என் மலர்tooltip icon

    மிதுனம்

    வார ராசிபலன் 11.1.2026 முதல் 17.1.2026 வரை

    11.1.2026 முதல் 17.1.2026 வரை

    மிதுனம்

    குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும் வாரம். ராசி அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெறுகிறார். வார இறுதி நாளில் அஷ்டம ஸ்தானம் செல்கிறார். உங்கள் செயலில் ஆற்றலும், வேகமும் கூடும். முக்கிய கடமைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். உடலிலும் மனதிலும் புதிய தெம்பு, உற்சாகம் பிறக்கும். மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். சிலர் பயன்படாத சொத்துக்களை விற்று லாபம் பார்க்கலாம். தன யோகம் சிறப்பாக அமையும்.

    சமூக அந்தஸ்து அதிகரிக்கும். குடும்பத்தில் சுபமங்கள விரயச் செலவு உண்டாகும். திருமண முயற்சி விரைவில் நிறைவேறும். பெண்கள் புதிய ஏலச் சீட்டு தொடங்குவார்கள். குழந்தைப்பேறு உண்டாகும். நண்பர்கள், உடன் பிறந்தோர் நட்பும், நல்லுறவும் ஏற்படும். தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் சீராகும். குல தெய்வத்தின் அருள் கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். கணவன், மனைவியிடம் நல்ல புரிதல் உண்டாகும். புதன்கிழமை கருடாழ்வாரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×