என் மலர்
மிதுனம்
வார ராசிபலன் 28.12.2025 முதல் 3.1.2026 வரை
28.12.2025 முதல் 3.1.2026 வரை
மிதுனம்
தடைபட்ட காரியங்கள் துரிதமாகும் வாரம். ராசி அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெற்று சனி பார்வையில் இருக்கிறார். வாழ்க்கையை நடத்துவதில் இருந்த சிரமங்கள் உங்களுடைய முயற்சியால் சீராகும். பயம் என்பதே இருக்காது. தைரியசாலியாக இருப்பீர்கள். கடுமையாக உழைப்பீர்கள். குடும்ப சிக்கல்கள், மற்றும் சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள்.
கடந்த கால கடன்களைத் தீர்த்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும். பணம் சம்பாதிக்கும் சிந்தனையுடனே இருப்பீர்கள். பண வரவில் முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறவுகளின் அனுசரனையால் அனைத்து பிரச்சினைகளும் கானல் நீராக மறையும். பருவ வயதினர் மண நாளை எண்ணலாம்.
மனதும், உடலும் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு குறையும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைத்து குடும்பத்துடன் இணையும் வாய்ப்புள்ளது. உடன் பிறந்தவர்கள், பங்காளிகளிடம் அனுசரித்துச் சென்றால் பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலை அதிகரிக்கும். நடராஜருக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






