என் மலர்

  சிம்மம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

  கடகம்

  ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - 2023

  12.4.2022 முதல் 30.10.2023 வரை

  ஒன்பதில் ராகு/ மூன்றில் கேது

  ராஜயோகம் நிரம்பிய சிம்ம ராசியினரே ராகு/கேதுக்கள் 9,3ம் இடத்திலும் கேதுவும், குருபகவான் 8, 9ம் இடத்தில் சனி பகவான் 6,7ம் இடத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

  ஒன்பதாமிட ராகுவின் பலன்கள்:ராகு 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுவது சற்று ஆறுதலான விசயம் தான். லட்சியமும், எண்ணங்களும் நிறைவேறும். மனம் விரும்பும் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். புகழ், அந்தஸ்து, கவுரவம், பொன், பொருள், செல்வம், செல்வாக்கு என எல்லாவிதமான பாக்கிய பலன்களும் உண்டு. வெளியூர், வெளிநாட்டு வேலை வாய்ப்பை விரும்பியவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் ஆரம்பமாகிவிட்டது. உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி படிக்க முயற்சிப்பவர்களுக்கு நல் வாய்ப்பு உண்டாகும். உங்களுக்கு பேரன், பேத்தி யோகம் கிடைக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப நிகழ்வுகள் நடக்கும்.

  சிலருக்கு ஆன்மீக நாட்டம் குறையும். சிலர் கடவுள் என் சட்டைப்பையில் என புது ஆன்மீகவாதியாக உருவெடுப்பார்கள். சிலருக்கு முன்னோர்களின் பரம்பரை வியாதியான கை, கால் வலி, சுகர், பிரஷர் போன்றவைகள் தலை தூக்கும். மற்றபடி இந்த காலகட்டத்தில் குரு அஷ்டமத்தில் ஆட்சி பலம் பெறுவதால் தேவையற்ற வம்பு வழக்கை தவிர்க்க வேண்டும். சனியின் சஞ்சாரம் திருமணத் தடையை அகற்றும். ராகு மேஷ ராசியில் உள்ள நட்சத்திரப் பாதங்களான கிருத்திகை, பரணி, அசுவினி நட்சத்திரங்களில் மூலம் ராசியை கடக்கிறார்.

  12.4.2022 முதல்14.6.2022 வரை ராகுவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்:ராகு ராசி அதிபதி சூரியனின் நட்சத்திரமான கிருத்திகையில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உருவாகும். ஆன்ம பலம் பெருகும். உங்களை துரத்திய அசிங்கம், அவமானம் , அதிர்ஷ்டக்குறைபாடு இருந்த இடம் தெரியாது. அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும். மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும். சூரியனே ஆத்மகாரகன். தந்தைக்கும் காரகனாவார். பூர்வ புண்ணியத்துக்கு காரகன் என்பதால் முன்னோர்களில் நல் ஆசிகள் உங்களை சிறப்பாக வழி நடத்தும். சூரியன் ராகு சம்மந்தம் கிரகண தோஷம் என்பதால் தந்தை தொழில் அல்லது உத்தியோக நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்வார்.சிலர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களின் பிடியில் கவுரத்திற்காக வழியச் சென்று அகப்படுவார்கள். சிலரின் பெயர் புகழுக்கு களங்கமும் உண்டாகும்.

  15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:சுக்ரனின் நட்சத்திரமான பரணி சிம்மத்திற்கு 3,10ம் அதிபதி. மனதில் திடமான சிந்தனைகள் தோன்றும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான ஆரோக்கிய கேடுகளை அறுவை சிகிச்சையால் சரி செய்யும் நேரம். தொலைந்து போன, திருடு போன, கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள், நண்பர்களின் உதவி பக்க பலமாக இருக்கும். சரியான திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவீர்கள். தடைபட்ட நல்ல முயற்சிகள் துரிதமாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நம்பிக்கையான, விசுவாசமான வேலை ஆட்கள் கிடைப்பார்கள். புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். ஏற்றுமதி இறக்குமதி தொழில், அழகு, ஆடம்பர பொருட்கள், வாசனை திரவியங்கள், பூக்கள், மதுபானம் விற்பனை செய்பவர்களுக்கு தொழிலில் பிரமாண்ட வளர்ச்சி உண்டாகும்.

  21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்:ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் கோட்சார கேதுவின் நட்சத்திரத்தில் ராகுவின் பயணம். அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு உண்டாகும். பூர்வீகச் சொத்து பிரிப்பதில் சகோதரரிடம் கருத்து வேறுபாடு உண்டாகலாம்.

  கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து சிலர் தனிக் குடித்தனம் செல்லலாம். வாழ்க்கைத் துணை அல்லது நண்பர்களிடம் இருந்து எதிர்பாராத வெளிநாட்டு பரிசுகளும் அன்பளிப்புகளும் கிடைக்கும். அதிக வேலையினால் மனஅழுத்தம் அதிகமாகும். மனதில் கலக்கம் தோன்றும்.

  ஞாபக சக்தி குறையலாம். கடன் தொகையை சமாளிக்க தேவையான பொருள் உதவி கிடைக்கும். இளைய சகோதரருக்கு திருமணம் நடக்கும். கிரடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் கிஜிவி கார்டுகளை கவனமாக கையாள வேண்டும். கமிஷன் அடிப்படையான தொழில், தரகு, தகவல் தொடர்பு, ஊடகங்களில் பணிபுரிபவர்களுக்கு தொழில் பெயர், புகழ் கிடைக்கும்.

