என் மலர்

  சிம்மம் - குருப்பெயர்ச்சி பலன்கள்

  கடகம்

  குருப்பெயர்ச்சி பலன்கள் - 2022

  நிர்வாகத் திறன் மிகுந்த சிம்ம ராசியினரே ராசிக்கு 8ல் குருபகவான் ஆட்சி பலம் பெறுகிறார். 3ல் கேது,9ல் ராகுவும், சனி பகவான் 6,7ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.

  8ம்மிட குருவின் பொதுபலன்கள்: சிம்ம ராசிக்கு குரு 5,8ம் அதிபதி. 5ம்மிடம் என்பது பூர்வ ஸ்தானம், புகழ், கீர்த்தி, அந்தஸ்து, கவுரவம் குழந்தைகள் பற்றிக் கூறுமிடம். பூர்வ புண்ணியாதிபதி குரு ஆட்சி பலம் பெறுவது சிறப்பு. எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உருவாகும். ஆன்ம பலம் பெருகும். மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும்முன்னோர்களில் நல் ஆசிகள் உங்களை சிறப்பாக வழி நடத்தும். குல தெய்வ அனுகிரகம் உண்டாகும். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் கருத்தரிப்பார்கள்.பிள்ளைகள் தொழில், ஊத்தியோகத்திற்காக குடும்பத்தை விட்டு வெளியூர் செல்வார்கள். செய்யும் தொழிலில் முன்னேற்றம், தாராள பணப் புழக்கம், பெரிய மனிதர்களின் ஆதரவு உண்டாகும். குல தெய்வ வழிபாட்டில் அதிக ஆர்வம் ஏற்படும்.

  8ம்மிடம் என்பது ஆயுள் வம்பு, வழக்கு ஆகியவை பற்றிக் கூறுமிடம். அதனால்அஷ்டமாதிபதி வலுக்கக் கூடாது என்ற பயமும் இருக்கத்தானே செய்யும். 8ம் இட குருவிற்கு சனி பார்வையும் இருப்பதால்எட்டாம் பாவக பலன்களான அவமானம், கடனால் கவலை, கணவன் மனைவி பிரிவினை அல்லது வழக்கு, பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும். உங்களை துரத்திய அசிங்கம், அவமானம் , அதிர்ஷ்டக் குறைபாடு இருந்த இடம் தெரியாது. அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும்.

  உங்களுக்கு சம்பந்தம் இல்லாத பிறர் பணம், அன்பளிப்பு, சீதனம் எதிர்பாராத தன லாபம், லாட்டரி, ஆயுள் காப்பீடு, திடீர் அதிர்ஷ்ட உயில் சொத்து போன்ற எதிர்பாராத தன வரவு குடும்பத்திற்குகிடைக்க வாய்ப்பு உள்ளது. உயிருக்கு ஆபத்தை தரும் நோய்களுக்கு சிகிச்சை செய்பவர்களுக்கு நோயிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கும். சிலருக்குநீண்ட காலம் மருந்து சாப்பிட வேண்டிய நோயால் சிறு அவஸ்தைகள் இருந்தாலும்நித்திய கண்டம் பூரண ஆயுள் . ஆயுள் தீர்க்கம் .எவ்வளவு நோய் தாக்கம் இருந்தாலும் ஆயுளுக்கு பங்கம் இல்லை. நடப்பதெல்லாம் கனவா? என்று நினைக்க தோன்றும் வகையில் முன்னோர் வழி சொத்தில் இருந்த வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும்.

  ஜனன கால ஜாதகத்தில் 8ம்மிடத்துடன் சம்பந்தம் பெறும்தசை நடப்பவர்கள் தனிமையாக, வெளிநாட்டிற்கு சென்று கஷ்டப்படும் நிலை ஏற்படும். சிலர்தொழில் அல்லது உத்தியோக நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியூர் அல்லது வெளிநாடு செல்வார்கள். சிலர்கற்பனையில், கனவில் வாழ்வார்கள். நடந்ததை நினைத்து மனம் வருந்துவார்கள் அல்லது நடக்காததை நடப்பது போல் நினைத்து பயப்படுவார்கள். சிலரின் பெயர் புகழுக்கு களங்கமும் உண்டாகளாம். பூர்வீகம்தொடர்பானபிரச்சனைகள் தலை தூக்கும். உங்களின் சகோதர, சகோதரி வழியில்சொத்து தொடர்பான வில்லங்கம் ஏற்பட்டு மன உளைச்சல் உண்டாகலாம். சிலருக்கு பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம்.

  5ம் பார்வை பலன்கள்: குருவின் 5ம் பார்வை 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் பதிகிறது. வீட்டில் மங்களகரமான சுப நிகழ்வுகள் நடக்கும். இல்லத்து விசேஷம் மற்றும் குழந்தைகளின் நலனுக்காககடன் வாங்க நேரலாம். பழைய கடனை அடைக்கபுதியகடன் வாங்க நேரும். முறையான அரசு அங்கீகாரம் பெற்ற வங்கிகளில்கடன் வாங்குவது சிறப்பு . உடனடியாகபணம் கிடைக்கிறது என்பதற்காக நீட்டியஇடங்களில் கையெழுத்து இட்டு முறையற்ற நிதி நிறுவன வங்களிடம் கடன் வாங்குவது வீண் அவமானத்தை தேடித் தரும்.

