என் மலர்
மிதுனம்
வார ராசிபலன் 15.3.2026 முதல் 21.3.2026 வரை
மிதுனம்
உற்சாகமாக சுறுசுறுப்பாக செயல்படும் வாரம். ராசியில் ஜென்ம குருவாக வக்கிரகதியில் நின்று பலன் கொடுத்த குரு பகவான் வக்ர நிவர்த்தி பெற்று முழு பலனையும் கொடுக்க உள்ளார். ஆன்ம பலம் பெருகும். நினைப்பதொன்று, நடப்பதொன்றுமாக இருந்த நிலை மாறும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், மூலம் ஆதாயம் உண்டாகும். உத்தியோ கஸ்தர்களுக்கு பணி நிரந்தரமாகும். இந்த காலகட்டத்தில் எந்த விதமான கடனுக்கு முயற்சி செய்தாலும் நிச்சயம் கைகூடும்.
எதையும் சமாளிக்கும் ஆற்றல் பெறுவீர்கள். பங்குச் சந்தை ஆதாயம் பெருகும். காதல் திருமண முயற்சி வெற்றி தரும். பல வருடங்களாக தடைபட்ட திருமணம், பேசி நிச்சயித்து நின்று போன திருமணங்களும் நன்றாக நடைபெறும்.16.3.2026 அன்று மாலை 6.14 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கடன், ஜாமீன் போன்ற விசயங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும். வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். அமாவாசை அன்று வயது முதிர்ந்தவர்களின் தேவையறிந்து உதவவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