  மூன்றாமிட கேதுவின் பலன்கள்:மூன்றாமிடம் என்பது உப ஜெய ஸ்தானம் . வெற்றி , புகழ் இளைய சகோதரம், வீரம், மனபலம்,தைரியம், வீரிய ஸ்தானம் போன்றவற்றைப்பற்றி கூறும் இடம். தார்மீக உணர்வுடன் செயல்படுபவர்களுக்குவெற்றியும் புகழ் மதிப்பு, மரியாதை கிடைக்கும். சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்களுக்கு வெற்றி கை நழுவும், புகழும் மரியாதையும் குறையும். மூன்றாம் அதிபதி சுக்கிரனின் வீட்டில் கேது என்பதால் சுய ஜாதகத்தில் சுக்ரன் பலவீனமாக இருந்தால் பெண்களால் ஆண்களுக்கு மன சங்கடம் ஏற்படும். சுக்ரன் வலு பெற்றவர்களுக்கு புதிய பெண்ணின் நட்பு கிடைக்கும்.

  தைரியம் மிகுதியாக இருக்கும். மனபலம், நிம்மதி கூடும்.ஞாபக சக்தி அதிகரிக்கும். ஒரு சிலர் உயில் எழுதுவார்கள். எழுதிய உயில், ஆவணங்களில் சிலர் திருத்தம் செய்வார்கள். பாகப்பிரிவிதையில் மன பேதம் மிகுதியாகும். முதலீடு இல்லாத கமிஷன் அடிப்படையிலான தொழில் புரிபவர்கள், ஆன்லைன் வர்த்தகர்களுக்கு தொழில் வளர்ச்சி நல்ல லாபத்தை பெற்றுத் தரும். சிலர் மன அமைதி மற்றும் நிம்மதிக்காக தீர்த்த யாத்திரை செல்வார்கள். இல் வாழ்க்கையில் பற்று குறையும். வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் போகியத்திற்கு வீடு பிடித்து செல்லலாம். சிலர் தொழிலை ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு மாற்றலாம். சிலர் பழைய வேலையை விட்டு புதிய வேலைக்கு செல்லலாம்.

  உழைப்பவர் நீங்களாக இருந்தால் ஊதியம் பெறுபவர் வேறொருவராக இருப்பார்கள். நவீன தகவல் தொடர்பு சாதனங்களான வாட்ஸ் அப்,பேஸ்புக் போன்றவற்றை முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்துவது நல்லது. கேது துலாம் ராசியில் உள்ள விசாகம், சுவாதி, சித்திரை நட்சத்திரங்கள் மூலம் தன் பயணத்தை செலுத்துகிறார்.

  12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்:விசாகம் குருவின் நட்சத்திரம். குரு சிம்மத்திற்கு 5,8ம் அதிபதி. அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் இணைந்து விபரீத ராஜ யோகத்தை தரும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பணவசதி சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகழ்வீர்கள். உங்கள் முயற்சி, எண்ணங்கள் பலிதமாகும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். வீடு வாகன யோகம் சிறப்பாக அமையும். செல்வ செழிப்பில் மிதப்பீர்கள். குழந்தைகளின் கல்வி ஆர்வம், முன்னேற்றம் மன நிம்மதி தரும். சிலருக்கு தவறான நட்பால் வம்பு வழக்கு உருவாகும்.

  18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்:ராசிக்கு 9ல் சஞ்சாரம் செய்யும் ராகுவின் நட்சத்திரத்தில் கேது பயணிக்கும் காலம். மனிதனை லௌகீக வாழ்வில் ஈடுபட செய்வது ராகு என்றால் மோட்சத்தை தருவது கேது பகவான். உலக வாழ்வில் பற்றற்ற நிலையை அடையச் செய்யும் பக்தி மார்க்கத்தில் மனம் லயிக்கும். பாவம், புண்ணியம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பணக்காரனாக வாழ வேண்டும் என்ற ஆசை குறையும். அதே நேரத்தில் இறைவனைத் தவிர வேறு யாரிடமும் கையேந்தாத வரம் வேண்டும் பிரார்த்திப்பீர்கள். மறு ஜென்மம் இல்லாமல் மோட்சத்தை பெற தான, தர்மங்கள் செய்வீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஞானத்திற்கும் மோட்சத்திற்கும் வழி இருக்கிறதா என்ற சிந்தனை மேலோங்கும்.

  27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்:செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை சிம்மத்திற்கு 4,9ம் அதிபதி. பிள்ளைகளால் ஏற்பட்ட மன சங்கடங்கள் குறையும். தீய பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள். பாக்கிய பலத்தால் அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். ரியல் எஸ்டேட் தொழில் துறையினருக்கு அபிவிருத்தி உண்டு. பரம்பரை குலத் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் புதிய மாற்றமும் ஏற்றமும் உண்டு. தந்தையின் பூர்வகச் சொத்து உங்கள் பெயரில் பட்டா போடப்படும். விற்க முடியாமல் கிடக்கும் பல வருடங்களாக கிடந்த சொத்துக்கள் விற்கும். புரோகிதர்கள், ஜோதிடர்கள், டூரிஸ்ட் தொழில், ஆடிட்டர்களுக்கு நல்ல வருமானம் உண்டாகும். தீர்த்த யாத்திரை, மகான்களின் நல்லாசிகள் கிடைக்கும்.

  நல்லது, கெட்டது இரண்டும் அவரவரின் செயலைப் பொறுத்ததுதான். இறைவனை சரணாகதி அடையும் போது எல்லா நல்ல நாட்களாகவே அமையும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×