என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 7 ஜனவரி 2025

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாள்வது நல்லது. தொழிலில் உங்கள் கருத்துகளை கூட்டாளிகள் ஏற்றுக்கொள்ள மறுப்பர். உடல்நலனில் கவனம் தேவை.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 6 ஜனவரி 2025

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். கைமாற்றாகக் கொடுத்த பணத்தை வாங்க முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 5 ஜனவரி 2025

    எதையும் யோசித்து செய்ய வேண்டிய நாள். நீங்கள் நன்மை செய்தாலும் அது தீமையாக தெரியும். வரவைவிடச் செலவு அதிகரிக்கும். வழக்குகள் புதிதாக தேடிவரும். தடைகள் அதிகரிக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 4 ஜனவரி 2025

    இனிய சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். மற்றவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதால் உங் கள் மதிப்பு உயரும். அன்னிய தேசத்தொடர்பு அனுகூலம் தரும். முக்கிய புள்ளிகளால் முன்னேற்றம் கிடைக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 3 ஜனவரி 2025

    அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். தொழிலில் உதிரி வருமானங்கள் உண்டு. புதிய மனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும். தொழிலில் ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 2 ஜனவரி 2025

    சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 1 ஜனவரி 2025

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். விட்டுப்போன பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நண்பர்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணைபுரிவர்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 31 டிசம்பர் 2024

    பொன்னான நாள். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் லாபம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் இருமடங்காகலாம். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 30 டிசம்பர் 2024

    பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும் நாள். தொழில் போட்டிகளை சமாளிப்பீர்கள். வழிபாட்டில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள். பணியாளர் தொல்லை அகலும். கல்யாண முயற்சி கைகூடும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 29 டிசம்பர் 2024

    கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள் திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. வீடு, வாகனப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 28 டிசம்பர் 2024

    வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்தும் நாள் விடியும் பொழுதே வியக்கும் செய்திகள் வந்து சேரும். உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 27 டிசம்பர் 2024

    கொடுக்கல் வாங்கல்களில் கூடுதல் லாபம் உண்டு. உங்கள் யோசனைகளைக் கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவர். புதிய நிறுவனங்களிலிருந்து உத்தியோகத்திற்கான அழைப்புகள் வரலாம்.

    ×