். உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி கற்க விரும்புபவர்களுக்கு நல் வாய்ப்பு உண்டாகும்.

  உத்தியோகஸ்தர்கள்: மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். இயன்றவரை வேலையை மாற்றம் செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம். ஒப்படைக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் எளிதில் முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். வெளியூர், வெளிநாட்டு வேலை வாய்ப்பை விரும்பியவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் ஆரம்பமாகிவிட்டது.

  முதலீட்டாளர்கள்:பூர்வீக குலத் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமான பலன் உண்டு. வழக்கத்தைவிட உபரி வருமானம் அதிகளவில் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கூட்டுத் தொழில் நல்ல வளர்ச்சி அடையும். சனி மற்றும் குருவின் நிலைகள் சற்று சாதகமற்று இருப்பதால் புதியதாக தொழில் தொடங்குபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

  அரசியல்வாதிகள்:லட்சியத்தையும், கொள்கையையும் விடாது பின்பற்றுவீர்கள் தொட்டது துலங்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். கட்சியில் புதிய பொறுப்புகள், பதவிகள் கிடைக்கும்.நிறைய அலைச்சலும், விரயச் செலவும் உண்டாகும்.

  கலைஞர்கள்: ஒரு சில நேரங்களில் சின்ன சின்ன சங்கடங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் சமாளித்து விடுவீர்கள். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். மனமும், உடலும் உற்சாகமாக இருக்கும்.

  விவசாயிகள்: விவசாயத்தில் புதிய நுட்பங்களை பயன்படுத்துவீர்கள். மிகுதியான லாபம் கிடைக்கும். சிலர் குத்தகைக்கு விவசாய நிலம் பெறுவீர்கள். சிலர் சொந்தமாக விவசாய நிலம் வாங்குவீர்கள்.4ம் இடத்தில் கேது இருந்த காலத்தில் ஏற்பட்ட இழப்பை இந்த ராகு/கேது பெயர்ச்சி உங்களுக்கு வழங்கும். வாய்க்கால், வரப்பு தகராறை மத்தியஸ்தர்கள் மூலம் தீர்க்கவும்.

  கவனமாக செயல்பட வேண்டிய காலம்

  ராகு/கேது: 21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார். 18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் 9ல் ராகுவும் 3ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு உண்டாகும். பூர்வீகச் சொத்து பிரிப்பதில் சகோதரரிடம் கருத்து வேறுபாடு உண்டாகலாம்.உயில் பிரச்சனை தலை தூக்கும்.

  ஒரு சிலர் உயில் எழுதுவார்கள். எழுதிய உயில், ஆவணங்களில் சிலர் திருத்தம் செய்வார்கள். பாகப்பிரிவிதையில் மன பேதம் மிகுதியாகும். கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து சிலர் தனிக் குடித்தனம் செல்லலாம். அதிக வேலையினால் மனஅழுத்தம் அதிகமாகும். மனதில் கலக்கம் தோன்றும். ஞாபக சக்தி குறையலாம் சிலர் தொழிலை ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு மாற்றலாம். சிலர் பழைய வேலையை விட்டு புதிய வேலைக்கு செல்லலாம்.

  குரு:29.7.2022 முதல் 23.11.2022 வரை ராசிக்கு 6ல் சஞ்சரிக்கும் சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் தேவையற்ற வம்பு வழக்கை தவிர்க்க வேண்டும்.தொலைந்த, திருடு போன, கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும். நம்பிக்கையான, விசுவாசமான வேலை ஆட்கள் கிடைப்பார்கள்.

  பரிகாரம்:ஞாயிறு காலை 6 --7 மணி வரையான சூரிய ஒரையில் வில்வ அர்ச்சனை சிவ வழிபாடு செய்து வர நன்மைகள் அதிகரிக்கும்.

  தொழில் வளர்ச்சி சிறக்கும்

  தன ஸ்தானமான இரண்டாமிடத்திற்கு குருவின் 7ம் பார்வை இருப்பதால் பொருளாதாரத்தில் தடையில்லாத வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள், நண்பர்களின் உதவி பக்க பலமாக இருக்கும். தொழில் வளர்ச்சி நல்ல லாபத்தை பெற்றுத் தரும். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள், உணவுத் தொழில் நடத்துபவர்களுக்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். 6ல் சனி பகவான் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் விரும்பிய கடன் தொகை கிடைக்கும். விரய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வீடு, வாகனம், பிள்ளைகளின் திருமணம் என சுப செலவுகள் மிகுதியாக இருக்கும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×