  "பதறாத காரியம் சிதறாது " முறையான திட்டமிடல் சங்கடங்களை தீர்க்கும்.யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும். ஆவணங்களை படித்து பார்த்து கையெழுத்துப்வேண்டும். வெற்றுப் பத்திரம், வெற்று காசோலைகளில் கையெழுத்து இடுவதை தவிர்த்தல் நலம்.முன்னோர்கள் சொத்து அடமானத்தின் பேரில் கடன் பெறநேரும். எவ்வளவுமன அழுத்தம் இருந்தாலும் படுத்தவுடன் தூக்கம்வரும். படுத்தவுடன்தூக்கம்பெரிய வரப்பிரசாதம்.நிம்மதியான தூக்கத்தை குருபகவான்இந்த குருப் பெயர்ச்சி உங்களுக்கு வழங்கும்.

  7ம் பார்வை பலன்கள்: குருவின் 7ம் பார்வை 2ம்மிடமான தன ஸ்தானத்திற்கு இருப்பதால் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் வலுப்பெறுகிறது. தன வரவில் ஏற்பட்ட தடைகள் அகலும். முக்கிய குடும்ப தேவைகள் நிறைவடையும். இல்லை என்ற நிலை இனி இல்லை. உழைப்பிற்கு ஏற்றவருமானம்நிச்சயம் உண்டு. அதனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகஇருக்கும். குடும்பத்திலிருந்த பல விதமான குறைபாடுகள் சீரடையும். பொருளாதார நிலை சாதகமாக உள்ளதால் ஏற்றத் தாழ்வுகளை கட்டுப்படுத்த முடியும். பொருள் தேடுவதற்காக ஆளுக்கொரு திக்கில் சிதறிய குடும்பம் ஒன்று சேரும். திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில் நெருங்கிய ரத்த பந்த உறவுகளைக் கண்டவுடன் மனம் லயிக்கும்.உங்களின் 2ம் அதிபதி புதன் என்பதால் இயல்பிலேயே நகைச்சுவை பேச்சுத்திறன் கொண்ட உங்களைதர்க்க வாதங்களில் யாரும் வெல்ல முடியாது. பேச்சாற்றலால்உங்களின்காரியங்களை சாதிக்க முடியும். சுவையான உணவு வகைகளை உண்பதில் விரும்பம் மிகும்.

  9ம் பார்வை பலன்கள்:குருவின் 9ம் பார்வை ராசிக்கு 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் பதிகிறது. பூமிகாரகனான செவ்வாயின் தொழிலான ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும்.கட்டுமானத் துறையில் உள்ளவர்களின் திறமை பாராட்டப்படும். கால்நடைகளான ஆடு, மாடு, கோழி மற்றும் உயிரினம் வளர்ப்பவர்கள் பண்ணையாளர்கள் தொழிலில் சாதனை படைப்பார்கள். தொட்டது துலங்கும்.

  என்றோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு பல மடங்காக உயரும். புதிதாக சொத்து வாங்குபவர்களுக்கு எதிர்காலத்தில் பல மடங்கு மதிப்பு உயரக்கூடிய இடத்தில் சொத்து அமையும். இதுவரை வாடகைக்கு போகாமல் இருந்த சொத்திற்கு நல்ல வாடகைதாரர் கிடைப்பார்.தொல்லை கொடுத்த பழைய வாடகைதாரர் இடத்தை காலி செய்வார். பலருக்கு வாகன யோகம் பலிதமாகும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாடகை வீட்டில் இருந்தவர்கள்சொந்த வீட்டிற்கு மாறுவார்கள். வீடு,வாகன யோகம் பலிதமாகும். கடன் பெற்றாவது வீடு, வாகன யோகம்கிடைக்கப் பெறுவீர்கள். இதுவரை விற்க முடியாமல் கிடந்தஅசையாச் சொத்துக்கள் விற்று விடும். பல தலைமுறையாகவிற்காமல் கிடந்த குடும்ப சொத்து கூட விற்று விடும்.

  வக்ர பலன்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு வக்ரம் அடையும் காலத்தில் 6ம் அதிபதி சனியின் பார்வையும் 8ம் இடத்திற்கு இருப்பதால் குருவின் வக்ர காலத்தில்தொழில் உத்தியோகம் தொடர்பான வம்பு வழக்குகள் ஏற்படலாம். முடிந்த வரைவம்பு வழக்கை தவிர்க்க வேண்டும். ஏதேனும்காரணத்திற்காககோர்ட் கேஸ் பிரச்சனை வந்தால்வழக்கை நிலுவையில் வைக்க வேண்டும் அல்லது மத்தியஸ்தர்களிடம் சென்றுசமாதானம்பேச வேண்டும். ஏற்கனவே உங்களுக்கு எதிராக உள்ள வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு எதிராக வரலாம். குரு இந்த காலகட்டத்தில் உங்களின் நண்பன் யார்? எதிரி யார்? என்பதை அடையாளம் காட்டி விடுவார். தனிமையை விரும்ப செய்வார்.

  பெண்கள்:2ம்மிடமான குடும்ப ஸ்தானத்திற்கும் 12ம்மிடமான அயன சயன ஸ்தானத்திற்கு குருப்பார்வை இருப்பதால் கணவர் உங்கள் மேல் அன்பை பொழிவார்.தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கணவரின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தவும். கோட்ச்சாரத்தில் உங்களின் 9ம் அதிபதி செவ்வாய் பலம் பெறும் காலத்தில் மாங்கல்ய சரடு மாற்றினால் கணவரின் ஆயுள், மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும்.கணவர் மற்றும் புகுந்த வீட்டாருடன் வீண் வாக்கு வாதத்தை தவிர்க்கவும்.

  பரிகாரம்: வெற்றிலை, பாக்குடன் கல்கண்டு வைத்து வெள்ளி கிழமை இஷ்ட, குலதெய்வம், மகாலட்சுமி வழிபாடு செய்தால் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் மகான் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவரை வழிபட மனக் குறை நீங்கும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×