என் மலர்tooltip icon

    மிதுனம்

    வார ராசிபலன் 4.1.2026 முதல் 10.1.2026 வரை

    4.1.2026 முதல் 10.1.2026 வரை

    மிதுனம்

    தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெறுகிறார். எடுக்கும் முயற்சியில் தடையில்லாத வெற்றி கிட்டும். அதிர்ஷ்டமும், யோகமும் கூடி வரும். பண வரவு பல வழிகளில் வரும். கோட்சார கிரகங்கள் அனைத்தும் மிதுன ராசியினருக்கு சாதகமாக உள்ளது. இதனால் ஆன்ம பலம் பெருகி ஆரோக்கியத் தொல்லை குறையும். தாய், தந்தையரின் விருப்பங்களையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றுவீர்கள்.

    கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும். உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். பெண்களுக்கு தாய்வழி ஆதரவும், சீதனமும் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். மூத்த சகோதரம், சித்தப்பா மூலம் பொருள் உதவி கிடைக்கும். தாய் அல்லது தந்தையின் அரசாங்க வாரிசு வேலை கிடைக்கும். சுவாமி ஐயப்பனை ஆத்மார்த்தமாக வழிபடவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×